தமிழ்நாட்டில் ஆளும் திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், தலித் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
திமுக வெற்றி
சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில், 200 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் எதிர்க்கட்சியான அதிமுக வெறும் 15 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் திமுக 153 இடங்களை வென்றுள்ளது. திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் தலித் கட்சியான விசிக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சிறப்பான முன்னிலையை உறுதி செய்துள்ளன.
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமார் மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் மாநகராட்சி திமுகவுக்கு கடுமையான போட்டியாக இருந்தது. ஏனென்றாஅல், இங்கே பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் உறுதியான வாக்குகள் இல்லை. ஆனால், 52 இடங்களில் திமுக 24 இடங்கலில் வெற்றி பெற்றது. பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேற்குத் தமிழகத்தில், அதிலும் முக்கியமாக, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் - அதிமுகவின் பாரம்பரிய கோட்டைகள். அதே நேரத்தில், பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியும் திமுகவுக்கு வாக்களித்தது. அதிமுகவின் மதிப்புமிக்க இடமாக சேலம் இருந்தது அங்கே முந்தைய ஆட்சியில் அதிகபட்ச உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிமுக கவனம் செலுத்தியது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த கோவை மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. பணபலத்திற்கும், பலத்துக்கும் பெயர் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டையான கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக தலைவர்களின் தலைமையில் ஒரு மாத கால பிரசாரம் வெற்றியை உறுதி செய்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூரில் திமுகவுக்கு அமோக வெற்றியை அளித்த பிறகு, இந்த முறை கோவையைக் கைப்பற்றுவதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வியூகங்கள் சிறப்பாக வேலை செய்தது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 இடங்களில், திமுக 74 இடங்களை வென்றது. அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது, காங்கிரஸ் 9 இடங்களை வென்றது. சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் உள்ள 198 நகராட்சி வார்டுகளில் திமுக 159 நகராட்சி வார்டுகளிலும் அதிமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இரண்டாவது இடத்தில் அதிமுக
பெரியகுளம் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் திமுக பெற்ற மாபெரும் வெற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு நகராட்சிகளும் அதிமுகவின் மதிப்புமிக்க கோட்டைகள்; பெரியகுளம், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதிகள் ஆகும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில் உள்ள மொத்தம் உள்ள 1374 மாநராட்சி இடங்களில் அதிமுக 164 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், திமுக 952 இடங்களி வென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல, மாநிலத்தில் உள்ள மொத்தம் 3,843 நகராட்சி இடங்களில் அதிமுக 638 இடங்களில் வென்றுள்ள நிலையில், திமுக மட்டும் 2,360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், திமுகவின் கூட்டணி கட்சிகள் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 7,620 பேரூராட்சி இடங்களில் அதிமுக 1,206 இடங்களில் வென்ற நிலையில், திமுக மட்டும் 4,388 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 500க்கும் மேற்பட்ட இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகளில் பாஜக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும்போது, பாஜக அதிசயங்களைச் செய்யும் என்று போட்டியாளர்கள் எதிர்பார்க்காத நிலையில், பாஜகவின் கருத்துகள் அதிகப்படியாக இருந்தன. ஆனால், பாஜக, ஒரு மாவட்டத்தில் மட்டுமே பலம் உள்ள கட்சியாகக் குறைக்கப்பட்டது; பாஜக வெற்றி பெற்ற மொத்தம் 308 இடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 200 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோவை மற்றும் பிற மேற்கு மண்டலங்களில் பாஜக போட்ட கணக்கு தவறாகிப் போயுள்ளது. அங்கே மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையிலான மாநிலக் கட்சித் தலைமை அண்மைய ஆண்டுகளில் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு நிறைய நேரத்தையும் வளத்தையும் முதலீடு செய்தது.
இருப்பினும், சென்னையில் காங்கிரசை தோற்கடித்து பெருநகர சென்னை மாநகராட்சியில் கணக்கை துவக்கியது உள்பட 28 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தங்கள் உறுப்பினர்கள் இருப்பு குறித்து பாஜக தலைவர்கள் பெருமை கொள்ளலாம்.
திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி
திமுகவின் வெற்றி பெருமை மதசார்பற்ற கூட்டணியைச் சேரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் மக்கள் மீண்டும் திமுகவைத் தேர்ந்தெடுத்தனர். அதில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக மற்றும் வைகோவின் மதிமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் வெற்றியின் பயனாளிகளாக உள்ளன.
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 இடங்களை வென்றுள்ளது. இதில் மாநகராட்சிகளில் 73 இடங்களும், நகராட்சிகளில் 151 இடங்களும், பேரூராட்சிகளில் 368 இடங்களும் அடங்கும்.
திமுக கூட்டணிக் கட்சிகளான சிபிஐ 58 இடங்களிலும், சிபிஎம் 166 இடங்களிலும், வைகோவின் தேமுதிக 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.