Advertisment

இந்தியாவில் மது நுகர்வு: அதிகம் குடிப்பது ஆண்களா? பெண்களா?

அனைத்து மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர்.

author-image
WebDesk
May 17, 2022 09:31 IST
liquor consumption

Alcohol consumption is higher in rural India than in urban India Recent survey reveals

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் மது நுகர்வு, நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புற இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5), 2019-21 கண்டறிந்துள்ளது.

Advertisment

ஒட்டுமொத்தமாக, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 1% பேர் மது அருந்துகின்றனர், அதே வயதுடைய ஆண்களில் 19% பேர் மது அருந்துகின்றனர்.

பெண்களிடையே மது நுகர்வு, கிராமப்புறங்களில் 1.6% மற்றும் நகர்ப்புறங்களில் 0.6% ஆகவும், ஆண்களில் முறையே 19.9% ​​மற்றும் 16.5% ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர். இங்கு ஆண்களிடையே மது நுகர்வு 53% ஆகவும், பெண்களிடையே 24% ஆகவும் உள்ளது.

பெண்களில், அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து சிக்கிம் (16%); ஆண்களில், தெலுங்கானா (43%) 2வது இடத்திலும் உள்ளன.

அருணாச்சல் மற்றும் தெலுங்கானாவைத் தவிர, அசாமின் மேல் பிரம்மபுத்திரா பகுதியிலும், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியிலும், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் சோட்டா நாக்பூர் பகுதியிலும் ஆண்களிடையே மது அருந்துதல், 40% மற்றும் அதற்கு மேல் அதிகமாக உள்ளது.

சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மற்றும் ஒடிசாவின் சில மாவட்டங்களில் ஆண்களின் மது அருந்துதல் அளவு 30-40% ஆக உள்ளது. இது இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் 30% க்கும் குறைவாகவும், லட்சத்தீவில் 0.4% குறைவாகவும் உள்ளது.

மற்ற சாதி/பழங்குடி குழுக்களை விட, பட்டியல் பழங்குடியினரிடையே மது அருந்துவது மிகவும் பொதுவானதாக உள்ளது. எஸ்டிகளில் 6% பெண்கள் மது அருந்துகின்றனர். அதுவே ஆண்கள் 33% ஆக உள்ளது.

மத அடிப்படையில் மது அருந்தும் ஆண்களின் விகிதம்

இந்து - 20%

முஸ்லீம்- 5%

கிறிஸ்தவம் - 28%

சீக்கியர் - 23.5%

பௌத்தம்/நியோ-பௌத்தம் - 24.5%

ஜெயின் - 5.9%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India #Liquor Shops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment