பால்வெளி மண்டலத்தின் 5 புகைப்படங்களை நாசா கடந்த வாரம் வெளியிட்டது. இந்நிலையில் இந்த புகைப்படங்களை வைத்து நாசா விஞ்ஞானிகள் 5 முக்கிய விஷங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாடு
ஹப்பிள்( Hubble) தொலைநோக்கியை நாசா பயன்படுத்திய போது, அது மங்கலான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. பல முறை இதை பழுது பார்க்க நாசா முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பழுதுபாக்க இயலாத நிலை உள்ளது. இது பூமியிலிருந்து அதிக தூரத்தில் இருக்கிறது.
இதனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சரியாக வேலை செய்கிறதா ? என்று ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கண்காணித்தனர். இந்த தொலைநோக்கியின் புகைப்படங்களை பார்த்த ஜேன் ரிக்பி , என்ற விஞ்ஞானி “ கடவுளே..இது அபாரமாக வேலை செய்கிறது” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். ”நாங்கள் எதிர்பார்த்தைவிட இது அபாரமாக வேலை செய்கிறது” என்று அவர் கூறினார்.
”இந்த புகைப்படங்கள் தொடர்பாக பல விண்வெளி ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அதை சரி பார்க்கவில்லை. பால்வெளி மண்டலத்தை பற்றிய ஒரு விரிவான ஆய்வை இந்த புகைப்படங்கள் மூலம் நம்மால் நிகழ்த்த முடியும். ஏற்கனவே இது தொடர்பாக 13 விஞ்ஞான ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. சூரிய குடும்பம், வேறு கிரகங்கள், பிளாக் ஹோல் நட்சத்திரங்களின் தோற்றம் இப்படி பல விஷயங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள முடியும்” என்று ஜேன் ரிக்பி கூறியுள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழமான பார்வை கிடைக்கும்
அமெரிக்க அதிபர் ஜோ பைடென் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பேரண்ட வெளியின் ஆழமான புகைப்படத்தை கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்தார்.
தொலைவில் இருக்கும் விண்மின் கூட்டமான SMACS 0723 என்ற பெயரிடப்பட்ட விண்மீன் கூட்டம் இருப்பது இப்புகைப்படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ள பிரபஞ்சத்தை போல மற்ற பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்பது நிரூபனமாகி உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களிடமிருந்து புவி ஈர்ப்பு சக்தியால் வெளிப்படும் ஒளி, இவை 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்பதை உணர்த்துகிறது.
தொலைதூரத்தில் நாம் காணும் விண்மீன்கள் தற்போது நமது இருக்கும் விண்மீனகளை போல இல்லாமல் இருக்கலாம். முதலில் தோன்றிய விண்மீன்கள், ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. பிக் பாங் கோபாட்டின்படி இந்த விண்மீன்கள் சூரியனைவிட விரைவில் பெரிதாகும், அதுபோலவே விரைவாக வெடித்து, பிளாக் ஹோல்-ஆக மாறிவிடும்.
வேற்று கிரகத்தின் வளிமண்டலம் தொடர்பான கண்டுபிடிப்புகள்
ஜுப்பிட்டர் அளவில் இருக்கும் புதிய கிரகமான WASP-96b புகைப்படங்கள் அவ்வளவு துல்லியமாக இல்லையென்றாலும். இந்த கிரத்தில் நீர் ஆவி இருப்பதும், மேகங்கள் இருப்பதும் கண்டயறியப்பட்டுள்ளது.
மேலும் உயிர்கள் வாழும் புதிய கிரகத்தை கண்டறிய வாய்ப்புகளும் இருக்கிறது என்று அரிசோனா பல்கலைகழகத்தின் விண்வெளி ஆய்வாளர் மேகன் மான்ஸ் ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
எதிர்பாராததை எதிர்பாக்கலாம்
தூசிகளால் நிறைந்த, நீபுலா என்ற விண்மீன் புகைப்படங்கள், பால்வெளியில் உள்ள வீண்மீன்கள் கூட்டம் தொடர்பான ஒரு புதிய பார்வையை உண்டாக்கும் என்றும் இந்த வீண்மீன்கள் பால்வெளியில் திடீரெண்டு வெடிக்கிறது என்றும் இதுபோல ஒரு புகைப்படத்தை விண்வெளி ஆய்வாளர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிரமாக ஆராய்ந்த பிறகே கூற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைநோக்கின் தற்போதிய நிலை
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எப்போதுவேண்டுமானாலும் உடைய வாய்ப்பிருக்கிறது. பால்வெளி மண்டத்தில் இருக்கும் தூசிகளால் இது ஏற்படலாம். கடந்த மே மாதத்தின் இறுதியில் சிறு விண்மீன்களால் தொலை நோக்கி சேதமடைந்ததாகவும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வாளர்கள் சரி செய்ததாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொலைநோக்கியின் கண்ணாடிகளில், சேதம் ஏற்படாமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.