Advertisment

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து... நிவாரணம் பெற கடும் போட்டி; தீர்ப்பாயம் மூலம் அதிக இழப்பீடு பெறும் பாதிக்கப்பட்டவர்கள்

கோரமண்டல் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீத மக்கள், ரயில்வே தீர்ப்பாயத்தின் மூலம் சுமார் ரூ. 40 கோடி வரை இழப்பீடு கோரியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coramandel accident

ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தை நம் தேசம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. நூற்றுக்கும் அதிகமானோர் மரணம், ஏராளமானோர் படுகாயம் என பல கோர சம்பவங்கள் அரங்கேறின.

Advertisment

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, 841 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Part 1: Lives derailed, most Balasore train disaster victims contest Railway relief — and get higher award in Tribunal

ஏறத்தாழ நீதிமன்றம் போலவே செயல்படும் இந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் நடத்தப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை விட இங்கு, அதிகமாக வழங்கப்பட்டதால், பலரும் ரயில்வே தீர்ப்பாயத்தை நாடியுள்ளனர்.

உதாரணத்திற்கு, கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு ரயில்வே சார்பாக ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்து வழக்கு நடத்தியதன் முடிவில், ஒருவருக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் மற்றொருவருக்கு ரூ. 80 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் தலையில் இரும்பு கம்பி குத்தியதில் படுகாயமடைந்த நபருக்கு ரயில்வே அறிவித்த ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகையுடன் சேர்த்து தீர்ப்பாயத்தின் மூலம் கூடுதலாக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 

கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசா மாநிலம், பாலசோரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 297 பேர் உயிரிழந்தனர். மேலும், 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. எனினும், பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 1,102 பேரில், 76 சதவீதம் பேர் சென்னை, கொல்கத்தா, புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா மற்றும் போபாலில் உள்ள ரயில்வே தீர்ப்பாயங்களில் கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர்.

இதில் தாக்கல் செய்யப்பட்ட 841 மனுக்களில், 193 மனுக்கள் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரும், 648 மனுக்களை படுகாயமடைந்தவர்களும் தாக்கல் செய்திருந்தனர். இதில் 608 பேர் ஏற்கனவே ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே தீர்ப்பாயம் சார்பாக படுகாயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 5 லட்சத்து 41 ஆயிரம் பெற்றுள்ளார். இவருக்கு ரயில்வே சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. ராஞ்சியில் உள்ள ரயில்வே தீர்ப்பாயம் சார்பில் மூன்று பேருக்கு வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் தொகை, தீர்ப்பாயத்தின் சார்பில் வழங்கியதில் குறைந்தபட்சமாக கருதப்படுகிறது.

உயிரிழதவர்கள் குடும்பத்தினர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 183 பேருக்கு கூடுதலாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், 9 மனுக்கள் இது தொடர்பாக விசாரணையில் உள்ளது. இதனிடையே, கொல்கத்தாவில் மனுதாரர் ஒருவர் விசாரணையின் போது ஆஜராகாததால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த 841 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டதில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பல தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 90 பேருக்கு ரயில்வே மற்றும் மாநில அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், தீர்ப்பாயத்தின் மூலம் மட்டுமே இழப்பீடு தொகையை பெற்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஒடிசாவைச் சேர்ந்த உயிரிழந்த நபர் ஒருவரின் குடும்பத்திற்கும், மொத்தமாக காயமடைந்தவர்களில் 232 பேருக்கும் ரயில்வே சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. உயிரிழந்த 297 நபர்களில் 27 பேரின் உடல் அடையாளம் காண முடியாமல் போனது. இந்நிலையில், காயமடைந்த 215 பேர் எவ்வாறு விபத்தில் தொடர்புடையவர்கள் என ரயில்வே நிர்வாகம் கேள்வி எழுப்பிருந்தது. தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சிலர் தங்கள் இழப்புகள் குறித்து தெரிவிக்க முடியாததால், குறைவான நிவாரண தொகையே பெற முடிந்தது. 

ரயில்வே தீர்ப்பாயத்தில் 841 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் ரூ. 40 கோடியே 60 லட்சம் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. இவற்றில் 793 மனுக்கள் மீது ரூ. 18 கோடியே 69 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சராசரியாக சுமார் ரூ. 4 லட்சத்து 32 ஆயிரம் இழப்பீடு கோரியிருந்த நிலையில், தீர்ப்பாயம் தரப்பில் சராசரியாக 68 ஆயிரத்து 284 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 23 கோடியே 23 லட்சத்தை விட தீர்ப்பாயம் சார்பில் அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 32.8 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 27 கோடியும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 5.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தென்னக அதிகாரப்பூர்வ வலைதளத்தில், ரயில்வே தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் பேரில், ரூ. 21.84 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த தரவுகளின் கீழ் சிலவற்றை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது அவை,

* சென்னையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் தாங்கள் கோர விரும்பும் தொகையை குறிப்பிடவில்லை. அவர்களின் காயங்கள் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது. இதேபோல், ராஞ்சியைச் சேர்ந்த 12 விண்ணப்பதாரர்களும், பாட்னாவைச் சேர்ந்த ஒரு விண்ணப்பதாரரும் தாங்கள் கோர விரும்பும் தொகையை குறிப்பிடவில்லை.

* காயமடைந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 577 மனுக்கள் புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் விசாரிக்கப்பட்டன. இதில், ரூ. 25 கோடி கோரப்பட்ட நிலையில், ரூ. 4 கோடி வழங்கப்பட்டது. 

* இதில் கொல்கத்தாவில் 22 மனுக்களும், புவனேஷ்வரில் 1 மனுவும் விசாரணையில் உள்ளது.

* போபாலில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ரயில்வே சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு பெற்ற நபருக்கு, ரூ. 4 லட்சம் கோரி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது ரூ. 1.6 லட்சம் வழங்கப்பட்டது. 

மேலும், பாதிக்கபப்ட்டவர்கள் விபத்து நடந்த போது ரயிலில் பயணித்தனரா என ரயில்வே நிர்வாகம் ஆதாரம் கேட்டதாக தெரிகிறது. 

இதனிடையே, ஹைதர் என்பவர் ரயிலில் பயணித்ததற்கான சரியான ஆதாரம் இல்லை எனக் கூறி அவருக்கு இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர், அவருக்கு ரூ. 20 ஆயிரத்தை இழப்பீடாக தீர்ப்பாயம் வழங்கியது. 

விபத்து நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, சிபிஐ தரப்பில் மூன்று ரயில்வே ஊழியர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இது தவிர, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை அடிப்படையில், 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Train accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment