Advertisment

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்; 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு; இதுவரை நடந்தது என்ன?

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
After wrestlers protest and SC prodding two FIRs registered against WFI chief Brij Bhushan Sharan Singh What has happened so far

பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவரும் கைசர்கஞ்ச் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தனர். இந்நிலையில், ல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை இரண்டு எஃப்ஐஆர்களை பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்தது.

Advertisment

முன்னதாக, டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பி எஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வெள்ளிக்கிழமையன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

எனினும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக ஒலிம்பிக் விருதாளர் சாக்ஷி மாலிக், “இது வெற்றிக்கான எங்கள் முதல் படி, ஆனால் எதிர்ப்புகள் தொடரும்" என்றார்.

2012 முதல் 2022 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் எம்.பி.க்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்ததாக ஏழு மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் "தீவிரமானவை" என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இப்போது ஏன் மீண்டும் போராட்டம்

பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள், கமிட்டி மீதான நம்பிக்கை இழப்பு, எம்.பி.க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் தாமதம் செய்ததை தொடர்ந்து வீராங்கனைகள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

நடந்துகொண்டிருக்கும் விசாரணைக்கு மத்தியிலும் WFI அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியதில் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பிரிஜ் பூஷனுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் யார்?

பிரிஜ் பூஷண் மீது போலீசில் புகார் அளித்த 7 பெண் மல்யுத்த வீரர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கப்படும் என தலைமை நீதிபதி செவ்வாய்க்கிழமை (ஏப்.25) தெரிவித்தார்.

இருப்பினும், ஜனவரி தொடக்கத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் உலகப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஆகிய மூன்று பேரும் போராட்டத்தின் முன்னணியில் உள்ளனர்.

முதல் சுற்று போராட்டத்தின் போது, அன்ஷு மாலிக், சோனம் மாலிக், ரவி தஹியா மற்றும் தீபக் புனியா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர்.

எனினும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய தற்போதைய சுற்றுப் போராட்டங்களில், கடந்த தசாப்தத்தில் இந்தியாவுக்காக டஜன் கணக்கான சர்வதேச பதக்கங்களை வென்ற சாக்ஷி, வினேஷ் மற்றும் பஜ்ரங் மட்டுமே காணப்படுகின்றனர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் யார்?

மூத்த அரசியல்வாதியும் நிர்வாகியுமான பிரிஜ் பூஷண், 1991 மற்றும் 1999ல் கோண்டா லோக்சபா தொகுதியிலும், 2004ல் பல்ராம்பூர் தொகுதியிலும், 2009, 2014 மற்றும் 2019ல் கைசர்கஞ்சிலும் வெற்றி பெற்று, ஆறு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

2009 இல் இவர் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

66 வயதான கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். இவர், ஆசிய மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் மற்றும் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் அரசாங்கத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

அரசியல் பலம் வாய்ந்தவராக அறியப்பட்ட பிரிஜ் பூஷண், உள்நாட்டில் விளையாட்டில் அதிக அளவு செல்வாக்கு செலுத்துகிறார், மேலும் இந்தியாவில் மல்யுத்தத்தின் அனைத்து விஷயங்களிலும் கடைசி வார்த்தையைக் கொண்டிருந்தார்.

மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் மீது என்ன குற்றம் சாட்டியுள்ளனர்?

WFI இன் செயல்பாட்டில் நிதி முறைகேடு மற்றும் தன்னிச்சையாக இருப்பதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, பாலியல் துன்புறுத்தல் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புகார்தாரர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி, அவற்றில் சில புது டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷணின் அதிகாரப்பூர்வ எம்பி பங்களாவிலும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடந்த போட்டிகளின் போது நடந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தப் புகார்தாரர்களில் ஒருவர் மைனர் ஆவார். திங்களன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் மீதும், மற்ற கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், அவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கூடுதலாக, மல்யுத்த வீரர்கள் தங்கள் போலீஸ் புகாரில் பிரிஜ் பூஷனை கிரிமினல், மிரட்டல் பேர் வழி என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கை என்ன?

பிரிஜ் பூஷண் மீது போலீஸ் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேலும், WFI தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றச்சாட்டுகள் தற்போது ஏன் வெளிவந்துள்ளன?

புகார் குறித்து கேள்விபட்டதும் வினேஷ், சாக்ஷி மற்றும் பஜ்ரங் ஆகியோர் தங்களுக்குள் அரட்டை அடித்து, பிரிஜ் பூஷன் மற்றும் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பயிற்சியாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தொடர்ந்து, "இளம் மல்யுத்த வீரர்களைப் பாதுகாக்க" பிரிஜ் பூஷனை நீக்கவும், அவரைக் கைது செய்யவும் அவர்கள் கோருவதாக வினேஷ் மீண்டும் வலியுறுத்தினார்.

போராட்டங்களுக்கு WFI எவ்வாறு பதிலளித்துள்ளது?

பிரிஜ் பூஷன் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜனவரியில், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் "தூக்கிலிடத் தயார்" என்று கூறினார்.

எனினும், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து கருத்து கேட்கும் அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

ஜனவரி மாதம், அரசாங்கம் மல்யுத்த வீரர்களை ஒரு மேற்பார்வைக் குழுவை உருவாக்கி அவர்களின் போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியது, இது பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கும் WFI இன் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் பணித்தது.

குத்துச்சண்டை ஜாம்பவான் எம்.சி.மேரி கோம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, அதன் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர நான்கு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் முதல் வாரத்தில்தான் தனது அறிக்கையை சமர்பித்தது. இதையடுத்து குழு கலைக்கப்பட்டது.

புதிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மே 7 அன்று திட்டமிடப்பட்ட WFI தேர்தல்களுக்கான தற்போதைய செயல்முறையை அரசாங்கம் செல்லாது என்று அறிவித்தது.

45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தும் ஒரு தற்காலிக குழுவை உருவாக்கவும், புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரை WFI இன் அன்றாட விவகாரங்களை நிர்வகிக்கவும் IOA க்கு அறிவுறுத்தியது.

கண்காணிப்புக் குழுவின் முடிவுகள் என்ன?

அறிக்கை இன்னும் "ஆய்வு" செய்யப்படுகிறது, மேலும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், விளையாட்டு அமைச்சகம் அறிக்கையின் பூர்வாங்க ஆய்வுக்குப் பிறகு சில தகவல்களை தெரிவித்தது.

அதில், பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013 இன் கீழ் முறையாக அமைக்கப்பட்ட உள் புகார்கள் குழு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், கூட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பங்குதாரர்களுக்கு இடையே அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனை தேவை என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து, “கூட்டமைப்புக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையே பயனுள்ள தொடர்பு தேவை“ எனவும் கூறியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Sakshi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment