பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள் என்ன?

அம்ரிந்தர் தோல்வி அடைந்த இடங்களில் சன்னி வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் குமார் ஜக்கார் தெரிவித்துள்ளார்.

Punjab Chief Minister Charanjit Singh Channi

Manraj Grewal Sharma

Punjab Chief Minister Charanjit Singh Channi : க்ளிஷேவை மன்னியுங்கள். ஆனால் க்ரீடம் அணிந்திருக்கும் தலை கனமாக தான் இருக்கும். தன்னுடைய ஞானத்திற்காக நன்கு அறியப்பட்ட, அடிப்படை உறுப்பினரில் துவங்கி வளர்ந்து, , ஆளும் காங்கிரஸ் கோஷ்டிவாதத்தில் சிக்கியிருக்கும் நேரத்தில், மக்களின் கோபத்தை சம்பாதித்திருக்கும் நேரத்தில், அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நடைபெற வெறும் 4 மாதங்களே இருக்கின்ற நிலையில் பஞ்சாபின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சரண்ஜித் சிங் சன்னி. பஞ்சாபின் புதிய முதல்வரான இவர் முன் இருக்கும் ஐந்து முக்கிய சவால்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

அனைவரையும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தல்

காங்கிரஸ் இன்று பிளவுபட்டுள்ளது. பலரும் சரண்ஜித்தை ஸ்டாப் கேப் அல்லது ஒருமித்த வேட்பாளாராக காண்கின்றனர். அவரின் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஓம் பிரகாஷ் சோனி மற்றும் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா வயதிலும் அனுபவத்திலும் சரண்ஜித்தை விட மூத்தவர்கள். இருவரும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆனாலும் சன்னிக்கு எதிராக திரும்ப வாய்ப்பில்லை. சோனி அம்ரிஸ்தரின் மேயராக பதவி வகித்தவர். காங்கிரஸ் சார்பில் மூன்று முறை சட்டமன்ற போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு முன்பே இரண்டு முறை சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். ரந்தாவா ஒரு ‘டப்பாங்’ என்று கருதப்படுகிறார், விரைவில் கோபப்பட கூடிய குணாதிசயம் கொண்டவர். பிறகு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இருக்கும் முதலமைச்சர் அபிலாஷைகள் ரகசியமானது அல்ல.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான டிக்கெட் மற்றும் வாய்ப்புகள் குறித்து கவலைப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங், காங்கிரஸை வெற்றியின் பாதைக்கு இட்டுச்செல்வார் என்று நினைக்கவில்லை என்பதால் கலகம் செய்தனர். சரண்ஜித் எவ்வாறு அவரின் தலைமையை இவர்களை நம்ப வைக்கிறார் மற்றும் அதிகார மையத்தை நோக்கி நகருகிறார் என்பது அவருடைய எதிர்காலத்தையும் அரசாங்கத்தையும் தீர்மானிக்கும்.

இதற்கு மிகவும் திறமையான முடிவு எடுக்கும் திறன் தேவை. இது அவ்வளவு எளிதாக இருக்காது ஏன் என்றால் அம்ரிந்தர் சிங் கூட சன்னிக்கு எதிராக செயல்படலாம். மேலும், சித்து கட்சியை வழிநடத்துவார் என்று கூறி ஹரிஷ் ராவத் அவருக்கு பெரும் துரோகம் செய்துள்ளார், ”என்கிறார் சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மூத்த அரசியல் அறிஞர் அசுதோஷ் குமார். அமிர்தசரஸ் குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானியான பேராசிரியர் ஜாக்ரூப் செக்கோன், பழைய வண்டிகளுடன் ஒரு புதிய எஞ்சினாக சன்னியை சேர்த்திருப்பது வேகத்தை துரிதப்படுத்துவதில் சவாலை ஏற்படுத்தும் என்று மேற்கோள் காட்டினார்.

விவசாயிகள்

பஞ்சாபில் கடைசி எல்லை வரை விவசாயிகளின் ஆதரவை கொண்டிருக்கும் ஒரு கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு கூறி, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் கிளர்ந்தெழுந்த விவசாயிகளுக்காக உரையாற்ற முயன்றார். ஆனால் அவருக்கு முன்பு முதல்வராக பணியாற்றிய அமரிந்தராலும் கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு கோரிக்கை. கட்சிக்கு வாக்களிப்பதில் விவசாயிகளை எவ்வாறு கவர்ந்திழுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பண்ணு, இந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூற மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் நிச்சயமாக அனுதாபமுள்ள ஒருவரை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

போதை மருந்துகள்

அதிருப்தியாளர்களால் தொடர்ந்து இரண்டு விவகாரங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதில் போதைப் பொருள் விவகாரத்திற்கு மாயமாக தீர்வுகளை கொண்டு வர இயலாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். போதைப் பொருட்கள் என்பது ஒரு கட்டமைப்பு பிரச்சனை. உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கார்டெல்கள் வரை பலரை உள்ளடக்கிய பிரச்சனை. அதே போன்று சாக்ரிலேஜ் (sacrilege) விவகாரங்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒரு தீர்மானத்தை நினைப்பது ஏமாற்றத்தைத் தான் தரும் என்கிறார் செக்கொன். சன்னி வாக்காளர் எதிர்பார்ப்பை கவனித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 அம்ச நிகழ்ச்சி நிரல்

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவைப்படும் 18 அம்ச நிகழ்ச்சி நிரலை வழங்கியுள்ளது காங்கிரஸ் உயர்மட்ட குழு. இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த வேண்டுமானால், சன்னிக்கு மேலாண்மை விஸ்ஸின் புத்திசாலிகள் தேவை. அல்லது அவர் தனது சேவையில் அதிகாரத்துவத்தின் கூட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தலாம். தேர்தல்கள் நெருங்கி வருவதால் இது எளிதாக இருக்காது ஏன் என்றால் அதிகாரத்துவம் இதனை செயல்படுத்துவதை தாமதப்படுத்தலாம் என்று அசுதோஷ் கூறியுள்ளார். ஆனால் எப்படியிருந்தாலும், அவரும் சித்துவும் ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் வழிநடத்தி கண்காணிக்க வேண்டும். குறுகிய கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, அவர் முதல்வராக இருக்க வேண்டும்.

பொது கருத்து

முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் குமார் ஜக்கார், கடந்த காலங்களில் மாநில அரசு பயனுள்ள முடிவுகளை எடுத்ததாகக் கூறினார், ஆனால் இவற்றை விளம்பரப்படுத்தவும் அதற்கு பொறுப்பு கூறவும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. முதியோர் ஓய்வூதியம் ரூ. 1500 ஆக அதிகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 26 லட்சம் பேர் இந்த தொகையை பெறுவார்கள். டெல்லியில் ஆம் ஆத்மிக்கு மக்கள் வாக்களித்தனர் ஏன் என்றால் அவர்கள் தங்கள் மின்சார கட்டணத்தில் சில ஆயிரங்களை சேமித்தனர். ஆனால் இந்த திட்டங்களை நாங்கள் இன்னும் விளம்பரப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

பொது உணர்வில் அம்ரிந்தர் தோல்வியுற்றார். சன்னி அதில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 challenges before new punjab chief minister charanjit singh channi

Next Story
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து பயணம்.. இந்த புதிய கோவிட் -19 பயண விதிகள் பற்றித் தெரியுமா?What UK new Covid19 travel rules mean for a flyer from India Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com