டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஐஏஎஸ் உட்பட அனைத்துப் பணியாளர்களின் பணியிடங்கள் மற்றும் இடமாறுதல்கள் உள்ளிட்ட நிர்வாக சேவைகளில் டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது துணை நிலை ஆளுனர், தலைமைச் செயலாளர் மற்றும் சேவைகள் துறையின் செயலாளர் ஆகியோர் கட்டுப்பாட்டில் இருந்தது.
இருப்பினும், இதில் சில வரம்புகள் உள்ளன.
எந்த ஐஏஎஸ் அதிகாரி தேசிய தலைநகருக்கு பணியமர்த்தப்படுவார் என்பதும் – எவ்வளவு காலம் வரை என்பதும் மையத்தின் தனிச்சிறப்பாக தொடரும்.
மேலும், உள்துறை போன்ற பதவிகள் மற்றும் DDA துணைத் தலைவர், MCD கமிஷனர் மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) தலைவர் போன்ற சில பதவிகள் குறித்தும் சில வரம்புகள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வரம்புக்கு அப்பாற்பட்ட நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு, துணை நிலை ஆளுனர் வரம்புக்கு உட்பட்டது என்று தீர்ப்பு தெளிவாகக் கூறுகிறது.
எனவே, துணை நிலை ஆளுனர் மூலம் தில்லி காவல்துறையைக் கண்காணிக்கும் உள்துறைச் செயலாளரையும், துணை நிலை ஆளுனருக்கு கீழ்ப்பட்ட DDA துணைத் தலைவரையும் நியமிப்பது இன்னும் மத்திய அரசின் முடிவிற்கு உட்பட்டது, என்றார் ஒரு அதிகாரி. இங்கு துணை நிலை ஆளுனரே DDA தலைவரும் ஆவார்.
சிவில் நிர்வாகத்தின் தலைவராக இருப்பதுடன், முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுனர் இடையே இணைப்பாகவும் செயல்படும் டெல்லியின் மிக மூத்த அதிகாரியான தலைமைச் செயலாளரின் நியமனம் மற்றொரு குறிப்பிடத்தக்க பிரச்சினை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பதவியால் 2015-ம் ஆண்டு நிர்வாக மோதல் ஏற்பட்டது.
வர்த்தக விதிகளின் பரிவர்த்தனையின்படி, மத்திய அரசு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, டில்லியின் தலைமைச் செயலாளரை நியமிப்பது தொடரும், இந்தத் தீர்ப்பு அதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர் இதில் முரண்பட்டார். சேவைகள் என்று வரும்போது டெல்லி மற்ற மாநிலங்களைப் போலவே இருக்கும் என்று தீர்ப்பு அடிப்படையில் கூறுகிறது. மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் அதிகாரிகளை நியமனம் அல்லது இடமாற்றம் செய்யும் நடைமுறை டெல்லியிலும் பின்பற்றப்படும்.
அதற்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தேவைப்பட்டால், நாங்கள் அதனை செய்வோம், என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.
எவ்வாறாயினும், மற்ற அனைத்து பணியிடங்கள் மற்றும் இடமாற்றங்களில், டெல்லி அரசாங்கத்தின் முடிவு இறுதியாக இருக்கும்.
தீர்ப்பில் உள்ள ஒரே மாற்றம் என்னவெனில், அகில இந்திய சேவைகள் மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகியவற்றைக் கையாளும் ஏழாவது அட்டவணையின் பிரிவு 70-ன் கீழ் வரும் ஐஏஎஸ் மற்றும் DANICS அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்களின் பதவிகள் மற்றும் இடமாற்றங்கள் டெல்லியின் NCTயின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் என்றார் அதிகாரி.
தில்லி அரசு வட்டாரங்களின்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பணி நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் தொடர்பான எந்தவொரு கோப்பும் நேரடியாக சேவைத் துறை செயலாளரிடமிருந்து தலைமைச் செயலருக்கும், பின்னர் துணைநிலை ஆளுனருக்கும் அனுப்பப்பட்டது.
யார் எங்கு பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதில் இருந்து அரசாங்கம் ஒதுக்கி வைக்கப்பட்டது. பெரும்பாலும், அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு தான் எங்களுக்கு தெரியவரும்… இன்றைய தீர்ப்புக்குப் பிறகு இது நிறுத்தப்படும், என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இப்போது நிர்வாகத்தில் மாற்றங்கள் குறித்து துணை நிலை ஆளுனருக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கும், மேலும் அவரது ஒப்புதலுக்காக காத்திருக்காது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வியாழன் அன்று, சேவைகள் துறை செயலாளரான ஆஷிஷ் மோரே பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.கே.சிங் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் துணை நிலை ஆளுனருக்கு தகவல் தெரிவித்ததாக அரசாங்கம் கூறியது.
டெல்லியின் NCT தொடர்பாக சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இந்த தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil