Advertisment

பொறியியல் படிப்புகளில் சேர புது வழிமுறைகள்: ஏஐசிடிஇ கூறுவது என்ன?

AICTE NEW RULES: 11, 12 வகுப்புகளில் அறிவியல், கணிதம் படிக்காத மாணவர்களுக்கு உயர்க்கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கல்விப் பயிற்சியை வழங்கலாம்

author-image
WebDesk
New Update
பொறியியல் படிப்புகளில் சேர புது வழிமுறைகள்: ஏஐசிடிஇ கூறுவது என்ன?

பொறியியல் பட்டப்படிபுகளில் சேருவதற்கான அடிப்படை கல்வித் தகுதி மாற்றம் குறித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும், ஆசரியர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.

Advertisment

என்ன குழப்பம்?

முன்னதாக, பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல், கணிதம் பாட்டங்களில் கட்டாய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதியியல், பயோடெக்னாலஜி, உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, பொறியியல் வரைபடம் உள்ளிட்ட 11 பாடங்களில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது கல்விப் பாடமாக கொண்டிருக்கலாம். பொதுப் பிரிவு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ், இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், தகவல் பயிற்சிகள், பயோடெக்னாலஜி, தொழில்சார் கல்வி, பொறியியல் வரைபடம், வணிக ஆய்வுகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட 14 கல்விப் பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 45 சதவீத பெற வேண்டும்.

கணிதம், இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் பொறியியல் படிப்புகளில் சேர முடியுமா?

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) இந்த முடிவை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களிடமே விட்டுள்ளது. எவ்வாறாயினும், 11, 12ம் வகுப்புகளில் இயற்பியல், கணிதம் போன்ற கல்விப் பாடங்களை கட்டாயப் பாடங்களாக படிக்காத, பொறியியல் பாடங்களில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு புதிய கதவைத் திறக்கும் என ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். .

மேலும், "உதாரணமாக, பள்ளியில் பிசிபி (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பாடங்களை படித்த மாணவர்கள் பெரும்பாலும் உயிரித் தொழில்நுட்ப பிரிவில் (பயோடெக்னாலஜி) சேருவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.. ஏனெனில், பழைய நடைமுறை, கணித பாடத்திட்டத்தை கட்டாயப்படுத்துகிறது.புதிய விதிமுறைகளின் கீழ், பல்கலைக்கழகம் மற்றும் உயரக்கல்வி நிறுவனங்கள் அனுமதித்தால் பிசிபி பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயிரித் தொழில்நுட்ப பிரிவில் அனுமதிக்க முடியும், ”என்றும்அவர் தெரிவித்தார்.

ஆனால், பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் அடிப்படை தேவையில்லையா?

இந்த கேள்விக்குப் பதிலளித்த அந்த உயர் அதிகாரி, 11, 12 வகுப்புகளில் அறிவியல், கணிதம் படிக்காத மாணவர்களுக்கு உயர்க்கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கல்விப் பயிற்சியை வழங்கலாம் என்று புதிய வழிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

"கணிதம், இயற்பியல், பொறியியல் வரைபடம் போன்ற பொருத்தமான இணைப்புக் கல்விப் பயிற்சியை உயர்க்கல்வி நிறுவனங்கள் வழங்கும். பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட கற்றல் அளவை எட்ட முடியும்" என்று வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கல்வியாளர்கள் இத்திட்டத்துக்கான சாத்தியங்களை சந்தேகிக்கின்றனர். "வளர்ந்துவரும் பல்முனை பொறியியல் படிப்புகளுக்கு உயர்நிலைப் பள்ளி படிப்புகளில் கணிதப் பாடம் மிகவும் அவசியமாகிறது, ஜவுளி பொறியியல், பயோடெக்னாலஜி போன்ற தனியான பொறியியல் படிப்புகளுக்கு கூட கணிதப் பாடங்கள் அவசியமாகிறது" என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தார்.

படிப்பை கைவிட்டக்வர்களுக்கு இத்தகைய இணைப்புக் கல்விப் பயிற்சி திட்டம். இது ஒரு அடித்தளமாக இருக்க முடியாது. உயர்நிலைப் பள்ளிகளில் பாடத் திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கான முழு சுதந்திரம் தற்போது கிடைத்திருந்தாலும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு தேவையான அடிப்படை பாடத் திட்டங்களை நாம் கைவிட முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத தனியார் உயர்க்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் ஒருவர தெரிவித்தார்.

ஆனால், ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி. சகஸ்ரபுத்தே இத்தகைய கருத்தில் இருந்து மாறுபடுகிறார். இது குறித்த, அவர், " நாங்கள் நடைமுறைக்கு மாறாக எதையும் பரிந்துரைக்கவில்லை. மாணவருக்கு திறமை இருப்பின், இணைப்புக் கல்விப் பயிற்சியையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார். மாணவர்களின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. உதாரணமாக, 10ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் பட்டயப்படிப்புகளில் சேர்கின்றனர். இந்த மூன்றாண்டு பயிற்சியில், பொறியியல் படிப்புகளுக்கு தேவைப்படும் கணிதம், இயற்பியல் முழுமையாக இருந்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், மாணவர்கள் பட்டயப்படிப்பு முடித்து, பொறியியல் கல்வியில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்கிறனர். உண்மையில், இந்த வகை மாணவர்கள் பலரும் தங்கள் தொடர்புடைய துறைகளில் அதிகம் சாதிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

கட்டுரையை தொடர்ந்து ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Engineering Aicte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment