Advertisment

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகம் மூலம், இந்திய பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் தொடக்க நிலை தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு MATES என்னும் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Aus visa

இந்தியாவைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அந்நாடு வழங்குகிறது. இதற்காக Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES) என்ற திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: All about MATES, a new scheme for young Indians to work in Australia

 

MATES என்றால் என்ன?

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்தின்படி, MATES ஆனது இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தொடக்க நிலை தொழில் வல்லுநர்கள், அந்நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மே 23, 2023 அன்று, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே Migration and Mobility Partnership Arrangement போடப்பட்டது. இது,  இரு நாடுகளுக்கு இடையே இருவழி இடம்பெயர்வு மற்றும் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் MATES திட்டம் செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படுமென, லூதியானாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கல்வி ஆலோசனை நிறுவனமான EDU Planet-ன் ஆலோசகர் கௌரவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

MATES இன் கீழ் யாரெல்லாம் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்?

30 அல்லது அதற்குட்பட்ட வயது உடைய இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் காலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் , செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தொழில்நுட்பம்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2024ன் படி, இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். 

இதற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் ஸ்பான்ஸர்ஷிப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இத்திட்டத்தின் நன்மைகள் என்ன?

MATES பங்கேற்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் வரை வாழவும், பணியாற்றவும் முடியும். விசா வைத்திருப்பவர்கள் தங்களின் பரிந்துரைக்கப்பட்ட துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனினும், குறிப்பாக மேலே பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறன்கள் மற்றும் நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துவதற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டம் சுமார் 3000 இடங்களுக்கான விண்ணப்பதாரர்களுடன் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் தங்கள் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளையும் அழைத்து வர விண்ணப்பிக்கலாம். உடன் வருபவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் தங்க வேண்டிய கால அவகாசம்?

விசா வைத்திருப்பவர்கள் 2 ஆண்டுகள் வரை தங்கும் வாய்ப்பை பெறுவார்கள். அதற்கு மேல் நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விசா எப்படி வழங்கப்படும்?

பேலட் முறையில் இதற்காக ஆஸ்திரேலிய விசா வழங்கப்படுகிறது. இதற்காக 25 ஆஸ்திரேலிய டாலர் செலுத்த வேண்டும். அதன்பின்னர், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மற்ற வேலைகள் தொடங்கும் என கௌரவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

India Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment