Explained: The America COMPETES Act, and how it could increase opportunities for Indians in the US: அமெரிக்க பிரதிநிதிகள் சபை செவ்வாயன்று, உற்பத்திக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்பத்தில் முன்னோடி மற்றும் பொருளாதார வலிமை சட்டம் 2022 அல்லது அமெரிக்கா போட்டிகள் சட்டம் 2022 ஐ வெளியிட்டது. இது புதிய தொடக்க விசாவுடன் உலகம் முழுவதும் உள்ள திறமையான நபர்களுக்கு புதிய விஸ்டாக்களை (வாய்ப்புகளை) திறக்க முன்மொழிகிறது
போட்டிகள் சட்டம் 2022 எதைப் பற்றியது?
இந்த சட்டத்தை ஆதரிக்கும் ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்கா போட்டிகள் சட்டம், 2022, என்பது வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு சீனா மற்றும் உலகின் பிற நாடுகளை விஞ்சும் வகையில் விநியோகச் சங்கிலிகளை வலிமையாக்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் புதுமை இயந்திரத்தை மறுசீரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதில் ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
இந்த மசோதா அமெரிக்காவில் அதிக குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தியை ஊக்குவிக்க $52 பில்லியனை வழங்குகிறது, மேலும், மற்ற திட்டங்களுக்கிடையில் விநியோகச் சங்கிலியின் பின்னடைவு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த மானியங்கள் மற்றும் கடன்களுக்கு $45 பில்லியன் வழங்குகிறது.
சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் மற்றும் குடியேற்றம் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான நிதியும் இதில் அடங்கும்.
உதாரணமாக, இது கிரீன் கார்டு தொகுப்பில் இருந்து STEM PhDகளுக்கு விலக்கு அளிக்கிறது, மேலும் தொழில்முனைவோருக்கு புதிய கிரீன் கார்டு வழங்க வழிவகை செய்கிறது.
அடுத்ததாக, சீனாவின் ஜின்ஜியாங்கில் தயாரிக்கப்படும் சூரியக் கூறுகளை அமெரிக்கா குறைவாக நம்பியிருக்கும் வகையில் உற்பத்தி வசதிகளை உருவாக்க ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர்களை இந்த மசோதா அங்கீகரிக்கிறது.
சட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட விதிகள் யாவை?
ஒரு தொடக்க நிறுவனத்தில் (ஸ்டார்ட் -அப்) உரிமை ஆர்வமுள்ள தொழில்முனைவோர், அந்த தொடக்க நிறுவனத்தின் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு “W” புலம்பெயர்ந்தோர் அல்லாத என்ற புதிய வகைப்பாட்டை உருவாக்க குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்கிறது.
பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி வெளியிட்ட விதிகளின்படி, சட்டம் கையெழுத்தாகும் போது, வேலை உருவாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க வருவாய் உருவாக்கம் அல்லது முதலீட்டு மூலதனத்தைப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் வெற்றியின் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவை ஒரு நிறுவனம் வெளிப்படுத்தினால், அந்த தொடக்க நிறுவனத்தில் உரிமையுள்ள வெளிநாட்டு குடிமக்களுக்கள் புலம்பெயர்ந்த தொழில்முனைவோராக, சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை அந்தஸ்துக்காக சுய-மனு தாக்கல் செய்யும்போது, அதற்கான நடைமுறைகளை நிறுவ உள்நாட்டு பாதுகாப்பு செயலாளருக்கு இந்த மசோதா வழிகாட்டும்.
W -1 புலம்பெயர்ந்தவர் அல்லாதவர் என வகைப்படுத்துவதற்கான சுய-மனுதாரர்களுக்கு ஒரு தொடக்க நிறுவனத்தில் உரிமை ஆர்வமுள்ள வெளிநாட்டு குடிமக்களுக்கான நடைமுறைகளை நிறுவவும், அத்தகைய வகைப்பாட்டின் நீட்டிப்புகளை நிறுவனம் சில வளர்ச்சி அளவுகோல்களை சந்தித்தால் எட்டு ஆண்டுகள் வரை பெறவும் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளருக்கு இது அறிவுறுத்துகிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு இன்றியமையாத பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான W -2 விசாக்களையும் இது வழங்குகிறது.
தகுதிவாய்ந்த அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஒரு தகுதி வாய்ந்த அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய முனைவர் பட்டத்திற்கு சமமான தகுதியுள்ள வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதம் (STEM) ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்ற குறிப்பிட்ட வெளிநாட்டினர் (மற்றும் அத்தகைய வெளிநாட்டவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள்) புலம்பெயர்ந்த விசாக்களுக்கான எண்ணிக்கை வரம்புகளிலிருந்து இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.
ஒரு தொடக்க நிறுவனத்தில் வெளிநாட்டு தனிநபர் 10 சதவீதத்திற்குக் குறையாத உரிமையைக் கொண்டிருந்தால், அல்லது ஒரு வெளிநாட்டு தனிநபர், தொடக்க நிறுவனத்தின் மேலாண்மை அல்லது செயல்பாடுகளில் மைய மற்றும் செயலில் பங்கு வகித்தால், அல்லது விண்ணப்பதாரருக்கு அறிவு, திறன்கள் அல்லது அனுபவம் இருந்தால், வணிகத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நிறுவனத்திற்கு கணிசமாக உதவினால், முதலில் அந்த நபரை W -1 அல்லாத குடியேற்றக்காரர் என்று மூன்று வருட காலத்திற்கு வகைப்படுத்த உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளருக்கு இந்த மசோதா அனுமதி வழங்குகிறது.
மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய 18 மாத காலப்பகுதியில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து குறைந்தபட்சம் USD 250,000 தகுதிவாய்ந்த முதலீடுகள் அல்லது குறைந்தபட்சம் USD 100,000 தகுதிபெறும் அரசு விருதுகள் அல்லது மானியங்கள், பில் நோட்டுகளை ஸ்டார்ட் அப் நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.
எதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது?
ஜனாதிபதி பிடென் தனது அறிக்கையில், ஹவுஸ் மற்றும் செனட் வகுத்த திட்டங்கள் (கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு மசோதாவை நிறைவேற்றியது) அமெரிக்க தொழில்துறை அடித்தளம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள உருமாற்ற முதலீடுகள் 20 ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தவும், நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவியது என்றார்.
“அவர்கள் உற்பத்தி வேலைகளை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வர உதவுவார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு அதிக விலைக்கு வழிவகுத்த குறைக்கடத்திகள் போன்ற சப்ளை செயின் இடையூறுகளை எளிதாக்குவதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
இந்த மசோதாவில் கையெழுத்திட்டால் இந்தியர்களுக்கு என்ன அர்த்தம்?
இது இந்திய திறமையாளர்களுக்கும், திறமையான தொழிலாளர்களுக்கும் அமெரிக்காவில் அதிக வாய்ப்புகள் உருவாவதை குறிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்க நிர்வாகம் 85,000 H-1B பணி அனுமதிகளை வழங்குகிறது. இவற்றில், 65,000 சிறப்புத் தொழில்களைக் கொண்டவர்களுக்கானது, மீதமுள்ள 20,000 அமெரிக்காவில் முதுகலை அல்லது உயர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டு வழங்கப்பட்ட H-1B பணி அனுமதிகளில் இந்தியர்களும் இந்திய நிறுவனங்களும் குறைவாக இடம்பெற்றிருந்தனர். இந்த புதிய வகை சட்டம் மூலம், கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்திய தொழில் வல்லுநர்கள் சிறப்பாகப் பெறுவார்கள்.
சட்டமியற்றும் செயல்பாட்டில் நடப்பது என்ன?
கடந்த ஆண்டு, செனட் சபை அமெரிக்க செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க 52 பில்லியன் டாலர்களை உள்ளடக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பு மற்றும் போட்டி சட்டத்தை நிறைவேற்றியது, மேலும் சீனாவுடன் போட்டியிட அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த 190 பில்லியன் டாலர்களை அங்கீகரிக்கிறது.
2,900 பக்கங்கள் கொண்ட ஹவுஸ் மசோதா செனட் பதிப்பில் முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான $190 பில்லியனைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் விநியோகச் சங்கிலி பின்னடைவு மற்றும் முக்கியமான பொருட்கள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உற்பத்தியை ஆதரிக்க $45 பில்லியன் அடங்கியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியது.
இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சபையில் நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸின் இரு அவைகளின் தலைவர்களும் பதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil