மனித உடலின் சராசரி வெப்ப அளவு குறைய காரணம் என்ன?

இது பல்வேறு காரணங்களின் கூட்டு விளைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

By: October 31, 2020, 12:53:20 PM

Kabir Firaque

98.6°F vs new normal: why is body temperature declining over time :  கடந்த சில வருடங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மனிதர்களின் சராசரி வெப்பநிலை என்று கூறப்படும் “கோல்ட் ஸ்டேண்டர்ட்” 98.6°F என்ற வெப்பநிலையில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது என்று கண்டறிந்துள்ளனர் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட காலத்தில் சராசரியாக கருதப்படும் மனித வெப்பநிலை குறைந்துள்ளது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆனால் இதே நிலை, அதிக அளவு வருமானம் கொண்டிருக்கும் நாடுகளுக்கு வெளியிலும் நிலவுகிறதா?

ஆம். பொலிவியாவில், உடல் வெப்பநிலை உள்ளூர் பூர்வகுடியினரிடம் குறைந்துள்ளது என்பதை 16 ஆண்டுகால ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது. சையன்ஸ் அட்வான்சஸ் (Science Advances) என்ற பத்திரிக்கையில் வெளியான இந்த ஆய்வுக்கட்டுரையில், மனிதனின் சராசரி வெப்பநிலை குறைந்ததற்கான காரணங்களையும் அலசியுள்ளது.

98.6°F -ஐ சராசரி உடல் வெப்பநிலையாக எடுத்துக் கொள்வதற்கும், வேண்டாம் என்று சொல்வதற்கும் என்ன காரணங்கள் உள்ளது?

ஜெர்மனியை சேர்ந்த கார்ல் ரெய்ஹோல்ட் ஆகஸ்ட் வுண்டர்லிச் என்ற மருத்துவர் மருத்துவ வெப்பமானியின் மிக முக்கிய பயனீட்டாள்ர். 1851ம் ஆண்டு இந்த வெப்பமானியை கொண்டு மில்லியன் முறை 25 ஆயிரம், நோயாளிகளில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்துள்ளார். பின்பு அந்த ஆய்வை அறிக்கையாக 1868ம் ஆண்டு வெளியிட்ட அவர் அதில் மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6°F என்று பதிவு செய்தார்.

ஆனால் சமீப காலத்தில், மனித உடலின் சராசரி வெப்பநிலை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் 97.7°, 97.9° மற்றும் 98.2°F என்று வெவ்வேறு சராசரி வெப்பநிலையை பதிவு செய்தது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஆய்வு முடிவுகளில் அமெரிக்கர்களின் உடல் வெப்பநிலை கடந்த 2 நூற்றாண்டுகளில் படிப்படியாக குறைய துவங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

புதிய ஆய்வு கூற வருவது என்ன?

இதற்கு முந்திய ஆய்வுகளில் உடல் வெப்பநிலை ஏன் குறைகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை. அதிக வருமானம் பெரும் நாடுகளை தாண்டியும் இவ்வாறு உடல் வெப்பநிலை குறைந்துள்ளதா என்பதும் தெரியவில்லை. பொலிவியன் அமேசானில் உள்ள சிமானே (Tsimane) பூர்வகுடிகள் 5,500 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 18,000 முறை வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.

பல்வேறுவிதமான நோய் கிருமிகள் அண்டியிருக்கும் வெப்பமண்டல பகுதிகளில், சிமானே என்ற உணவு தேடும் – தோட்டக்கலை தொழில் புரிபவர்கள். நிம்மோனியா போன்ற நோயை அதிகம் தெரிந்து கொண்ட, ஹூக்வார்ம் மற்றும் டி.பி. போன்ற நோய்கள் குறித்து குறைவான பரீட்சயம் உடையவர்கள் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக மானுடவியலாளர் மைக்கேல் குர்வன் கூறியுள்ளார்.

தொற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகளுடன் இருப்பது அதிக அளவு இன்ஃபெளமேஷனுக்கு வழிவகுக்கும் இது உயர் வெப்பநிலையை உருவாக்கும். முந்தைய ஆராய்ச்சிகளில் அதிக தொற்று காரணமாக சிமானே மக்கள் அதிக அளவு இன்ஃபெளமேஷனுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. எனவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாட்டினரை காட்டிலும் சிமானே மக்களின் சராசரி வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம் என்று குர்வன் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மாறாக, ஒவ்வொரு ஆண்டும் 0.09°F என்ற அளவில் சிமானே மக்களின் வெப்பநிலை குறைய துவங்கி தற்போது 97.7°F வெப்பநிலையை கொண்டுள்ளனர். இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலங்களில் இந்த சரிவு, இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் காணப்பட்டதைப் போலவே இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கான காரணங்கள் என்ன?

பொதுவாக மக்களின் உடலில் எந்த காரணங்களால் வெப்பநிலை குறைகிறது என்ற கருத்துகளை வைத்து அவர்களின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேம்பட்ட ஆரோக்கியம்

அதிக வருமானம் கொண்ட மக்கள் மத்தியில் நிலவும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு காலப்போக்கில் குறைவான தொற்றுக்கு வழி வகுத்தது. சிமானே கிராமப்புற வாழ்க்கையை வாழ்கின்றனர். சுகாதாரத்திற்கான அணுகல் கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது சிறப்பாக உள்ளது.

உண்மையில், சில நோய்த்தொற்றுகள் அதிக உடல் வெப்பநிலையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் புள்ளிவிவர மாதிரியானது வெப்பநிலையை சரிசெய்யும்போது தொற்று குறைகிறது என்பதை மட்டுமே அறிந்தது தவிர அதற்கான காரணங்களை விளக்க இயலவில்லை. நோயாளிகளின் குணாதியங்கள் மற்றும் அவர்களின் நோய்களில் மாற்றம் செய்யப்பட்டு, ஆய்வு காலத்தில் உடலின் வெப்பநிலை கணக்கெடுக்கப்படவில்லை என்பத குர்வென் உறுதி செய்தார்.

குறைவான இன்ஃப்ளமேசன்

முன்பை காட்டிலும் தற்போது மக்கள் ibuprofen போன்ற ஆண்ட்டி – இன்ஃப்ளெமேட்ரிகளை உட்கொள்கின்றனர். மறுபடியும், பயோமார்க்ஸர்களைக் கணக்கிட்ட பிறகும், காலப்போக்கில் சிமனே மத்தியில் உடல் வெப்பநிலை குறைந்தது.

குறைவான உடல் கோளாறு

மக்களுக்கு சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இருப்பதால், தொற்றுநோய்கள் குறைத்துள்ளதா? ஆய்வு பரிசோதித்த மற்றொரு கருதுகோள் அது. சிமானேவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் இந்த வாதத்துடன் ஒத்துப்போகின்றன. ஒரு ஆய்வில் பங்கேற்பாளருக்கு 2002-18 ஆய்வின் ஆரம்ப கட்டங்களில் சுவாச தொற்று இருந்தது. அது சமீபத்தில் அதே தொற்றுநோயைக் கொண்டிருந்தால் ஏற்படும் வெப்பநிலையை காட்டிலும் கூடுதல் உடற்சூட்டை உருவாக்கியது.

உடல் குறைவாக உழைத்தல்

மற்றொரு கருதுகோள் என்னவென்றால், மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எனவே அவர்களின் உடல்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குறைவாகவே செயல்படுகின்றன என்பதாகும். மேலும், காற்றுச்சீரமைத்தல் மற்றும் குளிர்கால வெப்பமயமாதல் ஆகியவற்றிற்காக, உள் வெப்பநிலையை சீராக்க நமது உடல்கள் முன்பு போல் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. சிமானே மக்கள் அத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் உடைகள் மற்றும் போர்வைகளை முன்பு எப்போதைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதன் தாக்கங்கள் என்ன?

ஒன்றாக, கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் வெப்பநிலை குறைந்ததற்கான ஒற்றை காரணங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனால் இது பல்வேறு காரணங்களின் கூட்டு விளைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் உடல் வெப்பநிலை அளவை எப்படி நடைமுறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதை மாற்றும் காரணமாக இது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. மருத்துவர்கள் ஏற்கனவே, உலக அளவில் ஒரே மாதிரியான சராசரி உடல்வெப்பநிலை அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரத்திலும் இருக்காது என்பதை கூறியுள்ளனர்.

பல்வேறு வரம்புகளுடன் ஆய்வு ஒரே மாதிரியான தெர்மோமீட்டரைப் பயன்படுத்தியது, ஆனால் 16 ஆண்டுகளுக்கும் ஒரே வெப்பமானியை அல்ல. ஆரம்ப ஆய்வு ஆண்டுகளில், மாதிரி அளவு சிறியதாக இருந்தது. கர்ப்பம் அல்லது பாலூட்டுதல் அல்லது உடல் வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட நாளின் நேரம் ஆகியவற்றை இந்த ஆய்வு கணக்கிடவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:986f vs new normal why is body temperature declining over time

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X