Airport tamil news, airport covid 19 quarantine rules: வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணிப்பவர்களுக்கு, 72 மணி நேரத்திற்குள் ஆர்டி-பிசிஆர் நடத்தப்படும் சோதனையிலிருந்து கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பித்துத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நீக்கியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிட்ட சர்வதேச வருகைக்கான புதிய வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இது இணைந்திருக்கிறது.
எந்த சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தலிருந்து ஒருவர் விலக்கப்படுகிறார்?
பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலிருந்து ஒரு நபர் நெகட்டிவ் கோவிட் 19 சான்றிதழைப் பெற்றால், அவர்கள் நிறுவன மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலிருந்து விலக்கப்படுவார்கள். முன்னதாக, நெகட்டிவ் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கை ஒரு பயணிக்கு ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிருந்து மட்டுமே விலக்கு அளித்தது. அதுமட்டுமின்றி அவர்கள் ஏழு நாட்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. மேலும், முந்தைய விதிகளின்படி, பயணத்தை மேற்கொண்ட 96 மணி நேரத்திற்குள் சோதனை நடத்த வேண்டும். இது தவிர, கர்ப்பம், குடும்பத்தில் மரணம், கடுமையான நோய் மற்றும் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் போன்ற காரணங்கள் / வழக்குகளுக்கு மட்டுமே, நெகட்டிவ் சோதனை சான்றிதழ் இல்லாத நிலையில் நிறுவன தனிமைப்படுத்தலிருந்து விலக்கு வழங்கப்பட்டது. இந்த பிரிவுகளின் கீழ் விலக்கு அளிக்க விரும்பும் பயணிகள் இன்னும் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தனிமைப்படுத்தலிருந்து விலக்கு கோருவதற்கான நடைமுறை என்ன?
அனைத்து பயணிகளும் சுய-அறிவிப்பு படிவத்தை http://www.newdelhiairport.in என்கிற ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் திட்டமிடப்பட்ட பயணத்திற்குக் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பே, அல்லது அந்தந்த சுகாதார கவுன்ட்டர்களுக்கு வந்தவுடன் செய்திருக்க வேண்டும். Human distress வகைகளின் கீழ் அவர்கள் அத்தகைய விலக்கு பெற விரும்பினால், அவர்கள் புறப்படுவதற்குக் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பே மேற்கூறிய ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
புறப்படுவதற்கு முன்னர் ஒரு பயணிக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?
வழிகாட்டுதல்களின்படி, ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் நிறுவன தனிமைப்படுத்தலிருந்து விலக்கு பெற விரும்பும் சர்வதேச பயணிகள், விமான நிலையங்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படும் வசதியை பெறலாம். தற்போது, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் உள்ளிட்ட விமான நிலையங்கள் அந்தந்த வருகை அரங்குகளில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதிகளை வழங்கி வருகின்றன. இருப்பினும், ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வரும் சர்வதேச பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனையைச் செய்யாமல் இருந்தாலோ அல்லது சோதனை வசதி கிடைக்காத விமான நிலையத்திற்கு வந்தடைந்தாலோ, கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்துதலிலும் மற்றும் ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த விதிகள் எல்லா மாநிலங்களிலும் பொதுவானதா?
இவை மத்திய அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் என்றாலும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் பயணிகளின் கள மதிப்பீட்டு இடுகையின் வருகையின் படி தனிமைப்படுத்துதல் தொடர்பாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அனுமதி உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.