ஓம் மராத்தே
A Brief History of Kashmir Before The Mughals: மத்திய காலத்தின் இறுதியில் இந்து மன்னராட்சி முடிவடைந்த பிறகு, 250 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் ஒரு சுதந்திரமான முஸ்லிம் முடியாட்சியால் ஆளப்பட்டது. 1326 முதல் 1585 ஆம் ஆண்டு வரை இப்பகுதியை முகலாய பேரரசர் அக்பர் ஆட்சி செய்தபோது, காஷ்மீரிகளின் உண்மையான கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆழமான மாற்றங்களை சந்தித்தது. 19 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் சீக்கிய பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இறுதியில் இந்து டோக்ரா மன்னர்களின் கீழ் சென்றது.
காஷ்மீர் சுல்தான் அரசர்கள்
ஷா மீர்
ஷா மீர் காஷ்மீரின் முதல் முஸ்லிம் அரசராக கருதப்படுகிறார். இவர் ஆட்சிக்கு வந்தது பற்றி மாறுபட்ட குறிப்புகள் உள்ளன. 20 நூற்றாண்டின் தொடக்க கால வரலாற்றாசிரியர் ஜி.எஸ்.சர்தேசாய் குறிப்பிடுகையில், துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட ஷா மீர், மன்னர் ரணசந்திராவின் அரசவை விவகாரங்களில் தலைமைப் பணியாற்றினார். காஷ்கர் ஆட்சியாளர் அனந்த தேவா ரணசந்திராவின் அரசைக் கைப்பற்றினார். இவர் ஷா மீர் உள்ளிட்ட முஸ்லிம் அரசு ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்கினார். இதன் விளைவாக ஏற்பட்ட கிளர்ச்சியை ஷா மீர் வழிநடத்தினார். அது 1326-ஆம் ஆண்டில் அனந்த தேவாவின் மரணத்துக்கு வழிவகுத்தது.
1339 ஆம் ஆண்டில் ஷா மீர் தனது வம்சத்தை நிறுவினார். அவர் பல வரிகளை ரத்து செய்த நல்ல ஆட்சியாளராக இருந்தார் என்று கூறப்படுகிறது. 1939 ஆம் ஆண்டில் ஷா மீர் தனது மகன்களான ஜாம்ஷெட் மற்றும் ஷெர் அலி ஆகிய இருவரிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
ஜாம்ஷெட் மற்றும் ஷாபுத்தின்
இரு சகோதரர்கள் இடையே விரைவிலேயே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இதில் ஜாம்ஷெட் வெற்றி பெற்று அலாவுதீன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். 1363 ஆம் ஆண்டில் அவருடைய இறப்புக்குப் பிறகு, ஷெர் அலி, ஷாபுத்தின் என்ற பட்டத்தோடு அரியனை ஏறினார்.
ஷாபுத்தின் தெற்கே படையெடுத்துச் சென்று, கங்ரா ஆட்சியாளரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது, மற்றும் சிந்து மன்னர் சம்மா அரசை வெற்றிகொண்டது உள்பட அவருடைய முக்கிய வெற்றிகள் ஆகும். 1386 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு, ஷெர் அலியின் வாரிசான குதுபுதீன் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவர் 1396 ஆம் ஆண்டில் அவரது மகன் சர்ச்சைக்குரிய சிக்கந்தரால் வெற்றிக்கொள்ளப்பட்டார்.
சிக்கந்தர்
சிக்கந்தர் சில சமயங்களில் புட்ஷிகான் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார். புட்ஷிகான் என்றால் சிலைகளை அழிப்பவர் என்று பொருள். இவருடைய ஆட்சி காலத்தில் பல கோயில்கள் அழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பல இந்துக்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டனர்.
சர்தேசாயின் கூற்றுப்படி, சிக்கந்தர் ஒரு புத்திசாலித்தனமான ஆட்சியாளராக இருந்தார். 1398 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த மத்திய ஆசிய படையெடுப்பாளரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் காஷ்மீரை தைமூரின் கொள்ளையிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.
1416 ஆம் ஆண்டு சிக்கந்தரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் அமீர் கான் ஆட்சிக்கு வருகிறார். 1422 ஆம் ஆண்டு அவரது சகோதரர் ஷாடி கானால் பதவிநீக்கம் செய்யப்படுகிறார். பின்னர், ஜைன் உல் அபிதின் என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்.
ஜைன் உல் அபிதின்
ஜைன் உல் அபிதின் சிக்கந்தரின் பழமைவாத கொள்கைகளில் பலவற்றை மாற்றினார். இவர் இந்துக்களையும் பௌத்தர்களையும் தங்கள் மதங்களை பின்பற்ற அனுமதித்தார். பல கோயில்கள் புனரமைக்கப்பட்டன. ஏரிகள் மற்றும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. மேலும், ஜைன்-உல்-அபிதின் கலை, இலக்கியம் மற்றும் கவிதை ஆகியவற்றின் புரவலராகவும் இருந்தார்.
முஹம்மது மற்றும் ஃபதேகான்
1472 இல் ஜைன் உல் அபிதின் இறப்புக்கு பிறகு, அவரது வாரிசான ஹாஜி கான் என்கிற ஹைதர் ஒராண்டு ஆட்சி செய்தார். ஹாஜி கானுக்குப் பிறகு அவரது மகன் ஹசன் 13 ஆண்டுகள் கொந்தளிப்பான சூழலில் ஆட்சி செய்தார். பிறகு, சிறுவனான அவருடைய மகன் முஹம்மதுவை பொறுப்பில் விட்டுச்சென்றார்.
பல ஆண்டு அரசவை சூழ்ச்சிக்குப் பிறகு, ஜைன் உல் அபிதின்னுடை பேரன் ஃபதே கானால் முஹம்மது பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஃபதே கான் அரியனையைக் கைப்பற்றிய பின்னர், டெல்லி சுல்தான் ஆட்சியாளர் சிக்கந்தர் லோடியுடன் கூட்டணி வைத்தார். மேலும், அவரை பதவி நீக்கம் செய்ய முஹம்மது மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்தார். இருப்பினும், தெற்கில் ஒரு பயணத்தில் ஃபதே கான் இறந்தபோது, முஹம்மது மீண்டும் அரியனை ஏறி 1535 ஆண்டு வரை ஆட்சி செய்தார். முஹம்மதுவுக்குப் பிறகு, காஷ்மீர் அடுத்த ஐம்பது ஆண்டு காலம் நிச்சயமற்ற தன்மையைக் கண்டது, அதில் ஒரு பகுதி சக் வம்சத்தால் ஆளப்பட்டது. இந்த காலகட்டத்தின் முடிவில், காஷ்மீர் அக்பரின் கீழ் விரிவடைந்த முகலாய பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.