/tamil-ie/media/media_files/uploads/2019/07/D_PrD0lUIAEGA1k.jpg)
Aadhaar amendment Bill 2019
Aadhaar amendment Bill 2019 : தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான மசோதாக்களின் ஒன்று தான் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா (Aadhaar and Other Laws (Amendment) Bill). ஜூன் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 4ம் தேதி லோக் சபாவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூலை 8ம் தேதி ராஜ்யசபாவின் ஒப்புதல் பெற்றப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றம்.
இதன் முழுமையான ஆங்கில செய்தியைப் படிக்க : What are the latest changes to Aadhaar?
திருத்தப்பட்ட இந்த சட்டம், இந்தியர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பு அதன் உரிமையாளர்களிடம் முறையான ஒப்புதல் பெற வேண்டும் என்பதை நிறுவுகிறது. இதற்கு முன்பு, தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சேவைகளையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தனி நபர்கள் ஆதார் மற்றும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டும். ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் வரும் போது, Unique Identification Authority of India (UIDAI) வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி தங்களின் அடையாளத்தை ஆஃப்லைனில் உறுதி செய்து கொள்ளலாம்.
கடும் தண்டனை
இந்த மசோதாவில், ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்படும் என்றும், ஆதார் எண்களை பயன்படுத்தி தனி நபர்களின் ரகசியங்களை திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் இந்த திருத்த மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆதார் அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.