தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றுவது நன்மை பயக்குமா?

1948 ஆம் ஆண்டு வருட குறைந்தப் பட்ச ஊதியச் சட்டம் ஒரு திருப்பு முனைச் சட்டமாகும். இச்சட்டம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவதை உறுதி படுத்துகிறது.

இந்திய பொருளாதாரம் கொரோனா பொது முடக்கநிலையோடு போராடி வருவதால், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், தொழிலாளர்களும் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. இதனை சமாளிக்கும் வகையில், சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொடங்கியுள்ளன.

உத்திர பிரேதேசம்,மத்திய பிரேதேசம் குஜராத் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களில் சில முக்கிய திருத்தங்களை அறிவித்தது. அதிலும், குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட உத்திர பிரேதேசம், அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும்  அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது.  இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் (ராஜஸ்தான்/பஞ்சாப்) மற்றும் பிஜேடி (ஒரிசா) ஆட்சி செய்யும் மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களில் சிறு திருத்தங்களை அறிவித்தன.

அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று எடுத்தக் கொள்ளப் பட்டாலும், பொருளாதார வல்லுநர்கள் பேசி வந்த உண்மையான பொருளாதார சீர்திர்ருத்தங்கள் இவைதானா? இதுபோன்ற ஒரு அசாத்திய பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர் சட்டங்களை திருத்தி அமைப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தாதா? என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் வாயிலாகவும் கேள்விக் குறியாக உள்ளது. உதரணாமாக, இந்திய அரசியலமைப்பு ‘தொழிலாளர்’ தொடர்பான சட்டமியற்றும் உரிமையை பொதுப் பட்டியலில் வைத்துள்ளது. எனவே, தொழிலாளர் நலன்களுக்காக செயல்படுத்தப்படும்  மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும்?  என்ற வினவப்படுகிறது.


இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ?

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலன்களுக்காக 50க்கும் மேற்பட்ட  சட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில் குறைந்தது 200 க்கும் மேற்பட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பரவலாகப் பார்த்தால், தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

விளக்கப்படம் 1:

 

தொழிற்சாலை வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதும், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 1948 ஆண்டில் தொழிற்சாலைகள் சட்டம் இயற்றப்பட்டது. மறுபுறம், கடைகளில் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பணியினை முறைபடுத்துவதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் இயற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு வருட குறைந்தப் பட்ச ஊதியச் சட்டம் ஒரு திருப்பு முனைச் சட்டமாகும். இச்சட்டம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவதை உறுதி படுத்துகிறது.  எவ்வாறாயினும், 1947 ஆம் ஆண்டு வருட இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம்  மிகவும் சர்ச்சைக்கூறியதாக கருதப்படுகிறது.ஏனெனில், இந்த சட்டம் பணிநீக்கம், பணிநீக்கத்தின் போது இழப்பீடு வழங்குதல், நிறுவனங்களை இழுத்து மூடுதல், தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமைகள் போன்றவைகளை இந்த சட்டம் கையாள்கிறது.

தொழிலாளர் சட்டங்கள் ஏன் விமர்சனங்களுக்கு உள்ளானது ?

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு பெரும்பாலும் ‘வளைந்து கொடுக்கும் தன்மை’ இல்லை என்று கூறப்படுகிறது. உதாரணமாக, கடுமையான சட்டக் கோட்பாடுகளினால்,100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனம் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தயங்குகின்றது. ஏனெனில், இத்தகைய  நிறுவனங்கள் ஒரு பணியாளரை நீக்க வேண்டுமெனில் அரசு ஒப்புதல் தேவைப்படுகிறது. பெரிய நிறுவனங்களில் கூட முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் அதிகளவு பணியாளர்களை பணியமர்த்தி வருகிறது என்பதை விளக்கப்படம் 4-ல் காணலாம். கடுமையான சட்ட நெறிமுறைகள், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்கு போதுமான நன்மைகளை பயக்குகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பிகிறது.

இதுபோன்று, தேவையில்லாத,சிக்கலான, திறம்பட செயல்படுத்தப்பட முடியாத ஏகப்பட்ட சட்டங்கள உள்ளன என்பதை நிபுணர்கள் அவ்வப்போது  சுட்டிக்காட்டி வருகின்றனர். இது ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டின் அடித்தளமாக அமைகிறது என்பதும் பொதுவான குற்றச்சாட்டு.

அடிப்படையில், இந்தியாவில் குறைவான மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தால்,ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும்  சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு பணியாளர்களை அதிகாரிக்கு (அ) சுருக்க முடியும். கடுமையான சட்டத்தால், இந்தியாவின் 90% தொழிலாளர்கள் சட்டப் பூர்வ பாதுக்காப்பின்றியும், அடிப்படை வாழ்க்கைக் கூட உத்தரவாதம் இல்லாத மிகக்குறைந்த ஊதியங்களைப் பெற்றும் அமைப்பு சாராத் தொழில்களில் பணியாற்றி வருகின்றனர்.

உ.பி. போன்ற மாநிலங்கள் இதற்கு தான் தீர்வை தேடியதா?

உண்மையில், இல்லை. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உட்பட  அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் உத்திர பிரேதேச அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ICRIER அமைப்பைச் சேர்ந்த ராதிகா கபூர்  கூறுகையில்,” தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படும் சூழல் இதன் மூலம் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஒரு சீர்திருத்தம் இருக்கும் நிலையை முன்னேற்ற வேண்டும், உ.பி அரசின் நடவடிக்கைகள், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், ஊதியத்தையும் குறைக்க வழிவகுக்கிறது.

தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது, பொதுமுடக்க நிலை கால சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று நிறுவனங்களை  நிர்பந்திப்பதற்குப் பதிலாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. இது, அம்மைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

ஊதியங்கள் ஏன் குறையும்?

விளக்கப்படம் 3-ல் கூறப்பட்டது போல், கொரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு காலத்திற்கு முன்பே, ஊதிய விகிதத்தின் வளர்ச்சி இந்தியாவில் மிதமாக இருந்தது. மேலும், முறையான மற்றும் முறைசாரா ஊதிய விகிதங்களுக்கு உள்ள இடைவெளியும் அதிக அளவில் இருந்தது. உதாரணமாக, நகர்ப்புறங்களில் முறையான நிருவனங்களில் பணிபுரியும்  ஒருவர் சம்பாதிக்கும் தொகையில் 20% மட்டுமே,  கிராமப்புற இந்தியாவில் ஒரு சாதாரண பெண் தொழிலாளி சம்பாதிக்கிறான்.

அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் அகற்றப்பட்டால், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் முறைசாரா முறையில் மாறும், ஊதிய வளர்ச்சி விகிதமும்  கடுமையாக சரியும். தொழிலாளியின் குறை தீர்க்கும் வழி இல்லாமல் போகும் என்று ஏஐடியுசி அமைப்பின் பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறினார்.

இந்த திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுமா?

கோட்பாட்டளவில், தொழிலாளர் விதிமுறைகள் குறைவாக இருந்தால் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். எவ்வாறாயினும், கடந்த காலங்களில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் எளிமையாக்கிய பல மாநில அரசுகள் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் தவறிவிட்டன.

இருப்பினும், வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக மனித மேம்பாட்டு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு ஆய்வு மைய இயக்குனர் ரவி ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

தற்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில், அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதாக இருந்தால், மாநிலங்கள் ஷிப்ட்டை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது. அதற்கு பதிலாக தலா 8 மணிநேர கொண்ட இரண்டு ஷிப்டுகளை அனுமதித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் விளைவாக ஊதியவளர்ச்சி விகிதங்கள்  வீழ்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தேவையை குறைக்கும் என்று ஸ்ரீவஸ்தவா, கபூர் இருவரும் தெரிவிக்கின்றனர்.

இது, பொருளாதார மீட்பு செயல்முறையை மேலும் பாதிக்கும்.”தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று கபூர் தெரிவிக்கிறார்.

“சரியான எதிர் திசை நோக்கி நகர்கிறோம்,” என்று ஸ்ரீவஸ்தவா எச்சரிக்கிறார்.

அரசாங்கம் வேறு ஏதாவது செய்திருக்க முடியுமா? தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சூழலை உருவாக்குவதற்கு பதிலாக, உலகெங்கிலும் பெரும்பாலான அரசாங்கங்கள் செய்ததைப் போல (விளக்கப்படம் 5) – தொழில்துறையுடன் கூட்டு சேர வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% அல்லது 5% நிதியை ஊதிய சுமையை பகிர்ந்து கொள்வதற்காக ஒதுக்க வேண்டும்.

மேலும், தொழிலாளர் விதிமுறைகளுக்கு அப்பால், திறமையான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்தங்களை பலவீனமாக அமல்படுத்துவது போன்ற பல தடைகளை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amid coronavirus lockdownstate govvernment changes application of labour law wage growth issues

Next Story
கொரோனா விவகாரத்திலும் கைகொடுக்கும் புளோரென்ஸ் நைட்டிங்கேலின் மகத்தான சேவைflorence nightingale, corona virus, sanitation, nursing, statistics, Covid 19, mortalilty rate, who was florence nightingale, florence nightingale legacy, florence nightingale work, coronavirus, coronavirus news, covid 19 tracker
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com