scorecardresearch

ஆப்கானிஸ்தான் அரசுடன் ராஜதந்திர உறவை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி

Afghanistan: To keep foot in diplomatic door, Delhi opens window: ஆப்கானிஸ்தானுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பும் இந்தியா; நல்லுறவை பேண விருப்பம்

ஆப்கானிஸ்தான் அரசுடன் ராஜதந்திர உறவை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி

ஆப்கானிஸ்தானுக்கு மருந்துகளை அனுப்பியதன் மூலம், மத்திய அரசு அதன் நோக்கத்தை தெளிவாக்கியுள்ளது: புதிய தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு ஜன்னலை திறந்து ராஜதந்திர வாசலில் கால் வைக்க விரும்புகிறது.

தாலிபான் ஆட்சிக்கும் ஆப்கானிஸ்தானின் மக்களுக்கும் இடையில் வேறுபாடு காண்பதற்கான அரசியல் அழைப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டது: ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் ஏஜென்சிகள் மூலம் மத்திய அரசு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புகிறது. உலக சுகாதார அமைப்பின் மூலம் மருந்துகளும் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவு தானியங்களையும் ஆப்கானுக்கு இந்தியா அனுப்புகிறது.

இருப்பினும், ஆப்கானிஸ்தானின் “அரசாங்கம்” மற்றும் “மக்கள்” ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை உருவாக்குவது, செய்வதை விட எளிதானது.

ஐ.நா. ஏஜென்சிகளுக்கான அணுகலை தாலிபான்கள் எவ்வளவு இறுக்கமாக கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த நான்கு மாதங்களில் அல்லது அதற்கு மேலாக, மத்திய அரசு தாலிபான் தலைவர்களுடன் அளவீடு செய்யப்பட்ட, மறைமுக உரையாடல்களில் கவனமாக ஈடுபட வேண்டியிருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற செல்வாக்கு மிக்க நாடுகளில் இந்தியாவும் கடைசியாக இருந்தது. கத்தாரில் உள்ள இந்தியத் தூதர் தீபக் மிட்டல், ஷேர் முகமது ஸ்டானெக்சாய் (இந்திய இராணுவ அகாடமி, டெஹ்ராடூனில் பயிற்சி பெற்றவர், பின்னர் துணை வெளியுறவு அமைச்சர்) தலைமையில் தாலிபானின் தோஹா அலுவலகப் பிரதிநிதிகளை அதிகாரப்பூர்வமாக சந்தித்தனர்.

அந்த சந்திப்பிலிருந்து தாலிபான்கள், “மனிதாபிமான உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என்று வரும்போது, ​​இந்தியாவின் உதவி வரவேற்கத்தக்கது” என்று அடிக்கோடிட்டுக் காட்டியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

உண்மையில், தீபக் மிட்டல் மற்றும் ஸ்டானெக்சாய் இடையேயான சந்திப்பில், கடந்த 20 ஆண்டுகளில் $3 பில்லியன் அளவிற்கான இந்தியாவின் திட்டங்கள் “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” மற்றும் “இந்தியா ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்று தாலிபான்கள் விரும்புகிறது” என தாலிபான் அதிகாரிகள் தெளிவாகக் கூறினர்.

தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் மாகாணங்களில் உள்ள உள்ளூர் எதிர்ப்புக் குழுக்களுடன் இந்தியத் தூதரகத்தின் செயல்பாடு, 34 மாகாணங்களில் சில நல்லெண்ணங்களை உருவாக்கியது என்று தாலிபான் அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.

ஆனால் அடித்தளத்திற்கான முக்கிய கேள்வி என்னவென்றால்: இந்தியாவின் சிவப்புக் கோடுகளில் சமரசம் செய்யாமல் தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானுடன் எவ்வாறு இராஜதந்திர உறவை மேம்படுத்துவது என்பதுதான்.

செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் அந்த சிவப்புக் கோடுகள் உச்சரிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு முதல்முறையாக, மோடி ஆப்கானிஸ்தானில் புதிய “அமைப்பை” “ஏற்றுக்கொள்வது” குறித்து கேள்விகளை எழுப்பினார். மேலும் அதிகார மாற்றம் உள்ளடக்கியதாக இல்லை மற்றும் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் நடைபெற்றது என்றும் கவலை தெரிவித்தார்.

“பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் பிரதிநிதித்துவமும் முக்கியமானது” என்றும் பிரதமர் கூறியிருந்தார். புதிய ஆட்சியின் “அங்கீகாரம்” பற்றிய முக்கியமான கேள்விக்கு “சிந்தனை மற்றும் கூட்டு முறையில்” ஒரு முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது இந்தியாவின் இராஜதந்திர அமைப்புக்கு புதிய ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகவும் அதிகமான தடையை ஏற்படுத்தியது. இருப்பினும், காபூலில் உள்ள தாலிபான்கள் இயல்பாக இருந்தனர். அவர்கள் மோடியின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றவில்லை, மற்றும் அண்டை நாடுகளின் உதவி குறித்து கேட்டபோது, வரவேற்கத்தக்கது என்று அறிக்கைகளை வெளியிட்டனர்.

அக்டோபர் தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் பிராந்திய பாதுகாப்பு உரையாடல் மூலம் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டது மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட எட்டு நாடுகளின் NSA களின் கூட்டத்தை நவம்பர் 10 அன்று ஏற்பாடு செய்தது.

பிராந்திய பாதுகாப்பு முன்னுதாரணத்திலிருந்து ஆப்கானிஸ்தானை நோக்கிய இந்தியாவின் முதல் இராஜதந்திர உறவு இதுவாகும். செப்டம்பர் 17 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உரையாற்றியபோது, ஒருமுறை கூட தாலிபான் பெயரைக் குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தானில் உறுதியற்ற தன்மையும் அடிப்படைவாதமும் தொடர்ந்தால், அது “உலகம் முழுவதும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு வழிவகுக்கும்” என்று மோடி கூறினார்.

இந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்திய என்எஸ்ஏ நடத்திய மாநாட்டின் போது எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும் இதுகுறித்து தாலிபானுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. எதிர்பார்த்தபடி, சீனாவும் பாகிஸ்தானும் அதைத் தவிர்த்துவிட்டன.

அதே நேரத்தில், அக்டோபர் தொடக்கத்தில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்ப இந்தியா தனது நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச் செல்லும் 5,000 டிரக்குகள் பாகிஸ்தான் வழியாக செல்ல வேண்டி இருந்ததால், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இந்தியா கோரிக்கை அனுப்பியது.

இது தாலிபான்களுக்கு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் மாஸ்கோ பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுக்கு ஒரு முக்கிய உதவியாளராகக் காட்டிக் கொள்ளும் ஒரு இடத்திற்கு தள்ளியது. எனவே, தாலிபான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தபோது, ​​இம்ரான் கானுக்கு இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை அனுமதிக்கும் திட்டத்தை “சாதகமாக பரிசீலிப்பதாக” அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மத்திய அரசைப் பொறுத்தவரை, தாலிபான்கள் மற்றும் மக்களுடன் உறவை மேம்படுத்தும் இந்த இரட்டைப் பாதை சிக்கலான முறையாகும், ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பானது என்எஸ்ஏ அஜித் தோவல் தலைமையில் உள்ளது மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இராஜதந்திர வியூகம் ஆகியவற்றால் இது சிக்கலானதாகும்.

ஐரோப்பிய, வளைகுடா மற்றும் ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய சக்திகள் தாலிபான்களுடன் உறவை மேம்படுத்து தொடங்கியுள்ளன, இங்குள்ள அதிகாரிகள் தாலிபானுடனான உறவை “செயலற்ற நிலைக்கு” விட்டுவிட முடியாது மற்றும் “நதியை அதன் சொந்த போக்கில் அனுமதிக்க முடியாது.” என்று கூறுகின்றனர்.

இந்த மருந்துகளை அனுப்புவது தோஹா மற்றும் காபூலில் வெளிவரும் இராஜதந்திர செயல்முறையின் ஒரு பகுதியாக மாறுவதற்கான முதல் படியாகும்.

இருப்பினும், டெல்லியைப் பொறுத்தவரை, “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு” உதவுவதில் சவால்கள் எஞ்சியுள்ளன: ஆப்கானியர்களுக்கு இ-விசா வழங்குவது பற்றிய கேள்வி (மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், இந்திய நண்பர்கள்; இதுவரை 200 இ-விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன); சல்மா அணை அல்லது புல்-இ-கும்ரி மின் உற்பத்தி நிலையம் போன்ற இந்தியாவால் கட்டப்பட்ட திட்டங்களின் பராமரிப்பு.

பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், டெல்லியின் கவலைகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை விட்டுச் செல்வது மற்றும் “ஸ்திரமின்மையின் ஆபத்து” ஆகியவை அடங்கும்.

ஆனால், இப்போதைக்கு, மனிதாபிமான உதவியின் “வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக”, மருத்துவப் பொருட்களுடன், தாலிபான்களுடன் உறவாடுவதற்கு தயங்குவதில்லை என்பதை டெல்லி தெளிவுபடுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Afghanistan diplomatic door delhi opens window