அயர்லாந்து ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது, அதன்படி இனி அனைத்து மதுபானங்களும் அவற்றின் நுகர்வு நேரடியாக கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயுடன் தொடர்புடையது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்த விரிவான சுகாதார லேபிள்கள் அல்லது ஸ்டிக்கர்கள் – மே 22, 2026க்குப் பிறகு கட்டாயம் ஆகும், இவை கர்ப்பமாக இருக்கும் போது மது அருந்துவதற்கு எதிராகவும் எச்சரிக்கும். மேலும் ஆல்கஹால் தயாரிப்புகளின் கலோரி எண்ணிக்கையையும் வழங்க வேண்டும்.
ஒயின் உற்பத்தி செய்யும் நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் மற்ற ஆறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அயர்லாந்தின் சுகாதார அமைச்சர் ஸ்டீபன் டோனெல்லியின் முடிவை விமர்சித்தாலும், வல்லுநர்கள் இதை ஆதரித்துள்ளனர், பல வழக்கமான குடிகாரர்களுக்கு மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெரியாது.
அயர்லாந்தில் குடிப்பழக்கம்
ஐரிஷ் மக்கள் பாரம்பரியமாக அதிகமாக மது குடிப்பதில் புகழ் பெற்றுள்ளனர், மேலும் நாட்டின் கலாச்சாரத்தில் ஆல்கஹால் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐரிஷ் அரசாங்கத்தின் 2021 கணக்கெடுப்பில், மது அருந்துதல் குறைந்து வந்தாலும், அது தொடர்ந்து அதிகமாக இருந்தது – 15 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 37% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது குடித்தார்கள், (2018 இல் 41%) மற்றும் 15% பேர் அதிகமாக குடித்துள்ளனர். (2018 இல் 28%).
மற்ற நாடுகளில் லேபிள்கள்
பல நாடுகளில் மதுபானங்கள், வயதுக்குட்பட்டவர்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக எச்சரித்தாலும், தென் கொரியா மட்டுமே தற்போது ஆல்கஹால் மற்றும் புற்றுநோய்களுக்கு இடையிலான தொடர்பைப் பற்றி எச்சரிக்கிறது.
அவ்வாறு செய்யும் இரண்டாவது நாடு அயர்லாந்து.
கட்டுரையின் படி, தென்னாப்பிரிக்கா 2017 இல் கடுமையான ஆல்கஹால் எச்சரிக்கை லேபிள்கள் தேவைப்படும் ஒரு சட்டத்தை இயற்றியது, ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தின் கீழ் 2020 இல் அதை ரத்து செய்தது.
உலக சுகாதார அமைப்பின் உலக மதுபானங்கள் மீதான சுகாதார எச்சரிக்கைகள் குறித்த 2022 அறிக்கையின்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் 1.15% க்கும் அதிகமான ஆல்கஹால் கொண்ட அனைத்து தயாரிப்புகளிலும் கர்ப்பமாக இருக்கும் போது ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய எச்சரிக்கை தேவை.
எச்சரிக்கை லேபிள்கள் தேவை
1990 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனத்தால், மது, class 1 carcinogen அதாவது புற்றுநோயை உண்டாக்கும் முகவராக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆல்கஹால் நுகர்வு என்று வரும்போது, ஆரோக்கியத்தை பாதிக்காத பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை, என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
டில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்சஸ் நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ் கே சரின், ஐரோப்பாவில் கல்லீரல் புற்றுநோய்க்கு மதுதான் முக்கிய காரணம் என்று கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய்களில் 40% முதல் 52% வரை மது அருந்துவதால் ஏற்படுகிறது.
“ஆல்கஹால்”, சமூகத்தால் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷங்களில் ஒன்றாகும். ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோயுடன் அவரது மருத்துவமனைக்கு வந்த பெரும்பாலான மக்கள், அதனால் ஏற்படும் தீங்கு பற்றி அறிந்திருக்கவில்லை, என்று டாக்டர் சரின் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள தற்போதைய லேபிளிங் நடைமுறைகள் மருந்து, உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றுடன் தரப்படுத்தப்படவில்லை. இதனால் நுகர்வோர் முடிவுகளை எடுக்க முக்கியமான தகவல் இல்லாமல் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
.