55 பயணிகளை மறந்து விட்டுச் சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானம்: பெங்களூருவில் நடந்தது என்ன?

பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானம் பயணிகளை விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானம் பயணிகளை விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
55 பயணிகளை மறந்து விட்டுச் சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானம்:  பெங்களூருவில் நடந்தது என்ன?

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 9) கோ ஃபர்ஸ்ட் ( GoFirst) விமானம் புறப்பட்டது. இந்நிலையில், விமானத்தில் செல்ல போர்டிங் பாஸ் வைத்திருந்த 55 பயணிகள் விமான நிலைய பேருந்தில் சிக்கிக் கொண்டதால் அவர்களை விட்டு விட்டு விமானம் புறப்பட்டு சென்றது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

திங்கட்கிழமை காலை பெங்களூரு விமான நிலையத்தில் என்ன நடந்தது?

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு G8116 என்ற GoFirst விமானம் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஆனால் 55 பயணிகளை ஏற்றாமல் சென்றது. செக்-இன் செய்யப்பட்ட அவர்களின் லக்கேஜ்கள் மட்டும் விமானத்தில் சென்றது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் ட்வீட் செய்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது எப்படி நடந்தது?

Advertisment
Advertisements

திங்கள்கிழமை காலை, GoFirst விமானம் G8116 இல் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை 4 பேருந்துகளில் விமான நிலைய முனைய கட்டடத்தில் இருந்து விமானம் நிற்கும் இடத்திற்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அதில் மூன்று பேருந்துகளில் தலா 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நான்காவது பேருந்தில் மட்டும் 5-6 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பற்றிய தகவல் விமான ஓடுதளத்தில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பயணிகளை ஏற்றி வரும் கடைசிப் பேருந்து இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ​​55 பயணிகள் ஏற்றி வந்த 3-வது பேருந்து எங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், 4-வது பேருந்து 5-6 பயணிகளுடன் வந்த பேருந்து விமான ஓடுதளத்தை அடைந்தது.

இதுதான் கடைசி பேருந்து எனக் கருதி, விமான நிறுவனமும் விமானம் புறப்படத் தயாராக உள்ளது என அறிவித்தது. இந்நிலையில் 55 பயணிகள் பேருந்து சிக்கிக் கொண்டனர்.

இந்த தவறுக்கு யார் பொறுப்பு?

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இச்சம்பவத்தில் பல்வேறு இடங்களில் தவறு நடந்ததாக கூறியுள்ளது. சரியான தொடர்பு இல்லை, ஒருங்கிணைப்பு, உறுதிப்படுத்தல் இல்லை போன்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்றன.

மேலும் மற்ற அதிகாரிகள் கூறுகையில், ஓடுதளத்தில் இருக்கும் ஊழியர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றன. அவர்கள் தான் முன்னணி கேபின் குழு என்றும் அவர்களிடத்தில் தான் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் பட்டியல் இருக்கும் என்று கூறினர்.
இத்தகைய அலட்சியம் பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பக் கூடும் என்று கூறினர். மேலும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் ஷோ-காஸ் நோட்டீஸ் வருங்காலத்தில் இது போன்று நடக்காமல், செயல்களை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: