Advertisment

18 வயதுக்குட்பட்ட 30 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம், 20 லட்சம் பேர் பயன்படுத்தும் கஞ்சா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
30 lakh under-18s consume alcohol, 20 lakh use cannabis Ministry of Social Justice and Empowerment reports - 18 வயதுக்குட்பட்ட 30 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள், 20 லட்சம் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்

30 lakh under-18s consume alcohol, 20 lakh use cannabis Ministry of Social Justice and Empowerment reports - 18 வயதுக்குட்பட்ட 30 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள், 20 லட்சம் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்

பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கைப்படி, நாட்டில் 10-17 வயதுக்குட்பட்ட 1.3  சதவீதத்தினர், அதாவது 30 லட்சம் நபர்கள் மது அருந்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

அதே வயதினரில், 20 லட்சம் பேர் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர், இது 0.9 சதவிகிதம் ஆகும். 40 லட்சம் பயனர்கள் (1.8 சதவீதம்) ஓபியாய்டுகளைப் பயன்படுத்துகின்றனர். தூக்க மருந்து பயன்படுத்துபவர்கள் மற்றும் inhalant பயனர்கள் முறையே 20 லட்சம் (0.58 சதவீதம்) மற்றும் 30 லட்சம் (1.17 சதவீதம்) என்ற புள்ளி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆம்பெடமைன்-வகை தூண்டுதல்கள் (ஏடிஎஸ்) பயனர்கள் (0.18 சதவீதம்), தொடர்ந்து 2 லட்சம் கோகோயின் பயனர்கள் (0.06 சதவீதம்) மற்றும் 2 லட்சம் பேர் ஹால்யூசினோஜன்கள் (0.07 சதவீதம்) பயன்படுத்துகின்றனர்.

publive-image

18-75 வயதுக்குட்பட்ட நபர்களில், ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் 15.1 கோடி (17.10 சதவீதம்). 2.9 கோடி கஞ்சா பயன்படுத்துபவர்கள் (3.30 சதவீதம்), 1.9 கோடி ஓபியாய்டு பயன்படுத்துபவர்கள் (2.1 சதவீதம்), 1.1 கோடி மயக்க மருந்துகள் பயன்படுத்துபவர்கள் (1.21 சதவீதம்), 60 லட்சம் inhalant பயன்படுத்துபவர்கள் (0.58 சதவீதம்), ஹால்யூசினோஜன் பயன்படுத்துபடுவர்கள் (0.13 சதவீதம்), மற்றும் 10 லட்சம் கோகோயின் பயன்படுத்துபவர்கள் (0.11 சதவீதம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment