ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் மது நுகர்வு, நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புற இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5), 2019-21 கண்டறிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 1% பேர் மது அருந்துகின்றனர், அதே வயதுடைய ஆண்களில் 19% பேர் மது அருந்துகின்றனர்.
பெண்களிடையே மது நுகர்வு, கிராமப்புறங்களில் 1.6% மற்றும் நகர்ப்புறங்களில் 0.6% ஆகவும், ஆண்களில் முறையே 19.9% மற்றும் 16.5% ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர். இங்கு ஆண்களிடையே மது நுகர்வு 53% ஆகவும், பெண்களிடையே 24% ஆகவும் உள்ளது.
பெண்களில், அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து சிக்கிம் (16%); ஆண்களில், தெலுங்கானா (43%) 2வது இடத்திலும் உள்ளன.
அருணாச்சல் மற்றும் தெலுங்கானாவைத் தவிர, அசாமின் மேல் பிரம்மபுத்திரா பகுதியிலும், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியிலும், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் சோட்டா நாக்பூர் பகுதியிலும் ஆண்களிடையே மது அருந்துதல், 40% மற்றும் அதற்கு மேல் அதிகமாக உள்ளது.
சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மற்றும் ஒடிசாவின் சில மாவட்டங்களில் ஆண்களின் மது அருந்துதல் அளவு 30-40% ஆக உள்ளது. இது இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் 30% க்கும் குறைவாகவும், லட்சத்தீவில் 0.4% குறைவாகவும் உள்ளது.
மற்ற சாதி/பழங்குடி குழுக்களை விட, பட்டியல் பழங்குடியினரிடையே மது அருந்துவது மிகவும் பொதுவானதாக உள்ளது. எஸ்டிகளில் 6% பெண்கள் மது அருந்துகின்றனர். அதுவே ஆண்கள் 33% ஆக உள்ளது.
மத அடிப்படையில் மது அருந்தும் ஆண்களின் விகிதம்
இந்து - 20%
முஸ்லீம்- 5%
கிறிஸ்தவம் - 28%
சீக்கியர் - 23.5%
பௌத்தம்/நியோ-பௌத்தம் - 24.5%
ஜெயின் - 5.9%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“