மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட காப்பக ரேடார் படங்களின் புதிய பகுப்பாய்வு, முதன்முறையாக பூமியின் டிவின் என்று அழைக்கப்படும் வீனஸின் மேற்பரப்பில் சமீபத்திய எரிமலை செயல்பாட்டின் நேரடி புவியியல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. சுமார் எட்டு மாதங்களில் எரிமலை வென்ட் அதன் வடிவத்தை மாற்றி பெரியதாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர் என்று நாசா கூறியுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள், கடந்த வாரம் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளது. ‘மெகல்லன் பணியின் போது வீனஸ் எரிமலையில் காணப்பட்ட மேற்பரப்பு மாற்றங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வெளியானது. அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) புவி இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் ஹெரிக் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (அமெரிக்கா) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) ஸ்காட் ஹென்ஸ்லி ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
பல ஆண்டுகளாக, ஏராளமான எரிமலைகள் வீனஸை உள்ளடக்கியதாக விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவற்றில் ஏதேனும் இன்னும் செயலில் உள்ளதா என்பதைக் காட்ட இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஹெரிக், வீனஸ் எதிர்கால வெடிப்புகளைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிந்திந்தனர். எவ்வாறாயினும், எத்தனை முறை வெடிப்புகள் நிகழ்கின்றன என்பது தெரியவில்லை, மேலும் வீனஸ் பூமிக்கு அருகில் இருப்பதை நாம் இப்போது அறிவோம், இருப்பினும் ஒரு தரவுத் தொகுப்பில் இருந்து விரிவுபடுத்த வேண்டும்.
கண்டுபிடிப்புகள் என்ன?
1990 மற்றும் 1992-க்கு இடையில் நாசாவின் மாகெல்லன் விண்கலம் எடுத்த வீனஸின் படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அவர்கள் ஆய்வின் போது, கிரகத்தின் அட்லா ரெஜியோ பகுதியைப் பார்த்தனர். அங்கு வீனஸின் இரண்டு பெரிய எரிமலைகளான
ஓசா மோன்ஸ் மற்றும் மாட் மோன்ஸ் அமைந்துள்ளது தெரியவந்தது. இந்த எரிமலை செயலில் இருப்பது போல் தெரிந்தது. அதன் வடிவத்தில் மாற்றம் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
பிப்ரவரி ரேடார் படத்தில், இந்த வென்ட் பகுதி 2.6 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய செங்குத்தான சுவர்களுடன் கிட்டத்தட்ட வட்டமாகவும் ஆழமாகவும் தோன்றியது. எவ்வாறாயினும், எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், அதே வென்ட் 3.9 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும் போது, வெளிப்புறத்தில் ஒழுங்கற்றதாகவும், ஆழமற்றதாகவும், கிட்டத்தட்ட நிரம்பியதாகவும் இருந்தது. இது வென்ட்டின் அடியில் மாக்மாவின் வெடிப்பு அல்லது ஓட்டத்தைக் குறிக்கிறது.
மெக்ல்லன் விண்கலத்தின் ரேடார் படங்களை ஹெரிக் நூற்றுக்கணக்கான மணிநேரங்களுக்கு ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் புதிய கண்டுபிடிப்புகள் எளிதில் வரவில்லை. இந்த படங்கள் இன்று விண்கலத்தில் இணைக்கப்பட்ட கேமராக்களால் எடுக்கப்பட்ட படங்களை விட மிகக் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை மற்றும் ஒப்பீட்டளவில் மிகவும் கடினமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/