Advertisment

போர்த்துகீசியர்களை தடுத்து நிறுத்திய போர் ஹீரோக்கள்; பெரும் எதிர்பார்ப்புகளை சுமக்கும் மலையாள சினிமா

மரக்கர்கள் சிறிய கப்பல்களைப் பயன்படுத்தினர். இதனால் சமையம் பார்த்து, போர்த்துகீசிய கப்பல்களை எளிதில் சுற்றி வளைத்து, எர்திராளிகளை தாக்க முடிந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போர்த்துகீசியர்களை தடுத்து நிறுத்திய போர் ஹீரோக்கள்; பெரும் எதிர்பார்ப்புகளை சுமக்கும் மலையாள சினிமா

விஷ்ணு வர்மா

Advertisment

பிரபல நடிகர் மோகன்லால் நடித்துள்ள அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மரக்கர்: அரேபிய கடலின் சிங்கம்) என்ற திரைப்படம்  கேரளாவிலும், இந்தியாவின் பல இடங்களிலும் வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர், வரலாற்று நிகழ்வுகள் திருத்திக் கூறப்பட்டுள்ளதாகவும்,படத்தை வெளியிட்டால் வரலாறு சிதைக்கப்படுமென்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

படம் எதைப் பற்றியது?

மரக்கர் குலத்தின் வீரங்களை சித்தரிக்கும் ஒரு போர் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் கோழிகோடு இராச்சியத்தின் கடற்படைத் தலைவர்களாக இருந்தனர். சாமோரின் (மலையாளத்தில்- சமூத்திரி) என்பது மலபார் கடற்கரையில் அமைந்திருந்த கோழிகோடு ராஜ்யத்தின் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பு. ஒரு நூற்றாண்டு காலமாக மரக்கர்கள் போர்த்துகீசிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக போராடினர்.

மரக்கர்கள் யார்?

சில கணக்குகளின் படி,அவர்கள் அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். துனிசியா வழியாக கொய்லாண்டி அருகில் இருக்கும் பந்தலயானியில் குடிபெயர்ந்தனர். பின்னர், தற்போதைய கோட்டக்கல், மற்றும் திக்கோடி சுற்றியுள்ள பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.

கொச்சின் இராச்சியத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர்களின் சந்ததியினர் தான் மரக்கர்கள் குலமென்றும்,பின்னர் காலத்தில் கோழிகோடு சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் குடிபெயர்ந்தனர் என்ற மாற்று வரலாறும் உண்டு.

வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணன் கூறுகையில், கடற்கரை பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள், கப்பல்களைப் பயன்படுத்துவது வழக்கம். எனவே ‘மரக்கர்’ என்ற பெயர் மரம் அல்லது மரக்கலம் என்பதில் இருந்தது தோன்றியிருக்கலாம். மாறாக, மரக்கர் என்ற பெயர் 'மார்காபா' என்ற அரபு வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம்.  மார்காபா என்பதற்கு கப்பல்கள் வழியாக குடியேறியவர்கள் என்று பொருள். "மரக்கர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள்கள். இருப்பினும், சில பகுதிகளில் அவர்கள் இந்துக்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்" என்றும் நாராயணன் தெரிவித்தார்.

 

போர்த்துகீசியர்கள் எதிரான போர் எதைப் பற்றியது?

படையெடுக்கும் போர்த்துகீசிய கப்பல்களின் அச்சுறுத்தலை, எதிர்கொண்ட சாமோரின், தனது கடற்கரையை பாதுகாக்க மரக்கர்களின் உதவியை நாடினார். மரக்கர்கள் 'குஞ்சலி' என்ற பட்டத்துடன் தலைமை கடற்படை தளபதியாக  நியமிக்கப்பட்டனர்.

குஞ்சலி மரக்கர் I, (1507 இல் நியமிக்கப்பட்டார்), குட்டி போக்கர் (குஞ்சலி மரக்கர் II), பத்து மரக்கர் (குஞ்சலி மரக்கர் III) முஹம்மது அலி மரக்கர் (குஞ்சலி மரக்கர் IV, 1595 இல் நியமிக்கப்பட்டார்) அடுததுத்து கடற்படை தளபதியாக இருந்தனர்.

“மரக்கர்களின் யுக்தி கிட்டத்தட்ட கொரில்லா போருக்கு ஒத்ததாக இருந்தது. போர்த்துகீசியர்கள் கப்பல்கள் மிகப் பெரியதாக இருக்கும். எனவே கடலில் எளிதில் திரும்பும் திறன் அவைகளுக்கு இல்லை. ஆனால், மரக்கர்கள் சிறிய கப்பல்களைப் பயன்படுத்தினர். இதனால் சமையம் பார்த்து, போர்த்துகீசிய கப்பல்களை எளிதில் சுற்றி வளைத்து, தாக்க முடிந்தது,"என்று நாராயணன் தெரிவித்தார்.

100 ஆண்டு காலப்பகுதியில், குஞ்சலி மரக்கர்களின் வளர்ச்சியால், கோழிகோடு மற்றும் இதர ராஜ்யங்களின்  கடற்படை வசதிகள் மேம்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் சவுராஷ்டிராவிலிருந்து இலங்கை கடற்கரை வரை இவர்களின் தாக்கம் இருந்தது. போர் தொழில்நுட்பங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பெரிதும் மேம்பட்டன.

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ‘அரேபிய கடலின் சிங்கம்’ யார்?

படத்தில் குஞ்சலி மரக்கர் IV-க மோகன்லால் நடிக்கிறார். போர்த்துகீசியக் கப்பல்கள் மீதான கடுமையான தாக்குதல், போர்த்துகீசியர்களுக்கு எதிரான போராளிகளை ஒருங்கிணைத்தல் போன்ற முஹம்மது அலி மரக்கரின் செயல்கள் வரலாற்றில் அதிகம் பேசப்பட்டவை.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க: Explained | War heroes who resisted Portuguese: The mega film Kerala is talking about

1595 ஆம் ஆண்டில் குஞ்சலி மரக்கர் IV, கடல் தளபதியாக பொறுப்பேற்ற காலத்தில், சாமோரின் மற்றும் மரக்கர்களுக்கிடையிலான உறவுகள் மோசமடைந்து இருந்தது. குஞ்சலி மரக்கர் IV மிகவும் வலிமை அடைந்துவருவதாக உணர்ந்த சாமோரின் பதற்றமடைந்தார். மேலும் மரக்கர் IV, வலுவான  முஸ்லீம் சாம்ராஜ்யத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியும் சாமோரின் காதுகளுக்கு சென்றது (இந்த செய்தியை, போர்த்துகீசியர்கள் திட்டமிட்டு  பரப்பியதாகவும்  கூறப்படுகிறது).

1597 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்களுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாமோரின், கோட்டக்கல் கோட்டையைத் தாக்கினார். ராச்சியத்தின் நாயர் சிப்பாய் வீரர்களும்,போர்த்துகீசிய கடற்படையினரும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலை மரக்கர்கள் துணிச்சலாக எதிர்கொண்டனர்.  இறுதியில், போர்ச்சுகல் தனது படைகளை அதிகளவில் அனுப்பியதாலும்,சாமோரின் படைகள் தங்களது முயற்சிகளை துரிதபடுத்தியதாலும், உயிரை பறிக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தின் படி குஞ்சலி மரக்கர் IV எதிர் படைகளிடம் சரணடைந்தார். இருப்பினும், போர்த்துகீசியர்கள் விதிமுறைகளை மீறி, அவரைக் கைது செய்து, கோவாவுக்கு அழைத்துச் சென்று தலை துண்டித்தனர்.

 ஏன் மனு தாக்கல் செய்யப்பட்டது? மரக்கர் குலத்தின் வம்சாவளியாக தன்னை அடையாளம் காட்டிய மனுதாரர் (கொய்லாண்டியைச் சேர்ந்த முஃபீதா அராபத் மரக்கர்), வரலாற்று நிகழ்வுகள் படமாக வெளியிடப்படுவதால்  மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தவறாக வழிநடத்தபடுவார்கள் என்று  மனுவில் தெரிவித்து இருந்தார்.

மனுவில், படத்தில் மிகுந்த சர்ச்சைகள் என்று இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குஞ்சலி மரக்கர் IV காதல் ஆர்வம் கொண்டவராக  இந்த படத்தில் காட்டப்படுகிறது. ஆனால், இதை மெய்பிக்க வரலாற்றில் எந்த சுவடும் இல்லை.

அவரது தலைப்பாகையில் விநாயகர் படம் வரையபட்டுள்ளதாக காட்டப்படுகிறது; ஆனால், குஞ்சலி மரக்கர் IV உண்மையில் தெய்வ உருவங்களை ஏற்காத  ஒரு பக்தியுள்ள முஸ்லீம்' என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை நிறுத்திவைக்க  மறுத்து விட்டது. மேலும், திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் மனுதாரின் புகாரை மத்திய அரசிடம் ஒப்படைத்தீர்களா என்று உயர்நீதிமன்றம் வினவியது. இது கலை சார்ந்த விஷயம்,  திரைப்பட தயாரிப்பாளர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று வாரியம் பதில் தெரிவித்தது.

Mohanlal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment