ஆப்பிள் நிறுவனம் நடைபோடுகிறதா? தடுமாறுகிறதா?

ஸ்டீவ் ஜாப்ஸ் 2007 இல் முதல் ஐபோனை அறிவித்தபோது ஸ்மார்ட்போன் என்ற அர்த்தத்தை உருவாக்கினார். ஆரம்ப நாட்களில் இருந்தே ஆப்பிள் ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தில்....

Apple launches new iPhones : கலிஃபோர்னியாவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில், சில நாட்களுக்கு முன் ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வில்  மூன்று ஐபோன்கள், வாட்ச்கள் மற்றும் ஐபேட்கள் அறிமுகப்படுத்தியிருந்தது.  இந்த வருடாந்திர நிகழ்வில் ஸ்மார்ட்போன் சந்தை மாற்றி அமைக்கும் செய்தி இல்லை என்றாலும், ஏன்…. இந்த நிகழ்வுக்கு இவ்வளவு ஹைப் இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் ஏன் புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்துகிறது?

இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் பயனர்கள் யார்? என்று நாம் யோசிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளோம். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால் ஆப்பிள்  ஐபோன் வாங்குபவார்கள் பெரிய செல்வந்தர்களைக் காட்டிலும் அங்குள்ள மிடில் கிளாஸ் மக்களே ஆவார்கள். இவர்கள், நிறைய பணத்தை கொடுத்து  ஐபோன் வாங்காமல், மாதாந்திர  தொலைபேசி சந்தா செலுத்தி ஒரு ஐபோனை வாங்குவார்கள். எனவே, ஒவ்வொரு முறையும் அவர்கள் புதிய ஐபோனைப் பெறும்போது, ​​அவர்களின் மாதாந்திர பில் சில டாலர்களாக மட்டும்  அதிகரிக்கும். இப்படி, மாதாந்திர சந்தா செலுத்தி வாங்கும் மக்கள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கஸ்டமர்களும் ஆவார்கள்.

இந்த பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் புதிய அப்டேட்ஸ்களும், இதற்கிணையான புதிய ஸ்மார்ட்போன்களையும் கொண்டு வர வேண்டும்.  அதோடு,  நின்றுவிடாமல் அனைத்து வகையான  பயனர்களையும் பூர்த்தி செய்யும் கடமையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு உண்டு.

எனவே, இந்த ஆண்டு, ஐபோன் 11 மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டக்கூடிய பட்ஜெட் தொலைபேசியாகும், ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகியவை வசதி படைத்தவருக்கான பிரீமியம் தொலைபேசியாகும்.

ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு மிகப்பெரிய ஹைப் ?

ஸ்டீவ் ஜாப்ஸ் 2007 இல் முதல் ஐபோனை அறிவித்தபோது ஸ்மார்ட்போன் என்ற அர்த்தத்தை உருவாக்கினார். ஆரம்ப நாட்களில் இருந்தே ஆப்பிள் ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பல ஆண்டுகளாக, ஒட்டுமொத்த மொபைல் போன் துறையும், பயனர்களும் வருடாந்திர நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு அதன் தாக்கங்கள் இருந்தன.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், ஸ்மார்ட்போன் துறையில் போட்டியாளர்கள் சில அதிநவீன அம்சங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம்    குறைந்தபட்சமாவது ஆப்பிளை  வீழ்த்தியுள்ளனர் என்றே சொல்லாம்.

உதரணமாக, தற்போது வெளியிட்டுள்ள புதிய ஐபோனில் இருக்கும்  அல்ட்ரா வைட் லென்ஸ், சாம்சங், ஒன் ப்ளஸ் போன்றவற்றில் குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே இடம்பெற்றுள்ளன. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மத்த  பிராண்டுகள் ஆப்பிள் எதைத் தொடங்கும் என்பதை முன்கூட்டியே முயற்சித்து மார்கெட்டிற்கு கொண்டு வந்து விடும். ஆனால்,ஹர்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆப்பிள் போன்று ஒத்திசைக்கும் அனுபவத்தை யாராலும் வழங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே ஒவ்வொரு புதிய தொலைபேசியும் முந்தையதை விட சிறந்ததா?

ஆம் என்று சொன்னாலும், அது எந்த அளவிற்கு சிறந்தது என்பதை அளவிடுவது தான் மிகவும் கடினம். உதாரணமாக, ஆப்பிள் அதன் சக்திவாய்ந்த A13  செயலியால் இயங்கும் துல்லிய கேமரா அனுபவத்தைப் பற்றி பேசுகிறது. இதைத் தாண்டி சொல்லும்படியில் இந்த நிகழ்ச்சியில் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.

பல பயனர்களுக்கு,  வருடாந்திர நிகழ்ச்சி சற்று  குறைவான உற்சாகத்தைத் தரத் தொடங்கி விட்டன. குறைவான வாடிக்கையாளர்கள் மட்டும் தான் புதுபோனிற்கு அப்டேட் செய்தார்கள். எனவே,  “A13 பயோனிக் சிப் மற்றும் புதிய கேமராக்களுடன் பிணைக்கப்பட்டுள்ள அதன் நரம்பியல் இயந்திரம்” உண்மையில் புதிய பயனர்களை இழுகின்றதா? ஸ்மார்ட் போன் சந்தையில் வெற்றிபெறுகின்றனவா?  என்பதை நாம்  பார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வு, 5 ஜி தொழில் நுட்பத்தால் இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்றால் அது மிகையாகாது.

உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தை இப்போது எவ்வாறு செயல்படுகிறது?

கடந்த சில காலாண்டுகளில், வளர்ச்சி சொல்லும் படி இல்லை. ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டின் Q2 க்கான ஏற்றுமதி ஆண்டுக்கு 2% வீழ்ச்சியடைந்துள்ளது. முதல் இரண்டு இடங்களைக் கொண்டிருக்கும் சாம்சங் மற்றும் ஹவாய் ஆகியவை ஒற்றை இலக்கங்களில்  தான் வளர்ந்தன; மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆப்பிள் வளர்ச்சி எண்ணிக்கை 13% வீழ்ச்சியடைந்தது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியா எவ்வளவு முக்கியமானது?

கடந்த சில காலாண்டுகளில், ஆப்பிள் அதன் மிகப்பெரிய வளர்ச்சி சந்தையான சீனாவில் தனது வழியை இழந்துள்ளது. இதனால்தான் இது ஏற்கனவே ஐபோன்களின் தயாரிப்பை இந்தியாவின் பக்கம்  திருப்பியது. ஐபோன் எக்ஸ்ஆரின் விலைக் குறைப்புக்குப் பிறகு இந்தியாவில் கணிசமான வெற்றியைக் கண்டு ஆப்பிள், தற்போது  ஐபோன் 11 ஐ ரூ .64,900 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது எக்ஸ்ஆரின் ரூ .76,900 வெளியீட்டு விலையை விட மிகக் குறைவு என்பதால் இந்தியா ஸ்மார்ட் போன் சந்தையில் கணிசமான இடத்தை அடைய முடியும் .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close