Advertisment

நீதிபதி கங்கோத்பாய் சர்ச்சை: நினைவுக்கு வரும் சி.எஸ் கர்ணன் மோதல் காட்சிகள்

கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணணுக்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் சிறைக்கு சென்ற முதல் நீதிபதி இவராவார்.

author-image
WebDesk
New Update
Amid Justice Gangopadhyay row recalling retd HC judge Karnans battle with SC

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கங்கோத்பாய், முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன்

உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு எதிராக உத்தரவிட்டது. முதலில் அவர் முன் நிலுவையில் உள்ள மேற்கு வங்க ஆசிரியர் ஆட்சேர்ப்பு வழக்கை இடமாற்றம் செய்தது, பின்னர் உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் இருந்து அறிக்கை கோரும் உத்தரவுக்கு தடை விதித்தது.

Advertisment

இதற்கு வெள்ளிக்கிழமை (ஏப். 28) பதிலளித்த நீதிபதி கங்கோபாத்யாய், '"படிப்படியாக அனைத்து ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்குகளும் என்னிடமிருந்து பறிக்கப்படும்” என நம்புகிறேன்” என்றார். மேலும், உச்ச நீதிமன்றம் வாழ்க என்றும் தெரிவித்தார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்துடன் முரண்படுவது இது முதல் முறையல்ல.

கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணணுக்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் சிறைக்கு சென்ற முதல் நீதிபதி இவராவார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். கைது செய்யப்படுவதைத் தவிர்த்தார்.

இருப்பினும், சில நாட்களுக்குள், அவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார், மேலும் பிரசிடென்சி சிறையில் தண்டனையை அனுபவிக்க கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

இதற்கு முன்பும் கர்ணனுக்கு சர்ச்சைகள் புதிதில்லை. ஜனவரி 2014 இல், எஸ்சி/எஸ்டிக்கான தேசிய ஆணையத்தில் ஜாதி சார்பு புகார் அளித்த இந்தியாவின் முதல் நீதிபதி என்ற வரலாற்றைப் படைத்தார்.

அந்தப் புகாரில், “சில நீதிபதிகள் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்; அவர்கள் தலித் நீதிபதிகள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

அப்போது கர்ணனின் நடவடிக்கைகள் நியாயமற்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பிப்ரவரி 2016 இல், நீதிபதி கர்ணன் தனது இடமாற்ற உத்தரவை "தடை" செய்தார்,

சட்டப்படி, உயர் நீதிமன்றத்தின், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது கீழ் நீதிமன்றம் அதிகாரம் செலுத்த இயலாது.

தானாக முன்வைத்த உத்தரவில், நீதிபதி கர்ணன், "சிறந்த நிர்வாகத்தை காரணம் காட்டி, கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு என்னை மாற்றுவதற்கான உங்கள் லார்ட்ஷிப் முன்மொழிவுக்கு, ஏற்கனவே பதிலளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

1993-ல் நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பை குறிப்பிட்டு, தலைமை நீதிபதியின் இடமாற்றம் குறித்த திட்டம் இந்தத் தீர்ப்புக்கு எதிரானது என்றார்.

தொடர்ந்து, நீதிபதி கர்ணனுக்கு நீதித்துறை பணி ஒதுக்குவதை நிறுத்துமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, நீதிபதி கர்ணன் அப்போதைய தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூரைச் சந்தித்து, தனது சொந்த இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியதற்காக மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்தார்,

அங்கு அவர் சாதி பாகுபாடுகளை எதிர்கொண்டதாகக் கூறப்படும் "மன விரக்திகளால் மன சமநிலையை இழந்ததற்கு" இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறினார்.

2016 டிசம்பரில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன், எந்த ஒரு நீதித்துறைப் பணியையும் செய்யவிடாமல் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் நேரில் தாக்கல் செய்த மனுவை வாதிட அனுமதி கோரினார்.

உச்ச நீதிமன்றம் அவரது மனுவை ஏற்றுக்கொண்ட போதிலும், 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நீதிபதி கர்ணன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை நீதிபதிக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினார்,

அப்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் 20 நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நடவடிக்கை, நீதிபதியின் கைதுக்கு வழிவகுத்தது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றம் முதலில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மார்ச் 2017 இல், நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கு எதிராக தனது முன் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து, அவர் பிறப்பித்த எந்த உத்தரவுக்கும் எந்த அதிகாரமும் செயல்பட தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment