Advertisment

சூரியனுக்கு அருகில் செல்லும் வழியில் டிராஜெக்டரி கரெக்ஷன் செய்த ஆதித்யா எல்.1: இது என்ன, எப்படி செய்வது?

ஆதித்யா எல்.1 விண்கலம் விண்வெளியில் 110 நாள் பயணம் செய்ய உள்ளது. 2013-2014 இஸ்ரோவின் செவ்வாய் திட்டத்திற்குப் பிறகு இந்திய விண்கலத்தின் மிக நீண்ட பயணங்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு ஏன் டிராஜெக்டரி கரெக்ஷன் சூழ்ச்சி தேவைப்படுகிறது?

author-image
WebDesk
New Update
Aditya L1 Exp.jpg

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தனது விண்கலமான ஆதித்யா எல்.1-க்கான பாதை திருத்தும் சூழ்ச்சியை (டிசிஎம்) மேற்கொண்டதாக அறிவித்தது, இது சூரியன் பூமி லாக்ராஞ்சியன் புள்ளி 1 இல் இலக்கை அடைவதை உறுதி செய்கிறது.

Advertisment

ஆதித்யா எல்.1 விண்கலம் விண்வெளியில் 110 நாள் பயணம் செய்ய உள்ளது.  இது 2013-2014 செவ்வாய் பயணத்திற்குப் பிறகு இந்திய விண்கலத்தின் மிக நீண்ட பயணங்களில் ஒன்றாகும். 17 நாட்கள் பூமியைச் சுற்றி வந்த ஆதித்யா எல்.1 கடந்த செப்டம்பர் 19 அன்று சன்-எர்த் எல்.1 புள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. 

இந்நிலையில், ஆதித்யா L1 க்கு டி.எம்.சி ( Trajectory Correction Maneuver) அவசியம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

நீண்ட தூரப் பயணங்களுக்கு விண்கலம் அதன் இலக்கை நோக்கிச் செல்வதை உறுதி செய்ய, orbit determination calculations பயன்படுத்தி பாதைத் திருத்தத் திட்டங்கள் செய்வது அவசியமாகிறது. 

டிராஜெக்டரி கரெக்ஷன் சூழ்ச்சி 

ஆதித்யா எல்.1 விண்கலம் சன்-எர்த் எல்.1 சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது. இந்த இலக்கை அடைய, விண்கலம் திட்டமிட்ட பாதையில் பயணிக்க வேண்டும்.

செப்டம்பர் 19 அன்று விண்கலம் அதன் இலக்கான எல்.1 சுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டது. Trans Lagrangian Point 1 இன்செர்ஷன் செய்யப்பட்டது. அப்போது பாதையில் பிழைகள் இருக்கலாம், இதற்கு திருத்தம் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி எம். அண்ணாதுரை கூறுகையில், சந்திரன் போன்ற அருகிலுள்ள இடங்களுக்கு விண்கலம் அனுப்பபடும் போது 1 வார காலத்தில் செய்யலாம். ஆனால் நீண்ட தூர பயணங்களுக்கு  முடிந்தவரை சீக்கிரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.  

https://indianexpress.com/article/explained/explained-sci-tech/aditya-l1-corrects-trajectory-why-how-was-this-done-8973882/

“ஆதித்யா எல்.1 நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது. தொடக்கத்தில் ஒரு சிறிய விலகல் இருந்தால், ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மேல், தாக்கங்கள் இருக்கலாம்” என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.

சிறிய திருத்தம் (Smaller corrections) தேவைப்பட்டால் விண்கலத்தின் உள்ள என்ஜினை சிறிது நேரம் இயக்க வைக்கப்படும். இதன் மூலம்  எரிபொருள் சேமிக்கப்படும்.  பெரிய அளவிளான திருத்தங்களுக்கு என்ஜின் நீண்ட நேரம் இயக்கப்படும் என்று கூறினார். 

எனினும்  “எவ்வளவு திருத்தம் தேவை என்பதை நாம் மதிப்பிட வேண்டும். இது நீங்கள் நிரப்ப விரும்பும் பெட்ரோலை மதிப்பிடுவது போன்றது” என்று அண்ணாதுரை கூறினார்.

ஆதித்யா எல்.1 அடைய வேண்டிய சுற்றுப்பாதை என்ன?

ஜனவரி 2024 இன் இரண்டாவது வாரத்தில் அது L1 புள்ளியை அடையும் போது, ​​ஆதித்யா-L1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமநிலையான ஈர்ப்பு இடமான L1 ஐச் சுற்றி வருவதற்கு ஒரு சூழ்ச்சியை மேற்கொள்ளும்.

பூமி- சூரியனை இணைக்கும் கோட்டில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

L1 சுற்றுப்பாதையைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு சவாலாகக் கருதப்படுகிறது, மேலும் விண்கலத்தின் பணி வாழ்க்கையில் இயந்திரங்களைச் இயக்கச் செய்வதன் மூலம் சில பாடத் திருத்தங்கள் தேவைப்படலாம்.

"இது ஒரு கிரக உடலைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை போன்றது அல்ல. சுற்றுப்பாதைக்கு மூன்று பரிமாணங்கள் உள்ளன, அதே சமயம் ஒரு கிரகத்தைச் சுற்றியுள்ள மற்ற சுற்றுப்பாதைகள் பூமத்திய ரேகை அல்லது துருவத்தில் இரு பரிமாணமாக இருக்கும். இரண்டு புவியீர்ப்புகளும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, மேலும் இழுத்தல் மற்றும் தள்ளுதல் ஆகியவை உள்ளன, ”என்று ஒரு இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.

இஸ்ரோ இதற்கு முன் எப்போது டி.சி.எம் செய்தது?

இந்த டி.சி.எம் செயல்முறை எப்போதும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களுக்கு மட்டுமே செய்யப்படும். 

செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டத்தில் (மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்) 3 முறை டி.சி.எம் செய்யப்பட்டது.  செவ்வாய்க் கோளில் இருந்து 500 கி.மீ (பிளஸ் அல்லது மைனஸ் 60 கி.மீ) தூரத்தை அடைய செவ்வாய் சுற்றுப்பாதைகள் சரியான பாதையை அடைவதை உறுதி செய்வதற்காக இந்த சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருத்தச் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், விண்கலம் 723 கி.மீ., தூரம் பெரியாப்சிஸை அடைந்திருக்கும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் அப்போது தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment