Advertisment

டெங்குவின் போது உருவாகும் ஆன்டிபாடிகள் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்கிறது - மருத்துவர் சொல்வது என்ன?

நான்கு வகையான டெங்கு பாதிப்புகள் உள்ளன. அதில், வகை II மற்றும் IV மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. அவர்கள், நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெங்குவின் போது உருவாகும் ஆன்டிபாடிகள் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்கிறது - மருத்துவர் சொல்வது என்ன?

ரத்த தட்டுக்கள் அதாவது பிளேட்லெட் இரத்தத்தின் முக்கிய கூறுகள். இது உடலில் சிறிய காயம் உண்டாக்கினாலும் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும் இரத்தத்தை உறைய வைக்க இவை அவசியம் தேவை. டெங்கு பாதிப்பு ஏற்படுகையில், உடலில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைய தொடங்கிவிடும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை அறிய ஃபோர்டிஸ் மருத்துவமனை டாக்டர் விகாஸ் பூதானியை அணுகினோம்.

Advertisment

டெங்கு பாதிப்பில், பிளேட்லெட் எண்ணிக்கை குறைகிறது. அதன் காரணம் என்ன?

டெங்கு பாதிப்பின் போது, பிளேட்லெட் குறைவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

  1. பிளேட்லெட் உற்பத்தி செய்யும் பகுதியான bone marrow-வை சுருங்கிடச் செய்வதால், பிளேட்லெட் எண்ணிக்கை குறைகிறது.
  2. டெங்கு பாதிப்பின் போது ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால், பிளேலெட் எண்ணிக்கை குறைகிறது.
  3. டெங்கு பாதிப்பின்போது உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள், பிளேட்லெட்டுகளை பெருமளவில் இழக்க வழிவகுக்கிறது.

உடலில் எவ்வளவு பிளேட்லெட் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

சாதாரமாக மனித உடலில், டெங்குவின் போது, பிளேட்லெட் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 4 லட்சம் இருக்க வேண்டும்.

பிளேட்லெட் குறைவதால் அதன் பாதிப்புகள் என்ன?

  • ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து ரத்தப்போக்கு
  • சிறுநீர், மலம் அல்லது வாந்தியில் ரத்தம்
  • சருமத்தின் கீழ் ரத்தப்போக்கு, இது சிராய்ப்பு போல தோன்றலாம்
  • சில சந்தர்ப்பங்களில், உடலின் உள் உறுப்பு ரத்தம் வர வாய்ப்புள்ளது.

பிளேட்லெட் தானம் எப்போது அவசியம்?

உடலில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறையும் சமயத்தில், பிளேட்லெட்கள் உடலில் செலுத்துவது அவசியமாகும். ரத்தப்போக்கு உள்ள சமயத்தில், பிளேட்லெட்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கைக்கு முன்னரே கொடுக்கலாம்.

பிளேட்லெட்டுகளை யார் தானம் செய்யலாம்? பிளேட்லெட்டுகள் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் கருத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

ரத்த வங்கியின் ஸ்கிரீனிங் செயல்முறையை முடிந்த எந்தவொரு ஆரோக்கியமான நபரும் பிளேட்லெட் மற்றும் ரத்த தானம் செய்ய தகுதியானவர் தான். பிளேட்லெட்டுகளை தானம் செய்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வழக்கமான உணவை உட்கொண்டு நிறையப் பானங்களைக் குடிக்க வேண்டும். அதே போல, குறைந்தது 72 மணிநேரங்களுக்கு ஆஸ்பிரின் போன்ற மருத்துவச் சிகிச்சை மாத்திரைகளை எடுக்கக் கூடாது.

தற்போதைய டெங்கு பாதிப்பு நிலவரம்

தற்சமயம், டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஏடிஎஸ் கொசு கடி மூலம் டெங்கு பரவுகிறது. அதன் அறிகுறிகள் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, தசை, மூட்டு வலி, தோல் வெடிப்பு ஆகியவை அடங்கும். நான்கு வகையான டெங்கு பாதிப்புகள் உள்ளன. அதில், வகை II மற்றும் IV மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. அவர்கள், நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஏடிஸ் கொசு தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இதற்கிடையில், மலேரியா, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் பருவமழை காலத்தில் பரவலாக உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment