AAP is heading for a clean sweep in Punjab: 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சண்டிகரின் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியைக் குவித்த ஆம் ஆத்மி கட்சி, 70 ஆண்டுகளாக பஞ்சாப் மக்களை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகலி தளம் கட்சியைக் காட்டிலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற காரணமாக இருந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன? விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி.
மாற்றத்திற்கான தேவை
பஞ்சாப்பில் ஆரம்ப காலம் முதலே ஷிரோமணி அகலி தளம் அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வந்தது. ஷிரோமணி அகலி தளம் அல்லது SAD என்று அழைக்கப்படும் அக்கட்சி 24 ஆண்டுகள் பஞ்சாப்பில் ஆட்சி செய்துள்ளது. மேலும் 1997 முதல் 2001ம் ஆண்டு வரை பாஜக கூட்டணியில் ஆட்சி நடத்தியது. காங்கிரஸ் கட்சி 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளில் SAD கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது.
அம்ரிந்தர் சிங் தலைமையிலான ஆட்சியின் போது பாதல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மென்மையாக நடந்து கொண்டதன் காரணமாக அகாலிகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற கருத்திற்கு வலு சேர்த்தது என்றே கூறலாம்.
இந்த நேரத்தில் பஞ்சாப் மக்கள் குறிப்பாக மால்வா பகுதியை சேர்ந்தவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். 70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் சரியான ஆட்சியை மக்களுக்கு வழங்கவில்லை என்ற செய்தியை மாநிலம் முழுவதும் எதிரொலிப்பதை இது பிரதிபலித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் மற்றொரு கட்சிக்கு வாய்ப்பை அளித்துப் பார்ப்போம் என்ற முடிவை மக்கள் எட்டியுள்ளனர். “இந்த முறை நாங்கள் ஏமாறமாட்டோம். பகவந்த் மன் மற்றும் அரவிந்துக்கு இம்முறை வாய்ப்புகளை வழங்குவோம்” என்று ஆம் ஆத்மியின் முழக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது.
டெல்லி மாடல்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாடல் ஆட்சியின் நான்கு தூண்கள் பஞ்சாபிலும் நிறுவப்படும் என்று கூறினார். அரசு பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் குறைந்த விலையில் குடிநீர். ஏற்கனவே மின்சாரத்திற்காக அதிக அளவில் கட்டணம் செலுத்தும் ஒரு மாநிலம், அங்கே கல்வியும் சுகாதார அமைப்புகளும் தனியார்மயக்கப்பட்ட நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இளைஞர்களும் பெண்களும்
ஆம் ஆத்மி கட்சிக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது. அவர்கள் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் முடிவுக்கு வந்துள்ளனர். கெஜ்ரிவால் மாநிலத்தில் வேரூன்றி உள்ள ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்த வாக்குறுதிகள், ஏற்கனவே ஒரு மாற்றத்திற்காக காத்திருந்த இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு புதிய ஆட்சி உருவாகும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்துள்ளது. அதே போன்று மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி பெண்கள் மத்தியிலும் அவருக்கு வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. இது போன்ற பெரிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கரைந்து விடும் என்று பலர் ஒப்புக் கொண்டாலும் கூட, பெண்களை அவர்களின் கணவர்கள் மற்றும் தந்தைகளின் பிடியில் இருந்து விடுவித்து ஒரு வாக்கு வங்கியாக மாற்றியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
முதல்வராக பக்வந்த் மான்
வெளியூரில் இருந்து வந்தவர் என்று பக்வந்த் மான் என்று போட்டிக் கட்சியினர் குறை கூறி வந்தாலும் முதல்வர் வேட்பாளர்காக பக்வந்த மான் அறிவிக்கப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஏற்கனவே கோடி கணக்கான பஞ்சாபி மக்களின் மனதில் இடம் பிடித்த அவர் மிக எளிதில் மண்ணின் மைந்தனாக உயர்ந்துவிட்டார். அதே வேளையில் தான் எப்படி வாடகை வீட்டில் குடியிருந்து வந்தேன். எப்படி தன்னுடைய நிகர சொத்து மதிப்பு ஒவ்வொரு தேர்தல் வெற்றியின் போதும் குறைந்து வந்தது என்பதையும் பேசி மக்களின் இதயத்தை தொட்ட வேட்பாளராகவே அவர் மாறிவிட்டார்.
விவசாயிகள் போராட்டமும் மால்வாவும்
ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தனர். இந்த போராட்டம் தான் கடந்த கால தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த ‘தர்ரா’ அமைப்பை (பிரிவு) உடைத்து ஆட்சி மாற்றத்திற்கான களத்தை தயார் செய்தது.
பாரதிய கிஷான் சங்கத்தின் (உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகான், 69 தொகுதிகளை உள்ளடக்கிய மால்வா பகுதிகளில் வாக்களார்களுக்கு கேள்வியை ஏற்படுத்தியது இந்த போராட்டம் என்று கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அரசியல் வாதிகளால் சாலைகள் மற்றும் சாக்கடைகளை தாண்டி ஏன் எதையும் யோசிக்க இயலவில்லை என்று அவர் தொடர் கேள்விகளை தொடுக்க, பதில்களுடன் வந்து களத்தில் இணைந்தது ஆம் ஆத்மி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil