கடந்த ஆண்டைப் போலவே, இந்தாண்டும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான் போராட்ட பின்னணியில் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றது. 2020 ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடைபெற்றது.
தற்போது, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லைப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ளனர். மேலும், கொரோனா பெருந்தொற்று தாக்குதல் நடுவே இந்த குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் என்ன புதுமை?
கடந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் சுமார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 25,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான டிக்கெட்டுகள் இந்த ஆண்டு 4,500 ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால், இராணுவக் குழுக்களின் எண்ணிக்கை 144ல் இருந்து 96 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அந்தரத்தில் இருசக்கர வாகனம் மூலம் சாகசங்கள் இந்தாண்டு கொண்டாட்டங்களில் இடம்பெறவில்லை.
இந்தாண்டு குடியரசுத் தினவிழா அணிவகுப்பு தூரமும் குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு செங்கோட்டைக்குப் பதிலாக தேசிய மைதானத்தோடு முடிவடைகிறது. செங்கோட்டையில் அலங்கார ஊர்திகள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் 32 அலங்கார தயாரிப்புகளில், லடாக் யூனியன் பிரதேச தயாரிப்புகள் முதல் முறையாக பங்கேற்கிறது. லடாக் பகுதியில் லே என்ற ஊரில் அமைந்துள்ள இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம் லடாக் சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்கிறது.
2016 ல் பிரெஞ்சுக் குடியரசு, 2017 ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவக் குழுவுக்குப் பிறகு இந்தாண்டு வங்கதேசத்தை சேர்ந்த இராணுவக் குழு இந்திய குடியரசுத் தின அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறது.
தலைமை விருந்தினர் யார்?
55 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்தாண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக யாரும் கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்து நாட்டில் மாறியுள்ள கொவிட்-19 நிலைமையால் குடியரசு தின விழாவில் தம்மால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் முன்னதாக தெரிவித்தார். இராச்சியம். கடந்த ஆண்டின் தலைமை விருந்தினராக தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி குடியரசுத் தின விழாவை சீர்குலைக்குமா?
சாத்தியமில்லை. செங்கோட்டையில் இராணுவ அணிவகுப்பு முடிந்தபிறகுதான் ட்ராக்டர் பேரணி நடத்தப்படும், மேலும் போராட்ட இடங்கள் ஒட்டியுள்ள பகுதிகளில் தான் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுதியளித்தன் அடிப்படையில் டெல்லி காவல்துறை ஒப்புதல் வழங்கியது. பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க நகரத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 5 அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன . சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் 40,000 க்கும் மேற்பட்ட காவர்கள், ஐ.டி.பி.பி, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விவசாயிகளின் பேரணி எவ்வளவு பெரியது?
சனிக்கிழமை காலைவரை, பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான எல்லைகள் வழியாக 50,000 டிராக்டர்கள் கடந்து சென்றதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தன
லூதியானாவின் குடானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பல்வந்த் சிங் குடானி கூறுகையில் “டெல்லியில் டிராக்டர் வாகனங்கள் அணிவகுப்பு முடிவடைய குறைந்தது நான்கு நாட்களில் கூட ஆகலாம்" என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும், தங்கள் ட்ராக்டர் அணிவகுப்பில் வெவ்வேறு மாநிலங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil