சமீபத்திய மனு பகவான் ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான் என்கிற தனிநபர் உட்பட 8 பேர் தாக்கல் செய்த மனுவின் (353/2023) ஒரு பகுதியாகும். அந்த மனுவில் கோருவதை இங்கே பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: Allahabad HC allows survey of Mathura Idgah: What is this plea in the Sri Krishna Janmabhoomi case
ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி பிரச்னை கவனம் பெற்றுள்ள நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (டிசம்பர் 14) இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய ஒரு கமிஷனை நியமிக்கக் கோரிய மனுவை அனுமதித்துள்ளது.
1670 ஆம் ஆண்டில் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கட்டப்பட்ட இந்த மசூதி, மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக இந்து மனுதாரர்கள் நம்புகின்றனர். இன்று, இது கிருஷ்ணா ஜென்மஸ்தல கோயிலுக்கு அருகில் உள்ளது, இங்கே ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான இந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சமீபத்திய வேண்டுகோள் மற்றும் நீண்டகால சர்ச்சை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது விவரங்கள் இங்கே:
சமீபத்திய மனு
சமீபத்திய மனு, உத்தரவு 26 விதி 9 சி.பி.சி-யின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான் என்கிற தனிநபர் உட்பட 8 பேர் தாக்கல் செய்த மனுவின் (353/2023) ஒரு பகுதியாகும்.
இந்த மனு ஷாஹி இத்கா மசூதியை ஆய்வு செய்ய கோருகிறது - இந்த மனுவை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் அமர்வு வியாழக்கிழமை அனுமதித்தது.
மேலும், உ.பி-யின் சன்னி வக்ஃப் வாரியம் மற்றும் ஷாஹி இத்கா மசூதி குழு ஆகியவை சர்ச்சைக்குரிய "நிலத்தை ஆக்கிரமித்து எழுப்பிய கட்டுமானத்தை அகற்ற" உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் நிலத்தை ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளைக்கு ஒப்படைக்குமாறு இரு தரப்புக்கும் உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
வக்பு வாரியம் மற்றும் மசூதிக் குழுவைத் தடுக்கவும், கத்ரா கேசவ் தேவ் நகரம் மற்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தின் வளாகத்திற்குள் மக்கள் தங்கள் சார்பாக நுழைவதைத் தடுக்கவும் இந்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
மேலும், அந்த மனுவில், “1968-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் - கோவில் நிர்வாக அதிகாரம், சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் - மற்றும் டிரஸ்ட் ஷாஹி மஸ்ஜித் இத்கா ஆகியவற்றுக்கு இடையேயான "சமரச ஒப்பந்தம்" "சட்டவிரோதமானது மற்றும் செல்லாது" என்றும் அது கூறுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், "சம்பந்தப்பட்ட சொத்தின் மீது ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சங்கத்திற்கு உரிமை இல்லை" என்பதே அந்த மனுவின் வாதமாக உள்ளது.
இந்து தரப்பு தாக்கல் செய்த மனுவில், “அவுரங்கசீப் நாட்டை ஆண்டது உண்மை மற்றும் வரலாறு... (மற்றும்) கி.பி 1669-70-ம் ஆண்டில் மதுராவில் உள்ள கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ள கோயில் உட்பட ஏராளமான இந்து மத இடங்கள் மற்றும் கோயில்களை இடிக்க ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார். “கேசவ் தேவ் கோவிலை இடிப்பதில் ஔரங்கசீப்பின் படை ஓரளவு வெற்றி பெற்றது, மேலும் பலவந்தமாக ஒரு கட்டுமானம் எழுப்பப்பட்டது, அதன் வலிமையை வெளிப்படுத்தியது, கட்டுமானத்திற்கு இத்கா மசூதி என்று பெயரிடப்பட்டது” என்று அந்த மனு கூறுகிறது.
“அவுரங்கசீப் பிறப்பித்த (இடிப்பதற்கான) உத்தரவு ஜனவரி - பிப்ரவரி 1670-ல் அரசைவைக் குறிப்புகளில் (அக்பாரத்) இடம் பெறுகிறது” என்றும் மனு கூறுகிறது.
முஸ்லிம் தரப்பின் எதிர்க் கோரிக்கைகள்
உ.பி சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ஷாஹி இத்கா மசூதி கமிட்டி சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள், “20.07.1973 மற்றும் 07.11.1994 தேதியிட்ட தீர்ப்பு மற்றும் ஆணையை ரத்து செய்ததற்கான நிவாரணம் கோரப்பட்ட அசல் வழக்கில் கோரப்பட்ட கோரிகையுடன் மனுவில் செய்யப்பட்ட கோரிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று வாதிட்டனர்.
மேலும், “ஷாஹி இத்கா மசூதி கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தின் எல்லைக்குள் வராது” என்றும் அவர்களால் வாதிடப்பட்டது.
“கிருஷ்ணர் பிறந்த இடம் மசூதிக்கு அடியில் இல்லை. வாதிகளின் கூற்று யூக வேலைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எந்த ஆவண ஆதாரங்களாலும் நிரூபிக்கப்படவில்லை” என்று வழக்கறிஞர்கள் வாதங்களை சமர்ப்பித்தனர்.
இது ஒரு பழங்கால பிரச்னை
இந்த மசூதி 1670-ல் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது. இப்பகுதி நசுல் நிலமாக கருதப்பட்டது - மராட்டியர்கள் மற்றும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான விவசாயம் அல்லாத அரசு நிலம். மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, ஓர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் பண்டேலாவும் 1618-ல் அதே வளாகத்தில் ஒரு கோவிலைக் கட்டினார்.
1815-ம் ஆண்டில், பெனாரஸின் ராஜா பத்னி மால் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து 13.77 ஏக்கரை ஏலத்தில் வாங்கினார். ராஜாவின் வழித்தோன்றல்கள் - ராய் கிஷன் தாஸ் மற்றும் ராய் ஆனந்த் தாஸ் - நிலத்தை ஜுகல் கிஷோர் பிர்லாவிற்கு 13,400 ரூபாய்க்கு விற்றனர், மேலும், அது பண்டிட் மதன் மோகன் மாளவியா, கோஸ்வாமி கணேஷ் தத் மற்றும் பிகென் லால்ஜி ஆத்ரே ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளை பிர்லாவால் அமைக்கப்பட்டது, மேலும் அது கத்ரா கேசவ் தேவ் கோவிலின் உரிமையைப் பெற்றது. 1951-ம் ஆண்டில், 13.77 ஏக்கர் நிலம் “இந்த அறக்கட்டளை சொத்து ஒருபோதும் விற்கப்படாது அல்லது அடமானம் வைக்கப்படாது” என்ற நிபந்தனையுடன் அறக்கட்டளையில் வைக்கப்பட்டது.
1956-ம் ஆண்டில், கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்க ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சங்கம் அமைக்கப்பட்டது. 1977-ல், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பெயரில் உள்ள ‘சங்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘சன்ஸ்தான்’ என்று மாற்றப்பட்டது.
இதுவரையிலான வழக்கும் ஞானவாபி உத்தரவும்
வெவ்வேறு மனுதாரர்களால் மதுராவில் உள்ள நீதிமன்றங்களில் குறைந்தது ஒரு டஜன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களிலும் உள்ள பொதுவான அம்சம் 13.77 ஏக்கர் வளாகத்தில் இருந்து மசூதியை அகற்றுவதற்கான வேண்டுகோள் ஆகும். இந்த ஆண்டு மே மாதம், அலகாபாத் உயர்நீதிமன்றம் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மஸ்ஜித் பிரச்னை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாற்றிக் கொண்டது.
சமீபத்திய மதுரா உத்தரவு வாரணாசியின் ஞானவாபி மசூதியில் உள்ளதைப் போன்றது, இந்த மசூதி ஒரு வணக்கத்திற்குரிய இந்து கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 16 ஆம் தேதி, உள்ளூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன் மூலம் காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதியின் வீடியோகிராஃபிக் ஆய்வு முடிந்தது. ஆய்வு நடவடிக்கைகளின் போது, இந்து தரப்பு சிவலிங்கம் என்றும், முஸ்லீம் தரப்பு நீரூற்று என்றும் கூறும் ஒரு அமைப்பு மசூதி வளாகத்திற்குள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஞானவாபி மசூதி வளாகத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நேரத்தில், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஏ.கே. விஸ்வேஷா, “சம்பந்தப்பட்ட சொத்தில் அதாவது செட்டில்மென்ட் ப்ளாட் எண் 9130 (ஞானவாபி மசூதி) நிலத்தில் அறிவியல் ஆய்வு/கண்காணிப்பு / அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏ.எஸ்.ஐ) உத்தரவிட்டார்.
மசூதி கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும், பின்னர் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, ஆய்வுக்கு தடை கோரி, ஆய்வு நிறுத்தப்பட்டது. இரு நீதிமன்றங்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 4-ம் தேதி மீண்டும் ஆய்வுக்கான தளங்களை அகற்றின. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை குழுக்கள் வளாகத்தை ஆய்வு செய்து வருகின்றன.
திங்கள்கிழமை வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அறிவியல் ஆய்வின் முடிவுகளை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏ.எஸ்.ஐ) மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.