ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒரு தற்கொலை! - WHO தரும் பகீர் ரிப்போர்ட்

ஒரு நெருக்கடியின் போது பல தற்கொலைகள் நடப்பதாகவும், மன அழுத்தத்தை சமாளிக்க ஒரு நபரின் இயலாமை காரணமாகிறது எனவும் WHO கண்டறிந்துள்ளது

உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு உண்மை அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை காரணமாக 8 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலை மரணத்திற்கு காரணமாகின்றன. ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால், ஒருவரின் உயிரை எடுக்க 20க்கும் மேற்பட்ட தவறவிடப்பட்ட தற்கொலைமுயற்சிகள் உள்ளன என்ற தகவலும் தெரிய வருகிறது.

விளக்கப்படம் 1 மூலம், தற்கொலையில் உலகளாவிய சராசரியான 10.53 இறப்புகளுகளில் (100,000 மக்கள்தொகைக்கு) ஐரோப்பா தற்கொலை மூலம் அதிகபட்ச இறப்புகளைப் பதிவுசெய்கிறது, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகள் மிகக் குறைந்த சராசரியைப் பதிவு செய்கிறது. இருப்பினும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் கூட, பரந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. உதாரணமாக, விளக்கப்படம் 2ன் படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தற்கொலை விகிதங்களில் மாறுபட்ட நிலைகளை தெரிவிக்கின்றன.

விளக்கப்படம் 2, புவியியல் மற்றும் வள ஒதுக்கீடு மற்றும் பொருளாதார செழிப்பு அடிப்படையில் பல்வேறு நாடுகளின் பகுதி சார்ந்த விகிதங்களைக் காட்டுகிறது. இந்தோனேசியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ரஷ்யாவின் தரவு உலகளாவிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

தற்கொலை, ஆயுட்காலம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்றாலும், இது 15 முதல் 29 வயதுடையவர்களிடையே அதிகம் நிகழ்வதாக என்று அறிக்கை கூறியுள்ளது. விளக்கப்படம் 3, இளைஞர்களிடையே உலகளவில் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கையை காட்டுகிறது. இந்த வயதினரின் மரணத்திற்கு முக்கிய காரணம் சாலை விபத்து (ஆண்களுக்கு) மற்றும் பிரசவ காலங்கள் (பெண்களுக்கு) ஆகியவற்றால் ஏற்படுகிறது.

தற்கொலை மற்றும் மனநல கோளாறுகள், குறிப்பாக மனச்சோர்வு மற்றும் ஆல்கஹால் பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு நன்கு நிறுவப்பட்டிருந்தாலும், ஒரு நெருக்கடியின் போது பல தற்கொலைகள் நடப்பதாகவும், மன அழுத்தத்தை சமாளிக்க ஒரு நபரின் இயலாமை காரணமாகிறது எனவும் WHO கண்டறிந்துள்ளது. இருப்பினும், “தற்கொலைக்கான வலுவான ஆபத்து காரணி முந்தைய தற்கொலை முயற்சி”. என்று WHO குறிப்பிடுகிறது.

தற்கொலைகளின் முறைகளைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 20 சதவீதம் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படுகின்றன. பூச்சிக்கொல்லியின் பயன்பாடு குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கிராமப்புற விவசாய பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. பிற பொதுவான முறைகள் தூக்கிட்டுக் கொள்வதும், துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும் என WHO கூறுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close