Advertisment

சாதிவாரி கணக்கெடுப்பும் ஓ.பி.சி வாக்கு வங்கியும்

பின் தங்கிய மற்றும் உயர் வகுப்பு OBC களின் வாக்குப்பதிவு முறைகளில் தெளிவான போக்குகள் உள்ளன. பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.க.,வை இப்போதைக்கு தற்காப்பில் வைத்துள்ளது. ஆனால் இது மண்டல் 2.0 அல்ல

author-image
WebDesk
New Update
bihar caste census

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு

Sanjay Kumar

Advertisment

பா.ஜ.க.,வின் தேர்தல் வெற்றியின் முதல் (1996-2004) மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு (2014 முதல்) இடையே ஒரு பெரிய வித்தியாசம் கட்சியின் சமூக அடித்தளத்தின் அளவில் உள்ளது. முன்பு பனியா-பிராமணக் கட்சியாகவோ அல்லது நகர்ப்புற உயர் சாதியினர் மற்றும் உயர் வகுப்பினரின் கட்சியாகவோ பார்க்கப்பட்ட பா.ஜ.க, இப்போது மிகவும் பரந்த அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: An Expert Explains: Caste survey & OBC vote

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வின் அகில இந்திய வாக்குப் பங்கு (37.6%) 2009 ஆம் ஆண்டை விட (18.6%) கிட்டத்தட்ட இரு மடங்காகும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி), ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுடன் சேர்ந்து, உயர் சாதியினரிடையே தனது முக்கிய ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக்கொண்டதன் காரணமாக இந்த வாக்கு சதவீதம் பெரிய அளவில் உயர்ந்தது.

ஓ.பி.சி.,க்களில், குறிப்பாக சிறிய தனிநபர் மக்கள்தொகை கொண்ட சாதிகளின் குழு, ஆனால் ஓ.பி.சிகளின் பெரிய பிரிவைக் கொண்டுள்ள பின் தங்கிய ஓ.பி.சி.,களிடம் இருந்து பா.ஜ.க ஆதரவைப் பெற்றது.

லோக்நிதி-வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (CSDS) நடத்திய பல்வேறு ஆய்வுகளின் தரவுகள் சில தெளிவான போக்குகளைக் காட்டுகின்றன.

ஓ.பி.சி மற்றும் காங்கிரஸ், பிராந்திய கட்சிகள்

ஓ.பி.சி.,க்கள் மத்தியில் பா.ஜ.க. தனது அடித்தளத்தை விரிவுபடுத்தியது என்பது, காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள், குறிப்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் தங்களது ஆதரவு தளத்தை இழந்ததன் அடிப்படையில் வந்துள்ளது.

1996 மற்றும் 2009 க்கு இடையில், பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே முக்கிய ஆதரவுடன் ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியக் கட்சிகள், குறிப்பாக பீகாரில் RJD மற்றும் JD(U), மற்றும் உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி (SP) போன்றவை, OBC வாக்குகளில் மிகப்பெரிய பங்கைப் பெற்றன, மீதமுள்ளவை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே ஏறக்குறைய பாதியாக பிரிக்கப்பட்டுள்ளன.

2014 மக்களவைத் தேர்தலில், ஓ.பி.சி வாக்குகளில் காங்கிரஸின் பங்கை (15%) விட இரண்டு மடங்குக்கு மேல் பா.ஜ.க (34%) வென்றது. 2019 ஆம் ஆண்டில் ஓ.பி.சி.,க்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்கும் போக்கு (44%) தீவிரமடைந்தது, இந்தத் தேர்தலில் பா.ஜ.க பிராந்தியக் கட்சிகளின் பங்கிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது.

லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் மூட் ஆஃப் தி நேஷன் சர்வே 2023, ஓ.பி.சி.,க்கள் பா.ஜ.க.,வை நோக்கி மேலும் மாறுவதைக் குறிக்கிறது. OBC கள் மத்தியில் காங்கிரஸூம் ஆதரவைப் பெறுவதாக கணக்கெடுப்பு காட்டுகிறது, இருப்பினும், இந்த அதிகரித்த ஆதரவு தென் மாநிலங்களில் இருந்து வந்தது (படம் 1).

இருமுனைப் போட்டிகளில், காங்கிரஸை விட பா.ஜ.க பெரும்பாலும் அதிக ஓ.பி.சி ஆதரவைப் பெற்றுள்ளது. 2023 கணக்கெடுப்பில், பா.ஜ.க.,வுக்கு இந்த ஆதரவு காங்கிரஸுக்கு வெறும் 18% உடன் ஒப்பிடும்போது 72% ஐத் தொட்டது (படம் 2).

பா.ஜ.க மற்றும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட சாதிகள்

2014 முதல், பா.ஜ.க.,வுக்கு உயர் வகுப்பு OBC களின் (உ.பி. மற்றும் பீகாரில் உள்ள யாதவர்கள்) ஆதரவை விட பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட சாதியினரிடமிருந்து அதிக ஆதரவு கிடைத்துள்ளது. 2014 இல் குறைந்த OBC களில் 43% பேர் BJP க்கு வாக்களித்துள்ளனர் என்பதை படம் 3 காட்டுகிறது, மேலும் இந்த எண்ணிக்கை மே 2023 இல் 50% ஆக உயர்ந்துள்ளது. உயர் வகுப்பு OBC களை பொறுத்தவரை, இந்த எண்ணிகை முறையே 30% மற்றும் 40% ஆக இருந்தது.

காங்கிரஸும் உயர் வகுப்பு OBC களை விட பின் தங்கிய OBC கள் மத்தியில் சற்றே கூடுதலான ஆதரவைக் கொண்டுள்ளது (படம் 3). இதற்குக் காரணம், பின் தங்கிய OBCக்களுடன் ஒப்பிடும்போது, ​​உயர் வகுப்பு OBCகள் பிராந்தியக் கட்சிகளுக்கு அதிக அர்ப்பணிப்புடன் இருப்பதேயாகும் (படம் 5).

பா.ஜ.க-காங்கிரஸ் இருமுனைப் போட்டியில், உயர் வகுப்பு மற்றும் பின் தங்கிய OBC களின் ஆதரவு இரண்டு கட்சிகளுக்கும் பாதிக்கும் குறைவான அளவில் உள்ளது. (மே 2023 இல் பா.ஜ.க.,வுக்கு உயர் வகுப்பு மற்றும் பின் தங்கிய OBC களில் தலா 72% மற்றும் காங்கிரசுக்கு முறையே 20% மற்றும் 17%; படம் 4.)

பீகாரில் நிலைமை

பிகாரில் OBC கள் மத்தியில் பா.ஜ.க.,வுக்கு (BJP) அதிகரித்து வரும் ஆதரவை புள்ளிவிவரங்கள் 6-8 காட்டுகிறது, குறிப்பாக 2014 முதல் பின் தங்கிய OBC கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. RJD மற்றும் JD(U) அனைத்து OBC களிலும் வாக்குகளைப் பெறுகின்றன, ஆனால் அவர்கள் உயர் வகுப்பு OBC களில் மிகவும் பிரபலமாகவே இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் ஆதரவைப் பெற்ற முதல்வர் நிதிஷ் குமார், RJD யில் இருந்து BJP க்கும், மீண்டும் RJD க்கும் மாறியுள்ளார், இது நிலைமையை சிக்கலாக்குகிறது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் காரணமாக பீகாரில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் பொருத்தமானவை. 100 க்கும் மேற்பட்ட சாதிகளை உள்ளடக்கிய பின் தங்கிய OBC களின் வரையறுக்கப்பட்ட துணைப்பிரிவான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs) மக்கள்தொகையில் 36% உள்ளனர், அதே நேரத்தில் உயர் வகுப்பு OBC கள் 27%.

தரவுகளிலிருந்து முடிவுகள்

இந்திய அரசியலில் பா.ஜ.க மேலாதிக்க சக்தியாக உருவெடுக்க ஓ.பி.சி ஆதரவு பெரும் பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் OBC கள் மக்கள்தொகையில் பெரும் பிரிவினராக உள்ளனர், மேலும் BJP அவர்களுக்கு, குறிப்பாக பின் தங்கிய OBC களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மற்றும் மேடைகளில் போதுமான பிரதிநிதித்துவத்தை அளித்துள்ளது.

அதன் ஓ.பி.சி ஆதரவில் ஒரு சிறிய சரிவு பா.ஜ.க.,வுக்கு தோல்வியை அர்த்தப்படுத்தாது என்றாலும், ஹிந்தி பெல்ட்டில் அது தனது ஆதிக்கத்தை நிச்சயமாகத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு பிராந்தியக் கட்சிகளுக்கு ஒரு அணிதிரட்டல் புள்ளியாக மாறும், மேலும் இது அகில இந்திய அளவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அறிவிக்க பா.ஜ.க.,வுக்கு அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

இன்னும், இந்த தருணம் மண்டல் 2.0 அல்ல. ஏனென்றால், 2023 என்பது 1990 அல்ல, மேலும் OBCகள் உயர் வகுப்பு மற்றும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களிடையே பிரிக்கப்பட்டுள்ளனர், இது இந்த சாதிகள் வாக்களிக்கும் விதங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறுகிய கால பேசு பொருளாக இருக்கும், மேலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மற்ற பிரச்சினைகளே களத்தில் வெளிப்படும்.

சஞ்சய் குமார் CSDS இல் உள்ள லோக்நிதி ஆராய்ச்சி திட்டத்தின் பேராசிரியர் மற்றும் இணை இயக்குனராக உள்ளார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Caste Census
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment