Advertisment

Explained : தெலுங்கு தேசக் கட்சியை எங்களோடு இணையுங்கள் என்று பாஜக சொல்லக் காரணம்?

ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்காத கட்சி, ஒரு பிராதான கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது, வேண்டுமானாலும் வந்து இணையுங்கள் என்று சொல்வதில் தான் பாஜகவின் அரசியல் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained : Explained: Why BJP wants TDP to ‘merge’ with it in Andhra Pradesh

Explained : Explained: Why BJP wants TDP to ‘merge’ with it in Andhra Pradesh

லிஸ் மேத்யூ

Advertisment

தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) தங்களது கட்சியோடு ஒன்றிணைக்கும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி சமீப நாட்களில் பகிரங்கமாகவே கூறிவருகிறது. ஆந்திரா மாநில பாஜக தலைவர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், எங்களோடு இணைவதற்குத் தயாரா?  என்று இரண்டு முறை தெலுங்கு தேசக் கட்சியைப் பார்த்துக் கேட்டுள்ளார். தயாராக இருந்தால், அதுகுறித்த பேச்சுவார்த்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1 சதவீதம் ஓட்டு வாங்க முடியாத பாஜக, 40 சதவீத ஓட்டுவாங்கிய தெலுங்கு தேசக் கட்சியைப்  பார்த்து எங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது வேடிக்கையாய் இருந்தாலும், ஆந்திராவின் தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நாம் புரட்டி பார்த்தால் தான் இதற்கான விளக்கம் கிடைக்கும்.

ஆந்திராவின் தற்போதைய அரசியல் நிலைமை : 

மத்தியில் ஆளும் பாஜக, தென்னகத்தில் கர்நாடாகவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பெயர் சொல்லும் படியாக இல்லை. குறிப்பாக ஆந்திரா, தமிழகம்.... ஆந்திராவின் பிரதான கட்சியான தெலுங்கு தேசம் தற்போது கடுமையான சிதைவை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதால், பாஜக ஆந்திரா அரசியலில் கால்பதிக்க இதை ஒரு வாய்ப்பாகவே கருதுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை, தேசிய ஜனநாயக கூட்டமைப்பில் தோழமையாக இருந்த அதே தெலுங்கு தேசம் கட்சியைத் தான், பாஜக தற்போது  இடைவிடாது பலவீனப்படுத்தி வருகிறது.

நடந்து முடிந்த ஆந்திரா சட்ட மன்றத்தேர்தலில் , தெலுங்கு தேசம் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. 175 உருப்பினற்களுக்கு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அக்கட்சியால் வெறும் 23 இடங்களையே கைப்பற்ற முடிந்தன. 2014ம்  தேர்தலில் இக்கட்சி பெற்ற இடம் 117. இந்த மோசமான தேர்தல் முடிவால், சந்திரா பாபு நாயடுவின் அரசியல் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்தது. பாரதிய ஜனதா, சில நாட்களுக்கு முன்பாகத் தான், தெலுங்கு தேசத்தின் மூன்று ராஜ்ய சபை உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்தது. தற்போது, வெறும் ஒற்றை உருப்பினரோடு சந்திர பாபு நாயுடுவின் கட்சி உள்ளது.

இது போதாதென்று, ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாயுடுவின் மீதும், அந்தக் கட்சியில் இருக்கும் மற்ற  தலைவர்கள் மீதும் வழக்குகளை தொடர்ந்து வருகிறார். இவையெல்லாம், வெறும் அரசியல் காழ்புணர்சி  என்று சந்திரா பாபு நாய்டு சொன்னாலும், பல வகையான நெருக்கடிகளில் பின்னப்பட்டிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒன்றுபட்ட ஆந்திராவின் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ்,  தற்போது சட்டமன்றத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இரண்டு சதவீத ஓட்டைக் கூட வாங்க முடியவில்லை என்பதையும் நாம் இந்து மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய பேச்சு : 

"எங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்" என்ற பாரதிய ஜனதா கட்சியின் கூச்சல் வெற்றிடத்தில் இருந்து உருவாகவில்லை. சில நாட்களுக்கு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திர பாபு நாயுடு, பாஜக வுடன் கூட்டணியை முறித்தது தான் செய்த பெரிய முட்டாள்தனம் (அரசியல் பிழை) என்று சொல்லியிருக்கிறார். அந்த, பேச்சின் விளைவாகத் தான் பாஜகவின் தற்போது மூர்க்கத்தனமான பேச்சு அமைந்துள்ளது.

அந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து விவகாரத்தில் மத்தியில் ஆளும்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவால், அரசியலில் நாங்கள் பெரிய விலையைக் கொடுத்து விட்டோம். மத்திய அரசோடு இணக்கமாக இல்லதாததால் பொருளாதார ரீதியாக முதலீடுகளை  ஈர்க்க முடியவில்லை, அரசியால் ரீதியாகவும் எங்களது பயணம் தோல்வியில் முடிந்துவிட்டது. இதுபோன்ற, அரசியல் பிழைகளை வரும் காலங்களில் செய்ய மாட்டோம், என்று சந்திரா பாபு நாயுடு பேசியதாக  உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக இந்த பேச்சை, சந்திரா பாபு நாயுடு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலை வீசுகிறார் என்று நினைக்கின்றது.  ஆந்திரா மாநில பாரதிய ஜனதா தலைவர்  ஜி. வி. எல். நரசிம்மராவ் இது குறித்து தெரிவிக்கையில், " தெலுங்கு தேசம் ஒரு கட்சிக்கான நம்பத்தன்மையையும், சிந்தாந்தங்களையும் இழந்து விட்டது. கூட்டணி என்ற பேச்சு எடுத்தால் நாங்கள் பேச தயாராக இல்லை, ஆனால் தெலுங்கு தேசக் கட்சியை பாஜகவோடு இணைக்க அவர்களுக்கு  விருப்பம் இருந்து, அதை குறித்து பேச வேண்டும் என்றால்  அதற்கு நாங்கள் தயார் " என்றார்.

பாஜகவின் அசாதாரண சிந்தனை :

மாநிலத்தின் ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்க முடியாத கட்சி, ஒரு பிராதான கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது , வேண்டுமானாலும் எங்களோடு வந்து இணையுங்கள் என்று சொல்வதில் தான் பாஜகவின்  அரசியல் உள்ளது. இதன் மூலம், ஆந்திராவில் பாஜக ஒரு நிலையான சக்தியாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், தெலுங்கு தேசம், எங்களோடு வந்து இணையுங்கள்  என்ற சிந்தனையை  ஆந்திர அரசியலில் தெளிப்பதன் மூலம், தெலுங்கு தேச கட்சிக்குள் உட் பூசல்களும், குழப்பங்களும், கட்சி தாவல்களும் நன்கு வழிவகுக்கும் என்பது நித்ரசனமான உண்மை.

2014 ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் பெயர் சொல்லும் அளவிற்குக் கூட இல்லாத பாரதிய ஜனதா, சிவ சேனா போன்ற பெரியக் கட்சிகளை எவ்வாறு முந்தியதோ, அதே போன்று  ஆந்திராவிலும் அடித்தளம் அமைக்கமுடியும் என்ற கணக்கில் தெலுங்கு தேசியக் கட்சியின் சரிவுகளை பார்க்கின்றது.

Bjp Chandrababu Naidu Tdp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment