உலகளவில் பல்வேறு தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள், கூடுதல் டோஸ் கோவிட்-19 க்கு எதிராக நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, நான்கு டோஸ்கள் கடுமையான நோய்களுக்கு எதிராக மூன்று டோஸை விட அதிக பாதுகாப்பை வழங்குவதாகக் கண்டறிந்துள்ளது. இந்தியா பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை(மூன்றாவது) டோஸ் செலுத்தி வருகிறது.
இஸ்ரேல் தடுப்பூசி இயக்கம்
இஸ்ரேலில் இந்தாண்டு ஜனவரி 2 முதல், 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு 4ஆம் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. Pfizer BioNTech நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்துகிறது.
இந்த ஆய்வு, ஜனவரி 10 முதல் மார்ச் 10 வரை ஓமிக்ரான் மாறுபாட்டின் தாக்கம் அதிகமாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் முடிவு, தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 12.5 லட்சம் பேரின் இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத் தரவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.
உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று மற்றும் கடுமையான கோவிட் விகிதம் நான்காவது டோஸுக்குப் பிறகு 8 நாள்களில் ஏற்படுகிறது. இது மூன்று டோஸ் மட்டுமே பெற்ற நபர்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது, 3 முதல் 7 நாட்களுக்கு முன்பு நான்காவது டோஸைப் பெற்ற நபர்களிடையே உள்ளது.
முடிவுகள்
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று மற்றும் கடுமையான கோவிட்-19 விகிதங்கள், மூன்று டோஸை காட்டிலும் நான்காவது டோஸுக்குப் பிறகு குறைவாக இருந்தன. உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறுகிய காலமாகத் தோன்றியது. ஆனால், கடுமையான நோய் தொற்று எதிரான பாதுகாப்பு நீடித்தது.
100,000 நபர்-நாட்களில் கடுமையான கோவிட்-19 வழக்குகளின் சரிசெய்யப்படாத எண்ணிக்கையானது, நான்கு டோஸ்களைப் பெற்றவர்களில் 1.5 பேர், மூன்று டோஸ்களைப் பெற்றவர்களில் 3.9 பேர் மற்றும் உள் கட்டுப்பாட்டுக் குழுவில் 4.2 பேர் ஆகும். சரிசெய்கையில், நான்காவது டோஸுக்குப் பிறகு, நான்காவது வாரத்தில் கடுமையான கோவிட் விகிதம் மூன்று-டோஸ் செலுத்தியவர்களிடம் இருந்ததை விட காரணி 3.5 மடங்கு குறைவாகவும், உள் கட்டுப்பாட்டுக் குழுவில் காரணி 2.3 குறைவாகவும் இருந்தது.
நான்காவது டோஸுக்குப் பிறகு 6 வாரங்களுக்கு கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்பு குறையவில்லை. சரிசெய்யப்பட்ட விகிகத்தில், மூன்று-டோஸ் குழுவை விட காரணி 2.0 குறைவாக இருந்துள்ளது. உள் கட்டுப்பாட்டு குழுவில் காரணி 1.8 குறைவாக இருந்துள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பு சில வாரங்களில் குறைந்துவிட்டதாக ஆய்வு கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.