கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த ‘மோஸ்ட் வான்ட்டட்’ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) ஏஜென்சிகள் அவ்வப்போது தங்களது ‘அதிகம் தேடப்படும்’ குற்றவாளிகளின் பட்டியல்களை வெளியிடுகின்றன. இந்தியாவில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 2018 இல் ‘மோஸ்ட் வாண்டட்’ பட்டியலை வெளியிட்டது. 2011 வரை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை ‘உலகின் மோஸ்ட் வாண்டட்’ பட்டியலை வெளியிட்டது.
உலகின் ‘மோஸ்ட் வாண்டட்’ பெயர்கள் சில இதோ,
அய்மான் அல்-ஜவாஹிரி
அய்மான் அல்-ஜவாஹிரி தலைக்கு 25 மில்லியன் வரை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RFJ தளத்தில் அவரை “அல்-கொய்தா பயங்கரவாத குழுவின் தற்போதைய தலைவர் மற்றும் எகிப்திய இஸ்லாமிய ஜிகாத்தின் முன்னாள் தலைவர்” என்று விவரிக்கிறது. ஆகஸ்ட் 7, 1998 கென்யா மற்றும் தான்சானியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் அய்மான் அல்-ஜவாஹிரிக்கு பங்கு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் மற்றும் பிறருடன் அல்-ஜவாஹிரி இந்த சதி திட்டம் தீட்டியதாக செய்ததாக நம்பப்படுகிறது. “2000 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி யேமனில் USS Cole மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 17 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டனர். 39 பேர் காயம் அடைந்தனர். மேலும் செப்டம்பர் 11, 2001ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலிலும், பங்காற்றி இருக்கிறார். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
தகவலின் படி, “அல்-ஜவாஹிரி இப்போது அல்-கொய்தாவை வழி நடத்துகிறார்… “தெற்காசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அதன் துணை அமைப்புகள் மூலம் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகள் மீதும் எதிராக தாக்குதல்களை நடத்துவதில் உறுதியாக உள்ளன.
மேலும், “அல்-ஜவாஹிரி தொடர்ந்து செய்திகளைப் பதிவுசெய்து பரப்புகிறார்”, அமெரிக்காவிலோ அல்லது கூடுதல் வெளிநாடுகளிலோ தாக்குதல்களைத் திட்டமிடலாம் என்று தெரிய வருகிறது.
ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இந்த பயங்கரவாதி இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்துள்ளார். அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் வரை RFJ தொகை நிர்ணயித்துள்ளது. இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார், தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துகிறார், பெரிய பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
ஆர்.எஃப்.ஜே தளத்தின்படி, “ஹபீஸ் முகமது சயீத், அரபு மற்றும் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியரும், இந்தியாவின் சில பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தீவிரமான அஹ்ல்-இ-ஹதீஸ் இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் நிறுவன உறுப்பினரும் ஆவார்.
2008 மும்பை தாக்குதல்கள் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய நபராக சயீத் சந்தேகிக்கப்படுகிறார்.
சிராஜுதீன் ஹக்கானி
ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பும் பயங்கரவாதக் குழுவான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் Tஹான் சிராஜுதீன் ஹக்கானி. RFJ வலைத்தளத்தின்படி, 2008 ஏப்ரல் ஏப்ரல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மீது படுகொலை முயற்சியைத் திட்டமிட்டதாக ஹக்கானி ஒப்புக் கொண்டார், மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிரான எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஒருங்கிணைந்து பங்கேற்றார்.
ஹக்கானி பாகிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாக பழங்குடிப் பகுதிகளில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லா அகமது அப்துல்லா
அப்துல்லா ஒரு மூத்த அல்கொய்தா தலைவரும் அதன் தலைமைக் குழுவின் உறுப்பினருமான மஜ்லிஸ் அல்-ஷுரா ஆவார். 2003 ல் அவர் ஈரானில் கைது செய்யப்பட்டபோது, அவர் மற்ற பயங்கரவாதிகளுடன் 2015ல் ஈரானிய தூதருக்கு ஈடாக விடுவிக்கப்பட்டார். தகவலின் படி “அப்துல்லா ஒரு அனுபவமிக்க நிதி அதிகாரி, வசதி படைத்தவர், அல்-கொய்தாவின் செயல்பாடுகளுக்கு திட்டமிடுபவர்.” அவர் தலைக்கு 10 மில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சயீப் அல்-அட்ல்
அல்-கொய்தாவின் இராணுவக் குழுவின் தலைவரான சயீப் அல்-அட்ல், 2015 செப்டம்பரில் ஈரானால் விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் அப்துல்லா அகமது அப்துல்லாவும் ஒருவர். அவரது தலைக்கும் 10 மில்லியன் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அல்-அட்லா மற்றும் பிற அல்-கொய்தா செயல்பாட்டாளர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இராணுவ மற்றும் உளவுத்துறை பயிற்சியினை அல்-கொய்தா மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினர் என்று RFJ தளம் கூறுகிறது.
இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட்
என்ஐஏவின் 258 பேரின் பட்டியலில் பதினைந்து பெயர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை. இவர்களில் ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வி, அப்துர் ரஹ்மான் ஹாஷிம் சையத் மற்றும் சஜித் மஜித் ஆகியோர் அடங்குவர். என்ஐஏ பட்டியலில் சில முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் உள்ளனர்.
முப்பல்லா லட்சுமண் ராவ்
என்ஐஏ பட்டியலில், ஒருவரின் தலைக்கு அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், அவர் தெலுங்கானாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர் முப்பல்லா லட்சுமன் ராவ் என்கிற கணபதி ஆவார். 70 வயதில் இருக்கும் ராவ், கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.
செப்டம்பரில், வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், கணபதி கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் புரட்சிகர இயக்கம் பலவீனமடைந்துள்ளதாகக் கூறினார். “எங்கள் தவறுகள் மற்றும் பலவீனங்களால், நாங்கள் தலைமையில் இருந்தவர்களையும், முக்கிய சக்திகளையும் கணிசமாக இழந்தோம். கட்சியால் புதிய திட்டங்கள் மற்றும் தந்திரங்களை வகுக்க முடியவில்லை” என்றார்.
நம்பாலா கேசவ ராவ்
சிபிஐ (மாவோயிஸ்ட்) தலைவர், கணபதியின் வாரிசு நம்பலா கேசவ ராவ் என்கிற பசவ்ராஜ் ஆவார். அவர் IED களில் நிபுணராகக் கருதப்படுகிறார், மேலும் இராணுவ திட்டங்கள் பற்றி நல்ல அறிவைக் கொண்டவர். சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் அமைப்பின் மத்திய ராணுவ பிரிவு தலைவராக இருந்தார். பசவ்ராஜ் தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.