கராச்சியில் தனது செல்வாக்கு அதிகமிருந்த நாட்களில் ஒரு முத்தாஹிதா கவும்மி இயக்கம் (எம்.க்யூ.எம்) பேரணி எப்படி இருக்கும் தெரியுமா? ...... ஒரு மேடை, அந்த மேடையின் நடுவில் அந்தக் கட்சி தலைவரின் புகைப்படம் , லண்டனில் இருக்கும் அந்த தலைவர் பேச்சைக் கேட்க மேடையில் ஒரு தொலைபேசி இணைப்பு ,மேடையை சுற்றி அந்த தலைவரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் பேனர்கள். அந்த இயக்கத்தின் மத்தியக் குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மேடையில் இருக்கும் அந்த தொலைபேசியின் முன் மிகவும் பணிவோடு அமைதியாய் உட்கார்ந்திருப்பார்கள். அந்த தொலைபேசியில் இருந்து வரும் தலைவரின் கட்டளைக்காக, ஆயிரமாயிரம் கட்சி உறுப்பினர்களும் , ஆர்வலர்களும்.... மேடையின் முன் வரிசையமைத்து ஒழுக்கமாக உட்கார்ந்திருப்பார்கள்.
லண்டன் நகரத்தில், மில் ஹில் என்ற பகுதியில் வசிக்கும் அல்தாஃப் உசேன், சரியான நேரத்தில் இந்த காராச்சி மேடையில் இருக்கும் தொலைபேசி எண்ணிற்கு கால் செய்வார். இந்த தொலைபேசி இணைப்பு வந்ததும், காரச்சி அமைதியாகும். தொலைபேசியின் மூலம் பாகிஸ்தானிய அரசைப் பற்றியும், அரசை எதிர்க்க வேண்டிய யுக்திகளை பற்றியுமான அல்தாஃப் உசேனின் பேச்சு, கராச்சி மக்களின் உணர்வுகளை வேகப்படுத்தும் .
இந்த, அல்தாஃப் உசேன் தற்போது இந்தியாவில் அடைக்கலம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டால், பிரிட்டிஷ் நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்தியாவில் அடைக்கலம் அடைவது இதுவே முதல் முறையாகும்.
யார் இந்த அல்தாஃப் உசேன், ஏன்..... பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு போக வேண்டும்.... லண்டனில் இருந்து ஏன் பாகிஸ்தானில் தொலைபேசி மூலம் போரட்டத்தையும், பேரணியையும் முன்னெடுக்க வேண்டும். ஏன்.... தற்போது, இந்தியாவிடம் அடைக்கலம் கேட்க வேண்டும் என்பதை இந்த ஆய்வுக்கட்டுரையில் காண்போம்.
அல்தாஃப் உசேனும் , பாகிஸ்தானும் :
1992ம் ஆண்டு அல்தாஃப் உசேன் கட்சிக்குள் ஏற்பட்ட உள்சண்டை மிகவும் வன்முறையாக மாறியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய பாகிஸ்தானிய இராணுவம் அல்தாஃப் உசேனின் அரசியல் வாழ்வையே ஒடுக்கநினைத்தது. இதனால், பிரிட்டிஷ் நாட்டிற்கு தப்பு சென்று பிரிட்டிஷ் குடியுரிமையும் பெற்றார். இரண்டு சகாப்பதங்களாக பிரிட்டிஷ் அரசு இவரை பெரிதாய் கண்டுக் கொள்ளவில்லை. இவர் மீது, பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மௌனத்தை மட்டும் பதிலாய் கொடுத்து வந்தது. இருந்தாலும், 2016ம் ஆண்டில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய அல்தாஃப் உசேன் பேச்சு பாகிஸ்தானில் பயங்கர வன்முறையை ஏற்படுத்தியது. இதனால், பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்குள் அல்தாஃப் உசேனைக் கொண்டு வந்தது.
அந்த பேச்சில் என்ன இருந்தது :
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் என்ற ஆபரேஷனால் 2013ல் இருந்து பல முத்தாஹிதா கவும்மி இயக்கத்தை சேர்ந்த பலர் கொல்லபட்டார்கள். இதற்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் செய்தனர். இந்த போராட்டம் முடிவடைந்த சில நாட்களுக்குள்ளாகவே அல்தாஃப் உசேன் தனது ஆதர்வளர்களிடம் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, " பாகிஸ்தான் இந்த உலகத்துக்கான புற்றுநோய், தீவிரவாதத்தின் ஒரு மையமாக இருப்பதனால், உலத்திற்கு ஒரு தலைவலியாக பாகிஸ்தான் உள்ளது..... பாகிஸ்தான் நீ நீடித்து வாழ் என்று இனி யாரால் சொல்லுமுடியும், நீ மடிந்து போ என்று கூற முடியும்" என்று சொல்லிவிட்டு தனது ஆதரவாளர்களை இரண்டு ஊடக நிறுவனகளுக்குல் நுழைந்து உங்களது எதிர்ப்பைக் காட்டுங்கள் என்றும் கூறினார்.
அவர் பேசியதாவது, " தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஏஆர்ஒய் , சமா (தொலைக்காட்சி சேனல்கள்) செல்ல இருக்கின்றீர்கள்.... அப்படித்தானே?...... எனவே, இன்று ஏஆர்ஒய் , சமா டிவி சேனல்களுக்கு சென்று, நாளை சிந்து அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தை இழுத்து மூட உங்களை புதிபித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
இந்த பேச்சுக்குப் பிறகு, அல்தாஃப் உசேனின்40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் அடைய ஆரம்பித்தது. பாகிஸ்தான் அரசாங்கம் அவரின் கட்சியை பெரும் அடக்குமுறையோடு கையாண்டது. நயன் ஜீரோ என்று அழைக்கப்படும் அவரின் கட்சி தலைமை அலுவலகம் இழுத்து மூடப்பட்டன.
முத்தாஹிதா கவும்மி இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து முக்கியத் தலைவர்களும் அல்தாஃப் உசேனின் கருத்துக்கு அடுத்த நாளே எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அந்த கட்சி பாகிஸ்தான் அரசியிலில் இன்று வரை அதனால் மீளமுடியவில்லை. உதாரணமாக, பாகிஸ்தான் சர்ஸாமீன் கட்சி 2018ல் நடந்த தேர்தலில் முத்தாஹிதா கவும்மி இயக்கத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்பட்டது. இந்தக் கட்சியை ராணுவத்துடன் நெருக்கம் பேணியது என்பதனை அனைவரும் அறிவர்.
முத்தாஹிதா கவும்மி இயக்கம் 2018 தேர்தலில், தனது வரலாற்றில் இல்லாத அளவில் வெறும் 7 சீட்டுகளை மட்டும் வென்றது. 2008,2013 தேர்தலிகளில் இதன் எண்ணிக்கை 25, 18 ஆகும்.
இதனிடையே, 2016 ம் ஆண்டில் அல்தாஃப் உசேன் பேச்சு குறித்து பாகிஸ்தான் அரசு கொடுத்த புகாரின் பேரில், ஸ்காட்லாந்து காவல்துறையினர், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக உசேன் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது.
ஒரு மனிதன், அவர் சார்ந்த கட்சி:
1970 களில் அனைத்து பாகிஸ்தான் மொஹாஜிர் மாணவர் அமைப்பின் மாணவர் தலைவராக, அல்தாஃப் உசேனும் பதவியேற்ற போது அவரின் அரசியல் பயணம் ஆரம்பித்தது. இராணுவ சர்வாதிகாரியான ஜியா உல்-ஹக் மற்றும் பாகிஸ்தான் ஜனநாயக கட்சியின் பின்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்ட நேரத்தில், கராச்சியிலும், சிந்து மாகாணத்தின் பிற நகரங்களிலும் பாகிஸ்தான் ஜனநாயக கட்சிக்கு எதிர்க்கும் ஒரு குரலாக அனைத்து பாகிஸ்தான் மொஹாஜிர் மாணவர் அமைப்பு இருந்தது.
இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை, சிந்து மாகாணத்தில் இருந்து கராச்சி நகரத்தை பிரித்து அதை தனியாக மொஹாஜிர் மாகாணம் என்று மாற்றவேண்டும். உத்தர பிரேதசம், டெல்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு மொஹாஜிர் என்று பெயர். உருது மொழி பேசும் கராச்சி நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்களிடம் இந்த கட்சி பெற்ற செல்வாக்கைப் பார்த்து பாகிஸ்தானின் மற்ற அரசியல் கட்சிகளும், ராணுவமும் பதட்டம் அடைந்தன.
1990 களில், இந்த அமைப்பு பாகிஸ்தான் இராணுவத்தால் குறிவைக்கப்பட்டது. பாகிஸ்தானை பிளவுபடுத்தும் நினைக்கும் இந்திய உளவுத்துறையின் கோரிக்கையின் பெயரில் தான் முத்தாஹிதா கவும்மி இயக்கம் இயங்கி வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கருதிவந்தது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ( இவர், டெல்லியில் இருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு சென்ற மொஹாஜிர் ) எதிரான 2007 லாயர்ஸ் மூவ்மென்ட்டை அல்தாஃப் உசேன் கட்சி கடுமையாக எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தான் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. 2008ம் ஆண்டு கராச்சியில் இருக்கும் தாலிபான்களுக்கு எதிரான போக்கை அல்தாஃப் உசேன் எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானின் மதசார்பற்ற ஒரே கட்சியாகவும் தன்னை வெளிபடுத்தியது முத்தாஹிதா கவும்மி இயக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.