மோடியின் 3 டிஜிட்டல் அறிவிப்புகள்: முக்கியத்துவம் என்ன?

டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று முக்கிய அம்சங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

By: Updated: August 16, 2020, 07:38:41 AM

74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதில், டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று முக்கிய அம்சங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ஒவ்வொரு கிராமமும் ஆப்டிகல் பைபர் (கண்ணாடி இழை) மூலம் இணைக்கப்படும்:

பிரதமர் தனது உரையில், வரவிருக்கும் 1000 நாட்களில், நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஆப்டிகல் பைபர் (கண்ணாடி இழை) மூலம் இணைக்கப்படும் என்று தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய இணைப்புத் திட்டம்” என்றும் தெரிவித்தார்.

கிராமப் பஞ்சாயத்து அளவில் அங்கன்வாடி, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் வாயிலாக நாட்டிலுள்ள 2,50,000க்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துக்கள் 8 லட்சம் கிலோ மீட்டர் தூரமுள்ள கண்ணாடி இழைக்கற்றை வாயிலாக  இணைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டம் தற்போது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து   வருகிறது.

முதலாவதாக,மார்ச் 2020 என்ற காலக்கெடுவிற்குள்  திட்டத்தின்  இரண்டாம் கட்ட பணிகள் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால்,  2021 ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு காலக்கெடு மாற்றப்பட்டது.

இந்த மாதத்தில் கூட, ஏற்கனவே போடப்பட்ட  ஆப்டிகல் பைர்களை (கண்ணாடி இழை) பராமரிப்பிற்கான ஏலதாரர்களை தேர்வு செய்ய முடியாமல் போனதாக  பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தெரிவித்தது.  4 ஜி சேவைகளில் 4 ஜி விரிவாக்கத்தின் சீனக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவு, தகவல் தொடர்புத் துறையில் உள்ள மோசமான நிதி நிலைமை போன்ற காரணங்களால் ஏலதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சில ஆய்வாளர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.  இதைத்தவிர, பாரத்நெட் திட்டத்தின் இராண்டாவது கட்டத்திற்கு மாநிலங்கள் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

மேலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் இணையதள இணைப்பு வளர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே போடப்பட்ட  பைபரைப் பயன்படுத்தி  கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இருந்து  இணைய சேவைகளை வழங்க தனியார் நிறுவனங்கள் தயங்கி வருகின்றனர். மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் போடப்பட்ட  பைபரின் தரம் கேள்விக்கூறியதாக உள்ளது. “ இருக்க வேண்டிய பல இடங்களில் ஆப்டிகல் பைபர் (கண்ணாடி இழை)  கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு சில இடங்களில்,போதிய பராமரிப்பு இல்லாததால் பைபர் துண்டிக்கப்பட்டுள்ளத. அவர்கள் அதை சரிசெய்யவில்லை ”என்று பிபிஎன்எல் அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு சுட்டிக்காட்டினார்.

அக்டோபர் 2011 இல் யுபிஏ அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் (பாரத்நெட்) முதலில் தேசிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் அல்லது NOFN என பெயரிடப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் வருவாயில் 5 சதவீத வரி விதிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட  Universal Service Obligation Fund மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் : 

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை அறிவித்த பிரதமர், நோய்கள், பரிசோதனை, அறிக்கை, மருத்துவம் உள்ளிட்ட விவரங்களை ஒரே அடையாளத்தின் மூலம் பொதுவான தரவுதளத்தில் கொண்ட பிரத்யேக சுகாதார அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்றார்.

ஒவ்வொருமுறையும் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும் போது, அந்த சுகாதார அட்டையில் சிகிச்சை குறித்த விவரம் இடம் பெறும். மருத்துவர்களின் முன் அனுமதிபெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெறும். தனிநபர்கள் அரசாங்கத் திட்டங்களிலிருந்து பயனடைய விரும்பினால், அவர்கள் தங்கள் அடையாளத்தை தங்கள் ஆதார் உடன் இணைத்துக் கொள்ளலாம்.

தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை (2020) :  சைபர்வெளியில் பாதுகாப்பை விரிவுபடுத்த தற்போதுள்ள  தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை 2013க்குப் பதில் புதிய  சைபர் பாதுகாப்புக் கொள்கைசைபர் பாதுகாப்புக் கொள்கை வெளியடப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.   டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:74th independence day speech 3 important digital india announcements

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X