நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனங்கள் இந்த மாதத்தில் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளின் எடையை சரிபார்ப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் எடையைக் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படாது. ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் இதை மேற்கொள்கிறது.
'Air New Zealand Scales a weighty issue' என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தனது பதிவேடுகளைப் புதுப்பிக்க பயணிகளின் எடையை சரிபார்ப்பதாக கூறியது. தனது ஏர்லைன்சில் சர்வதேச வழித்தடங்களில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பதிவேடுகளைப் புதுப்பிக்க எடை அளவுகோலை
கணக்கிடுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 29 முதல் ஜூலை 2 வரை ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க சில விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எடையை அளவிடுவதாக கூறியுள்ளது. பயணிகள் தாமாகவே முன்வந்து எடைபோடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை?
பயணிகளிள் எடையை செக் செய்யும் நடவடிக்கை வினோதமாகத் தோன்றினாலும், இந்த நடவடிக்கைக்கு விமான நிறுவனங்கள் முறையான விளக்கம் அளித்துள்ளன. இது நியூசிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒழுங்குமுறைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். இது வசதியான மற்றும் பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
பயணிகளுடன் கூடிய விமானத்தின் எடை விமானத்தின் சமநிலையை பராமரிப்பதிலும் உகந்த செயல்திறனை உறுதி செய்வதிலும் ஒரு முக்கிய அங்கமாகும். இது பொதுவாக பயணிகள், சாமான்கள் மற்றும் எரிபொருளுடன் வெற்று விமானத்தின் எடையைச் சேர்ப்பதன் மூலம் அளவிடப்படுகிறது. ஏர் நியூசிலாந்து கணக்கெடுப்பு அதன் முதல் இரண்டு காரணிகளின் பதிவைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான நிறுவனத்தில் சுமை கட்டுப்பாட்டு மேம்பாட்டு நிபுணராக பணியாற்றும் அலஸ்டர் ஜேம்ஸ் கூறுகையில். விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து பொருட்களையும் நாங்கள் எடை போடுவோம். விமானத்தில் பரிமாறப்படும் உணவு முதல் லக்கேஜ் வரை அனைத்தையும் எடை போடுவோம். கேபின் பேக்குகளுக்கு சராசரி எடையைப் பயன்படுத்துகிறோம். கணக்கெடுப்பைச் செய்வதன் மூலம் நாங்கள் அதைத் செய்கிறோம் என்றார்.
இந்த செயல்முறை விநோதமாக இருந்தாலும், பயணிகளின் எடை எங்கும் காண்பிக்கப்படாது. ஏன் விமான ஊழியர்களுக்கு கூட காட்டப்படாது என்று ஜேம்ஸ் உறுதியளித்தார். " இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், பயணிகளின் எடை எங்கும் காட்டப்படாது, யாருக்கும் தெரியாது என்றார்.
விமான நிறுவனங்களின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் அதன் உள்நாட்டு விமானங்களைப் பயன்படுத்தும் பயணிகள் இதேபோன்ற பயிற்சியை மேற்கொண்டனர். பொதுவாக, நியூசிலாந்தில் வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் எடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எடை கணக்கிடுவதன் முக்கியத்துவம்
ஒரு விமானத்தின் எடை கணக்கிடுவது முக்கிய செயலாகும். இது விமானத்தை இயக்கும் போது ஒரு பைலட் செய்ய வேண்டிய தேர்வுகளை நிர்வகிக்கிறது. விமானத்தில் அதிக சுமை இல்லை என்பதை உறுதிசெய்ய, விமானி பயணிகளின் எடை, சாமான்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை முறையாக சமநிலைப்படுத்த வேண்டும். . யுஎஸ் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் எடை மற்றும் இருப்பு கையேட்டின்படி, ஒரு விமானம் அதிக சுமையுடன் இருந்தால், அதற்கு அதிக டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் வேகம் தேவைப்படும். இதனால் நீண்ட தூர டேக்ஆஃப் ரன் மற்றும் லேண்டிங் ரோல் தேவைப்படும். இது விமானத்தின் சூழ்ச்சித்திறனைக் குறைத்து, தரையிறங்கும் கியரில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக தேய்மானம் ஏற்படும்.
ஒரு விமானம் எடுத்துச் செல்லக்கூடிய அதிகபட்ச எடையானது, புறப்படும் மற்றும் வரும் விமான நிலையங்களில் ஓடுபாதையின் நீளம் மற்றும் ஓடுபாதையில் ஈரமான புல் அல்லது தண்ணீர் உள்ளதா என்பதாலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது.
வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் எடை நாடு, பாலினம் மற்றும் பருவத்தின் அடிப்படையில் மாறுபடும். SMH எனப்படும் டிராவலர் இதழ், அமெரிக்காவில், வயது வந்த ஆணின் எடை (கேரி-ஆன் லக்கேஜ் உட்பட) கோடையில் சுமார் 90 கிலோவாகவும், குளிர்காலத்தில் 93 கிலோவாகவும், வயது வந்த பெண் பயணிகளின் எடை கோடையில் சுமார் 81 கிலோ மற்றும் குளிர்காலத்தில் 83 கிலோ, மற்றும் ஒரு குழந்தை (2-12 வயதுக்கு இடையில்) கோடையில் சுமார் 37 கிலோ மற்றும் குளிர்காலத்தில் 39 கிலோவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், இவை பருவகாலத்தைப் பொருட்படுத்தாமல் முறையே 84 கிலோ, 66 கிலோ மற்றும் 30 கிலோவாக நிர்ணயிக்கப்படுகிறது.
விமானத்தின் எடை மற்றும் சமநிலையை தவறாக மதிப்பிடுவது கடந்த காலங்களில் ஆபத்தான அத்தியாயங்களை விளைவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.