scorecardresearch

வெளி நோயாளிகளுக்கான சேவையை மீண்டும் தொடங்கிய எய்ம்ஸ் – புதிய நடைமுறைகள் என்னென்ன?

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் அதன் வெளி நோயாளிகளுக்கான (OPD) சேவைகளை மீண்டும் தொடங்கியது. ஒவ்வொரு துறையிலும் ஒரு நாளைக்கு 15 நோயாளிகளுக்கு மிகாமல் சிகிச்சை அளிக்கப்படும். எய்ம்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் OPD நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை நிறுத்தியது, பின்னர் தொலைத் தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்கி வந்தது. நிறுவனம் OPD நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறது, இப்போது ஒரு நாளில் சராசரியாக 15,000 நோயாளிகளைக் கையாள்கிறது. […]

aiims delhi, aiims opd service, aiims delhi news, எய்ம்ஸ், எய்ம்ஸ் மருத்துவமனை, aiims opd services india, aiims opd services latest news, delhi news, delhi covid news, coronavirus news
aiims delhi, aiims opd service, aiims delhi news, எய்ம்ஸ், எய்ம்ஸ் மருத்துவமனை, aiims opd services india, aiims opd services latest news, delhi news, delhi covid news, coronavirus news
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் அதன் வெளி நோயாளிகளுக்கான (OPD) சேவைகளை மீண்டும் தொடங்கியது. ஒவ்வொரு துறையிலும் ஒரு நாளைக்கு 15 நோயாளிகளுக்கு மிகாமல் சிகிச்சை அளிக்கப்படும். எய்ம்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் OPD நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை நிறுத்தியது, பின்னர் தொலைத் தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்கி வந்தது.

நிறுவனம் OPD நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறது, இப்போது ஒரு நாளில் சராசரியாக 15,000 நோயாளிகளைக் கையாள்கிறது.

எய்ம்ஸ் எப்போது OPD சேவைகளை நிறுத்தியது? ஏன்?

கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 18 அன்று எய்ம்ஸ் தனது OPD நோயாளிகளுக்கு, அவர்கள் மருத்துவமனையுடன் பதிவுசெய்த தொலைபேசி எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியது. மார்ச் 20 முதல், மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை மட்டும் மேற்கொண்டது., மேலும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு screening area அமைக்கப்பட்டது. மார்ச் 24 முதல், புதிய மற்றும் follow-up பதிவுகளுக்கான அனைத்து OPD சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் -19 சிகிச்சைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கு முன்பு இப்படி நடந்துள்ளதா?

இல்லை, எய்ம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக மார்ச் மாதம் நோயாளிகளுக்கு OPD சேவைகள் மூடப்பட்டன.

எய்ம்ஸ்  சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை என்ன கூறுகிறது?

செவ்வாயன்று, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே. சர்மா ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில், ஃபாலோ அப் நோயாளிகளுக்கு OPD சேவைகள் கிடைக்கும், OPD ஆலோசனையை அளிக்க விரும்பும் துறைகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். எவ்வாறாயினும், மீண்டும் OPD சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், மாலை சிறப்பு கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்பட மாட்டாது. ஆரம்பத்தில், ஒரு துறைக்கு ஒரு நாளில் 15 நோயாளிகள் மட்டுமே வருவார்கள். எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.

இப்போது ஒருவர் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது?

அப்பாயிண்ட்மெண்ட் பெற விரும்பும் எந்தவொரு நோயாளியும் எய்ம்ஸ் நிறுவனத்தின் தொலை தொடர்பு உதவி எண்- 011 2658 9142, 9115444155 மற்றும் +91 172 522 6032 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்க வேண்டும். நோயாளி http://www.ors.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். நோயாளிகளுக்கு OPD ஆலோசனைக்கு நேரடியாக கணினி வசதி மூலமாகவோ அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படலாம். உடல்ரீதியான சந்திப்பை வழங்குவதற்கு முன்பு நோயாளிகளை நேரடியாக அழைப்பது அல்லது தொலை தொடர்பு மூலம் திரையிடுவது துறைகளின் தனிச்சிறப்பாகும்.

எய்ம்ஸில் உள்ள அனைத்து மருத்துவத் துறைத் தலைவர்களும் ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு OPD மீண்டும் தொடங்கப்பட்ட தேதி பற்றிய தகவல்களையும், நோயாளிகளுக்கு அவர்களது தொலைபேசி எண்களுடன் கூடிய தினசரி பட்டியலையும் அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். OPD வழக்கமான நேரத்தில் தொடங்கும். அதாவது காலை 8.30 தொடங்கி நோயாளிகளுக்கு தொடர் ஆலோசனைகள் அளிக்கப்படும்.

கோவிட் -19 க்கு நோயாளிகள் பரிசோதிக்கப்படுவார்களா?

ஆம். அனைத்து நோயாளிகளும் OPD க்குள் நுழைவதற்கு முன்பு ILI பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Aiims resumes opd services new process