Amazon forest fires counting: அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து உலகை அச்சுறுத்தியுள்ளது. இறுதியாக அங்கே பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சனாரோ தீயணைப்பு படையினரை நிலைநிறுத்தியுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் இந்த பேரழிவின் அளவை மதிப்பீடு செய்துவருகின்றன. ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் பல ஆண்டுகளாக இழந்த காடுகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இதற்காக பல அளவிடும் முறைகளைp பயன்படுத்தி வருகின்றனர். வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனில் 20% மழைக்காடுகள் பங்களிப்பு செய்கின்றன. ஒரு ஹெக்டேருக்கு 450 டன் கார்பனை சேமித்து வைப்பது, உலக நீர் சுழற்சியில் முக்கிய பங்கு வகிப்பது என இதன் தாக்கங்கள் மகத்தானவை.
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 74,000-க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் நடந்திருப்பதாக பிரேசிலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE) பதிவு செய்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தீ விபத்து 84 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்துகளில் பெரும்பாலானவை அமேசான் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளன. அமேசான் பிராந்தியத்தில், இந்த ஆண்டு தீ விபத்துக்களின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டிலிருந்து, எட்டு மாதங்களில் இது சராசரியை விட 35% அதிகம் ஆகும்.
தி நியூயார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டிய மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான தீ விபத்துக்கள் ஏற்கனவே காடுகள் அகற்றப்பட்ட விவசாய நிலங்களில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் நில பயன்பாட்டுக்காக மழைக்காடுகளை மாற்றியுள்ளனர்" என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மேத்யூ ஹேன்சன் கூறியதை நியூயார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
அமேசான் காடழிப்பு 1970-களில் தீவிரமாகத் தொடங்கியது. 1990-களின் இறுதியில் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் அதன் உச்ச விகிதத்தை எட்டியது. 2004 ஆம் ஆண்டில், பிரேசிலில் சுமார் 28,000 சதுர கி.மீ காடுகள் அழிக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டில் அது மீண்டும் அதிகரிப்பதற்கு முன்னர் காடழிப்பு குறைந்துவிட்டது. ஆனாலும், இதே போன்ற அளவை இந்த எண்ணிக்கையை முந்தைய பத்தாண்டுகளில் ஒரு போதும் எட்டவில்லை என்று பிரேசிலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தியில் கூறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.