இந்திய அணு ஆயுதக் கொள்கை: ஒரு முழு நீளப் பார்வை

Nuclear No First Use Doctrine: உலக நாடுகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நியாயமான மற்றும் பாகுபாடற்ற அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும்.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை (NFU) என்ற அடல் பிஹாரி 2003 கோட்பாடை இதுவரை இந்தியா கண்டிப்புடன் கடைபிடித்து வந்துள்ள நிலையில், தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ இந்தக் கோட்பாடு எதிர்காலத்தில் என்ன ஆகிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது தான் அமையும் ” என்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை” என்ற கோட்பாடின் எப்படி வந்தது  :

ஜனவரி 4, 2003 அன்று, வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, நாட்டின் அணுசக்தி கொள்கையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூடியது. மேலும், அன்றே ஒளிவு மறைவுமின்றி இந்திய அனு ஆயுதக் கொள்கையில் உள்ள முக்கிய சாராம்சங்களை  இந்தியாவின் குடிமக்களுக்கு உரைத்தது.

அந்தக்  அணு ஆயுதக் கொள்கைகளில் மிக முக்கியமாக இருப்பது’  “முதலில் பயன்படுத்துவது  இல்லை” என்ற கோட்பாடே.

அதாவது  “இந்திய பிரதேசத்தின் மீது அல்லது இந்தியப் படைகள் மீது  அணுசக்தி தாக்குதல் பிற நாடுகள் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மட்டுமே இந்திய அரசு தனது அணு ஆயுதங்களை அந்நாட்டின் மீது  பயன்படுத்தப்படும்”.

ஆனால், பதிலடி மிகவும் அபாயகரமாகவும், கடும் சேதத்தை உருவாக்கும் தன்மையில் இருக்கும் என்பது அக்கோட்பாடின் இன்னொரு அம்சமாகும்.

மேலும், இந்தியாவின் அணு ஆயுதக் கோட்ப்பாடு இதையும் சொல்கின்றன:

(i) பிறநாடுகளின் மேல் அணு ஆயுத தாக்குதலுக்கான முடிவைகளை  இந்தியாவின் வெளிப்படையான குடிமை அரசியலுக்குள் கொண்டுவரப்படும் . அது, ராணுவத்தின் கையில் விடப்படாது. பிரதம மந்திரியின் தலைமையின் கீழ் செயல்படும் அணு கட்டளை ஆணையம் என்ற அமைப்பின் மூலமே, அணு ஆயுத தாக்குதல் தொடர்பான முடிவுகள் அங்கீகரிக்கப் படும்.

(ii) இந்தியா தனது  அணுத் தாக்குதலை, அணு ஆயுதம் இல்லாத நாடுகள் மீது பயன்ப்படுத்தாது.

(iii) அணுசக்தி மற்றும் ஏவுகணை தொடர்பான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றும். அணுவைப் பிளக்க உதவும் பிஸ்ஸைல் மெட்டீரியல் கட்டுப்படுத்தும்  ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கேற்கும். மேலும், அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடைகளை கவனித்தில் வைத்திருக்கும்.

(iv) அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க இந்திய தொடர்ந்து போராடும். உலக நாடுகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நியாயமான மற்றும் பாகுபாடற்ற   அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும்.

வாஜ்பாயின் அணு ஆயுதக் கோட்பாடை அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவும் ஒத்துக்கொண்டிருந்தலும், இந்தக் கோட்பாடை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை  பல சமயங்களிலும், பல சூழ்நிலைகளிலும்   எழுப்பப்பட்டு தான் வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு, அப்போது பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி யும் தனது தேர்தல் வாக்குறுதியில் “இந்தியாவின் அணுஆயுதக் கோட்பாடு புதிப்பிக்க வேண்டும், தேவைப்பட்டால் மாற்றப்படவேண்டும்” என்று சொல்லி இருந்தார். இருந்தாலும், பதவிக்கு வந்த பின்னர் அதே பிரதமர்,  “தற்போது நடைமுறையில்  இருக்கும் அணு ஆயுதக் கோட்பாடு இந்தியாவின் கலச்சாரத் தன்மையை பிரதிபலிப்பதாகவே உள்ளது”, என்று தெரிவித்தார்.

2016-ல் இந்தியவின் பாதுக்காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்                    இந்தியாவின் அணு ஆயுத கோட்பாடு கேள்வியாக்கப்பட வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் இந்த கோட்பாடு பயன்படாது என்று தெரிவித்தார்.

மேலும்,” இது அரசின் கொள்கை இல்லை, எனது தனிப்பட்ட கருத்து. நாம் ஏன் நம்மளுக்கே கட்டுப்பாடு வைக்க வேண்டும். நாம் ஏன் அணு ஆயுதத்தை   முதலில் பயன்படுத்தமாட்டேன் என்ற வாக்குறிதியைக் கொடுக்க வேண்டும், ” என்பது போல் அவரது வாதங்கள் இருந்தன .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close