Advertisment

எந்த நாடுகளுக்கு விமானங்களில் பறக்கலாம்? கட்டுப்பாடு விதித்த நாடுகள் எவை?

பாதுகாப்பாக உணரும் இரு நாடுகளுக்கு இடையே ஏர் பபுள் பயண ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற விமானங்களில் ஏற தூதரகத்தில் பயணிகள் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Air Bubbles India International flights Tamil news

Air Bubbles India International flights

Air Bubble Flight Tamil News: கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக வழக்கமான சர்வதேச விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்த வாரம் உக்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளுடன் "ஏர் பபுள் (air bubble)" ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிறுவியுள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் இப்போது 18 நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல முடியும். இருப்பினும், கோவிட் -19 வழக்குகள் மற்றும் அட்டவணைகள் தொடர்பாக இந்தியாவுடனான விமானங்களைப் பல அதிகார வரம்புகள் மற்றும் ஹாங்காங், ஜெர்மனி போன்ற நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷனின் கீழ் சிறப்புச் சர்வதேச விமானங்கள் இயங்கி வருகின்றன.

Advertisment

ஏர் பபுள் / டிராவல் பபுள் என்றால் என்ன?

வணிக பயணிகள் (commercial passenger) சேவைகளை மறுதொடக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கிடையேயான தற்காலிக பரஸ்பர ஏற்பாடுதான் இந்த ஏர் பபுள். அவை, சர்வதேச பயணிகள் விமானங்களில் எந்தவொரு தடையுமின்றி பயணிக்க அனுமதிக்கின்றன. வருகை இடங்களில் (arrival destinations), தனிமைப்படுத்தப்படும் மற்றும் கோவிட்-19 சோதனை விதிகளைத் தவிர்க்க இது உதவுகிறது. ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக உணரும் இரு நாடுகளுக்கு இடையே இந்த வகை ஏற்பாடு நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற விமானங்களில் ஏற தூதரகத்தில் பயணிகள் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

Air Bubble India International flights Dubai Germany tamil news Air Bubble India International flights

எந்தெந்த நாடுகளுடன் ஏர் பபுள் ஏற்பாடுகளை இந்தியா கொண்டுள்ளது?

தற்போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மாலதீவுகள், கனடா, ஜப்பான், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கத்தார், ஈராக், ஓமான், பூட்டான், கென்யா, பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் ஆகிய 18 நாடுகளுடன் ஏர் பபுள் ஏற்பாடுகளை இந்தியா கொண்டிருக்கிறது.

அக்டோபர் 28 முதல் பங்களாதேஷ், இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது. ஏர் பபுள் ஏற்பாட்டின் கீழ், ஆரம்பத்தில் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ், யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் மற்றும் நோவோ ஏர் ஆகிய மூன்று பங்களாதேஷ் கேரியர்கள் வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கவிருக்கிறது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் கோ ஏர் உள்ளிட்ட ஐந்து இந்திய விமான நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கும் என்று 'தி டெய்லி ஸ்டார்' பத்திரிகை தெரிவித்துள்ளது. தொடக்கத்தில், இரு நாடுகளிலிருந்தும் சுமார் 5,000 பயணிகள் ஒவ்வொரு வாரமும் பயணிக்க முடியும்.

அமெரிக்காவுடனான ஏற்பாட்டின்படி, டெல்லி மற்றும் நெவார்க் இடையே ஏர் இந்தியா விமானம் வாரத்திற்கு மூன்று முறை தன் சேவையை வழங்கும். இந்த விமான நிறுவனம், லண்டனிலிருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி மற்றும் கோவா இடையையும் இயங்கும்.

Air Bubble India International flights Dubai Germany tamil news Passengers of Air Bubble India International flights

ஏர் பபுள் ஏற்பாடுகளை நிறுவுவதற்காக இத்தாலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய இந்த 13 நாடுகளுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது தவிர, மற்ற நாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, வந்தே பாரத் மிஷனிற்கு கீழ் ஒரு சில விமானங்களையும் இந்திய கேரியர்கள் இயக்குகின்றன. அக்டோபர் 16-ம் தேதி வரை, வந்தே பாரத் மிஷனிற்கு கீழ் 6,987 திருப்பி அனுப்பப்பட்ட விமானங்களை ஏர் இந்தியா குழுமம் இயக்கியது என்றும் அதில் 9.10 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து விமானங்களை நிறுத்தி வைத்த / தடைசெய்த நாடுகள் எவை?

அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது. இந்த விமானங்களில் ஒரு சில பயணிகள் கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவுகள் பெற்றதுதான் இதற்கான காரணம். இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்வது இது மூன்றாவது முறை. முந்தைய தடைகள் செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18-ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் இருந்தன.

சமீபத்தில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்குமான அனுமதிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஏர் பபுள் ஏற்பாட்டை நிறுத்தி வைத்திருக்கிறது. எனினும், அக்டோபர் 26 முதல் மீண்டும் சேவைகள் தொடங்க உள்ளன. மார்ச் 28, 2021 வரை ஏர் இந்தியா விமானங்களை இயக்க உள்ளது என்று ஓர் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் பபுள் ஏற்பாட்டின் கீழ் செயல்பட விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை ஜெர்மனி திரும்பப் பெற்ற பிறகு, அக்டோபர் 14-ம் தேதி வரை Frankfurt வரையிலான தனது விமானங்களை ரத்து செய்வதாகக் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஏர் இந்தியா அறிவித்தது. இதற்கு முன்னதாக இந்தியத் தரப்பு லுஃப்தான்சாவிடம் அதன் கால அட்டவணையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதுவே, அக்டோபர் 20 வரை ஜெர்மன் விமான நிறுவனம் இந்தியாவுக்கான விமானங்களை ரத்து செய்ய வழிவகுத்தது.

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கோவிட் -19 பாசிட்டிவ் பயணிகளை ஏற்றிச் சென்றதை அடுத்து ஏர் இந்தியா விமானங்களை துபாய் தடை செய்தது. இப்போது இந்தியாவிலிருந்து விமானங்களை மீண்டும் தொடங்க துபாய் அனுமதித்திருந்தாலும், கோவிட் -19 சோதனை முடிவுகள் செல்லுபடியாகாத நான்கு இந்திய ஆய்வகங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. சூர்யம் ஆய்வகம், ஜெய்ப்பூர்; மைக்ரோஹெல்த் ஆய்வகம், கேரளா; டெல்லியிலுள்ள டாக்டர் பி பாசின் பாத்லேப்ஸ் (பி) லிமிடெட் மற்றும் நோபல் டயகனாஸ்டிக் மையம், டெல்லி ஆகிய இந்த நான்கு ஆய்வகங்களின் நெகடிவ் RT-PCR சோதனை அறிக்கைகளை நிராகரிக்க அதிகாரிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸைக் கேட்டுள்ளனர்.

Dubai, Germany International flights to India Air Bubble flights Dubai, Germany International flights to India

கடந்த மாதம், கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்த காரணத்தினால் இந்தியாவுக்கு வரையிலான விமானங்களைத் தடை செய்தது சவூதி அரேபியா. ஆனால், வந்தே பாரத் மிஷனிற்கு கீழ் தற்போது விமானங்களை அனுமதிக்கிறது.

உள்நாட்டு நிலைமை என்ன?

பண்டிகை காலம் என்பதால், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஆரோக்கியமாக இருந்தால் விமானங்களுக்கு தங்களது pre-Covid கால அட்டவணையில் 75 சதவிகிதம் வரை விமானங்களை இயக்க அனுமதிக்கப்படலாம் என்று கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்த முடிவு, செப்டம்பர் 2-ம் தேதி அரசாங்கம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு 60 சதவிகிதத்திற்கு pre-Covid சேவைகளை இயக்க அனுமதித்ததை அடுத்து எடுக்கப்பட்டது.

கடுமையான கோவிட் -19 லாக்டவுன் காரணமாக, இரண்டு மாத இடைவெளியைத் தொடர்ந்து உள்நாட்டுப் பயணிகள் சேவை கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இருப்பினும், விமான நிறுவனங்கள் தங்களது pre-Covid கால அட்டவணையில் 33 சதவிகிதத்திற்கு மிகாமல் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Covid 19 Flight Vande Bharat Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment