Advertisment

சூரியன் குறித்த ஆய்வு: இஸ்ரோ சந்திக்கும் சவால்கள் என்ன?

ஆதித்யா-எல் 1 என பெயரிடப்பட்ட இந்த திட்டம், சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூரியன் குறித்த ஆய்வு: இஸ்ரோ சந்திக்கும் சவால்கள் என்ன?

ஆகஸ்ட் 12, 2018 அன்று நாசாவால் ஏவப்பட்ட பார்கர் சோலார் புரோப் ஆய்வு, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று பெரிஹேலியன் என்று சொல்லப்படும் அதன் நான்காவது நெருங்கிய அணுகுமுறையை (flybys) அடைந்தது.

Advertisment

இது ஏன் இந்தியாவுக்கு முக்கியமானது ?

அடுத்த ஆண்டு சந்திரனை நோக்கி மீண்டும் ஒரு விண்வெளி பயணம், 2022 இல் திட்டமிடப்பட்ட முதல் இந்தியர்கள் விண்வெளி பயணம் (உள்நாட்டு கட்டமைப்பால்) போன்ற திட்டங்களுடன் இஸ்ரோ சூரியன் பற்றி ஆய்வுக்கு அதன் முதல் அறிவியல் பயணத்தை அனுப்பத் தயாராகி வருகிறது.

ஆதித்யா-எல் 1 என பெயரிடப்பட்ட இந்த திட்டம் , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும்.

இஸ்ரோ இந்த ஆதித்யா எல் 1 ஐ 400 கிலோ வகுப்பு செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகிறது.  இது எக்ஸ்எல் உள்ளமைவில் (XL Configuration) துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை  (பிஎஸ்எல்வி) பயன்படுத்தி ஏவப்படும்.

இந்த விண்வெளி அடிப்படையிலான ஆய்வகத்தில் ஏழு கருவிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் சூரியனின் கொரோனா, சூரிய உமிழ்வு, சூரிய காற்று,கொரோனல் மாஸ் எஜெக்சன்ஸ் (சிஎம்இ) ஆகியவற்றைப் படிக்கமுடியும்

இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA),  இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்  (IISER)  போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ  இந்த பணிகளை மேற்கொள்கிறது. பங்கேற்கும் அனைத்து அறிவியல் நிறுவனங்களும் தற்போது அந்தந்த கருவிகளை உருவாக்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளன. செப்டம்பர் 2015 இல் ஏவப்பட்ட  ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோளிற்கு (AstroSat) பின் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி அடிப்படையிலான ஆய்வகப் பணி இதுவாகும்.

இந்த ஆதித்யா-எல் 1 திட்டத்திற்கு மிகவும் சவாலாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று தூரம் (பூமியிலிருந்து சூரியனின் தூரம் 149 மில்லியன் கி.மீ, பூமியிலிருந்து சந்திரனின் தூரம் 3.84 லட்சம் கி.மீ மட்டுமே )  இரண்டாவது, சூரிய வளிமண்டலத்தில் இருக்கும் அதீத வெப்ப வெப்பநிலையும், கதிர்வீச்சும்.

சூரியன் தொடர்பான ஆய்வு ஏன் முக்கியம்?  சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களின் பரிணாமங்களையும் (நமது பூமி உட்பட ), ஏன்? சூரிய மாண்டலத்தை தாண்டி இயங்கும்  கோள்களையும் சூரிய விண்மீன் தான் நிர்வகிக்கின்றது.

சூரிய வானிலை,சுற்றுச்சூழல், சூரியனுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் நடக்கும் செயல்முறைகளால் ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தின் வானிலையைப் பாதிக்கும்.

இந்த சூரிய வானிலை மாறுபாடுகளினால் நாம் அனுப்பியிருக்கும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகளை மாற்றியமைக்கலாம், அல்லது அவற்றின் ஆயுளைக் கூட குறைக்கலாம்.

செயற்கைக்கோளில் இருக்கும் மின்னணு கருவியிலை சேதப்படுத்தலாம். இதன்மூலம் உலகில் மின்சாரம் இருட்டடிப்பு போன்ற பிற இடையூறுகளும் ஏற்படுத்தும். எனவே, சூரிய வானிலை புரிந்து கொள்ள சூரிய நிகழ்வுகளின் அறிவு முக்கியமானது. பூமியை நோக்கி வரும் சூரியப்புயல்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றின் தாக்கத்தை கணிக்கவும், தொடர்ச்சியான சூரிய ஆய்வுகள் தேவை.

பூமியை நோக்கி சூரியனில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு சூரிய புயலும் லாக்ரேஞ்ச் புள்ளி ஒன்றின் (எல்-1) வழியாக செல்லும். மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன. எனவே ஆதித்யா-எல் லாக்ரேஞ்ச் புள்ளி  ஒன்றில் இருந்து சூரியனைப் படம் பிடித்து ஆய்வு செய்யும். ஒரு விண்கலம் நிலையாக இருக்க தேவையான எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க இந்த லாக்ரேஞ்ச் புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

ஆதித்யா எல்-1 எந்த வகையான வெப்பத்தை எதிர்கொள்ளும்?

பார்க்கர் சோலாரின் ஜனவரி 29 சுழற்சியின் மூலம் சூரியனுக்கு அருகில் சென்ற விண்கலம் என்று பெயரெடுத்துள்ளது.

கம்ப்யூட்டர் மாடலிங் மதிப்பீடுகள், ஆய்வின் விண்கலத்தில் அமைந்திருக்கும் வெப்பக் கவசத்தின் வெப்பநிலை 612 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.  இருப்பினும், வெப்பக் கவசத்தின் பின்னால் இருக்கும்  கருவிகள் சுமார் 30 ° C ஆக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் சூரியனை மிகவும் நெருங்கிய நிலையில் செல்லும்போது, கவசத்தின் வெப்பநிலை 1370 C வெப்பநிலை இருக்கும் யென்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆதித்யா எல் 1 சூரியனை விட வெகு தொலைவில் இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பம், கவசத்தின் உள்ள கருவிகளுக்கு ஒரு பெரிய கவலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment