Advertisment

கால்நடைத் தீவன ஊழல்: 26 ஆண்டுகளாக சிக்கித்தவிக்கும் லாலு... வழக்குகளும், தீர்ப்புகளும்!

கால்நடைத் தீவன ஊழல் தொடர்புடைய 5-வது வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
கால்நடைத் தீவன ஊழல்: 26 ஆண்டுகளாக சிக்கித்தவிக்கும் லாலு... வழக்குகளும், தீர்ப்புகளும்!

கால்நடைத் தீவன ஊழல் தொடர்புடைய டோரண்டா கருவூலத்திலிருந்து ரூ.139.35 கோடி பணம் முறைகேடாக எடுத்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

Advertisment

இவர் ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். பீகாரில், ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கு, லாலுவின் 26 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நிழல் போல் பின்தொடர்ந்து வருகிறது. அதே சமயம், அவரது கட்சி செயல்பாட்டை பாதிக்கவில்லை. கடந்த 1996இல், முதல்வர் பதவியிலிருந்து விலகிய லாலு, தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார்.

தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில் ராப்ரி மீண்டும் ஆட்சிக்கு வந்தார், இதையடுத்து, லாலு 2004 இல் மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர், லூலு 2013 இல், தனது முதன் சிறை தண்டனை காலம் உறுதியான போது, தனது மக்களவை பதவியை இழந்தார். இருப்பினும், ஜேடியூ, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, 2015 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்றது. தற்போது, எதிர்க்கட்சியாக இருந்தாலும், பீகாரில் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் அக்கட்சியில் மக்களவை எம்பி யாரும் இல்லை.

ஊழல்

தீவன ஊழல் என்பது 55 வழக்குகளின் தொகுப்பாகும். பிரிக்கப்படாத பீகாரின் கருவூலத்தில் இருந்து, 1992 மற்றும் 1995 க்கு இடையில், 950 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டுகள் ஆகும்.

கால்நடைத் துறை அதிகாரிகள் தீவனம், மருந்து மற்றும் செயற்கை கருவூட்டல் கருவிகளுக்கான போலி பில்கள் மூலம் பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

ராம் சுந்தர் தாஸ் முதலமைச்சராக இருந்த 1979 ஆம் ஆண்டு முதல் இந்த துறையில் நிதி மோசடி செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் பரவி வந்தன.

இவ்விவகாரத்தில் லாலு மற்றும் அவரது முன்னோடியான ஜெகநாத் மிஸ்ராவின் பங்களிப்பு இருப்பதாக, முதல் அறிக்கை 1992 இல் அப்போதைய விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் பிது பூஷன் திவேதியால், இயக்குநர் ஜெனரல் ஜி நாராயணனிடம் வழங்கப்பட்டது.தற்போது, அந்த இன்ஸ்பெக்டர் பல வழக்குகளில் சாட்சியாக இருக்கிறார்

கால்நடை வளர்ப்பு இலாகாவை நிர்வகித்த லாலு, 1995 டிசம்பரில், இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களில், கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தபோது, இந்த ஊழல் பொதுமக்கள் பார்வைக்கு வந்தது.

அந்த அறிக்கை பீகார் கருவூலத்தின் மாதாந்திர கணக்குகளை சமர்ப்பிப்பதில் ஏற்படும் தாமதங்களை சுட்டிக்காட்டியது. மேலும், நிதிமோசடி நடைபெற்றிருக்கலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது. லாலுவின் ஆட்சிக் காலத்தில் சுமார் 950 கோடி ரூபாய் பில்களை கால்நடை பராமரிப்புத் துறை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லாலு விஜிலென்ஸ் துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பிரச்சினையை பேரவையின் பொதுக் கணக்குக் குழுவுக்கும் பரிந்துரைத்தார்.

வழக்குகள்

1996 ஆம் ஆண்டில் பாஜக தலைவர்கள் சுஷில் குமார் மோடி, ரவிசங்கர் பிரசாத் சரயு ராய், அதிருப்தி ஜனதாதள தலைவர் சிவானந்த் திவாரி, காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்திர மிஸ்ரா ஆகியோரால் ஐந்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் ஒரே வழக்காக மாற்றப்பட்டது.

பொதுநல வழக்கின் அடிப்படையில், மார்ச் 1996 இல் பாட்னா உயர்நீதிமன்றம், கால்நடை தீவின ஊழல் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

மேற்கு சிங்பூம் துணை ஆணையர் அமித் கரே, சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.70 கோடி மோசடியாக எடுக்கப்பட்டதைக் கண்டறிந்த பிறகு, ஜனவரி 24, 1996 அன்று முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பிற வழக்குகளின் எஃப்ஐஆர்கள் பிரிக்கப்படாத பீகார் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.

இந்த மோசடியில் பாட்னா, தும்கா, சாய்பாசா மற்றும் தியோகர் ஆகிய நான்கு கருவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 19, 1996 அன்று, சிபிஐ, அப்போதைய ஆளுநர் ஏ ஆர் கித்வாயிடம் முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரியது.

இதையடுத்து, ஜூன் 1997 இல், லாலு மற்றும் சாய்பாசா வழக்கில் தொடர்புடைய 55 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஜூலை 25, 1997 இல், லாலுவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ராப்ரி முதல்வரானார்.

தீர்ப்புகள்

சாய்பாசா கருவூலத்தில் இருந்து 37.70 கோடி ரூபாய் எடுக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வர்கள் லாலு, மிஸ்ரா, அரசியல்வாதிகள் ஜெகதீஷ் சர்மா, துருவ் பகத் ஆகியோர் குற்றவாளிகள் என கருதப்பட்டது. சிபிஐ 2012ல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

விசாரணையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013இல் லாலு உட்பட 45 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

டிசம்பர் 23, 2017 அன்று, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக பணம் எடுத்ததாக இரண்டாவது வழக்கில் லாலு குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனவரி 24, 2018 அன்று மூன்றாவது வழக்கில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இது சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடிக்கு பணம் எடுத்த வழக்கு ஆகும். இதில், லாலுவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மார்ச் 2018 இல், நான்காவது வழக்கில் லாலு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடியை சட்டவிரோதமாக எடுத்த விவகாரத்தில், அவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லாலு விடுவிக்கப்பட்ட ஒரே வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மட்டும், லாலு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கால்நடைத் தீவன ஊழலின் ஒரு பகுதியாக, லாலு, ராப்ரி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.46 லட்சம் குவித்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியதையடுத்து, இருவருக்கும் எதிராக 1998 ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்தது. பின்னர், 2000 இல், சிபிஐ நீதிமன்றத்தில் இருவரும் சரணடைந்த போது, ராப்ரிக்கு ஜாமீன் கிடைத்தது. லாலு ஒரு மாதம் பாட்னாவின் பெயூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, பாட்னா நீதிமன்றம் வழங்கிய ஜாமீன், சுமார் 20 முறை நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 18, 2006 அன்று சிபிஐ நீதிமன்றம், இவ்வழக்கிலிருந்து லாலு மற்றும் ராப்ரியை விடுதலை செய்தது.

வழக்கு விசாரணையில், லாலுவின் வழக்கறிஞர், அவருக்கு பால் பண்ணை மட்டுமே தனி வருமானம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். லாலுவின் மாமானார் திருமணத்தின் போது பசுக்ககளை கொடுத்ததாகவும், இந்த பசுக்கள் காலப்போக்கில் பெருகி பால் வியாபாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lalu Prasad Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment