ஆப்பிளின் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டில் கட்டமைக்கப்பட்ட பல கேமராக்கள் இயற்பியல் சூழலைப் படம் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில நாட்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை ரீபிளேஸ் செய்யும் எனவும் அச்சம் தெரிவிக்கிறது.
உலகளாவிய டெவலப்பர் மாநாடு
ஜூன் 5 அன்று நடைபெறும் உலகளாவிய டெவலப்பர் மாநாட்டில் (WWDC)இதை அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் iPhone மற்றும் iPad-க்கான மொபைல் இயக்க முறைமைகளுக்கான புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. அதோடு புதிய வன்பொருள் மாற்றம் இருந்தால் அதையும் காண்பிக்கும். மாநாட்டில் பல அமர்வுகள் உள்ளன, அங்கு டெவலப்பர்கள் அதன் தயாரிப்புகளுக்கான பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்க ஆப்பிள் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்த விவரங்களைப் பெறுகின்றனர்.
இந்த ஹெட்செட் என்ன?
ஆப்பிளின் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் இதுவாகும். மிக்ஸ்டு ரியாலிட்டி அல்லது எம்.ஆர் என்று அழைக்கப்படுகிறது. இது விர்சுவல் மற்றும் மெய்நிகர் உலகங்களின் கலவையை உள்ளடக்கியது. எளிமையாகச் சொன்னால், ஹெட்-மவுண்டட் டிஸ்ப்ளேயில் பார்க்கப்படும் எம்ஆர் அனுபவம் மெய்நிகர் ரியாலிட்டி (விஆர்) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) ஆகிய இரண்டின் அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது.
உண்மையான சூழல்களை முற்றிலும் மெய்நிகர் சூழலுடன் இணைப்பதே இதன் யோசனை. 1000 டாலர் மதிப்புள்ள Meta’s Quest Pro ஹெட்செட் இதே தொழில்நுட்பம் மிக்ஸ்டு ரியாலிட்டி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டிகள் அதில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்களைப் பயன்படுத்தி இயற்பியல் சூழலைப் படம் பிடிக்கும். அல்காரிதம்களுடன் இணைந்து இந்த வெளிப்படையான தொழில்நுட்பம், உலகின் ஸ்டீரியோஸ்கோபிக் காட்சியை மறுகட்டமைத்து, ஒளிபுகா திரைகளில் காண்பிக்கும்.
ஸ்டாண்ட்அலோன் ஹெட்செட்
ஆப்பிளின் விலை உயர்ந்த இந்த ஹெட்செட் 7 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நிறுவனம் ஆரம்பத்தில் சாதனத்தை எப்படிக் கற்பனை செய்தது என்பதில் இருந்து வேறுபட்டதாகக் கூறப்படுகிறது. ப்ரிஸ்கிரிப்ஷன் ஸ்பெக்ஸ் மற்றும் கூகுள் கிளாஸ்கள் போன்றவற்றைப் போலவே, நாள் முழுவதும் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட் நேர்த்தியான கண்கண்ணாடிகளுக்குப் பதிலாக, ஸ்கை கண்ணாடிகளை ஒத்திருக்கும். ஆப்பிள் ஹெட்செட் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
எனவே தற்போது சந்தையில் இருக்கும் மற்ற ஹெட்செட்களைப் போல் அல்லாமல் தனித்து இருக்கும். ஆப்பிளின் டிசைன் மற்றும் அழகியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு முழுமையான ஹெட்செட்டாக இருக்கும் ஆனால்…
ஆப்பிளின் புதிய ஹெட்செட் ஒரு தனித்த சாதனமாக இருக்கும். அதாவது அவற்றை இயக்குவதற்கு தனி பெட்டியுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. ஆப்பிளின் M2 சிப்செட் ஹெட்செட் மூலம் உங்கள் நெற்றியில் அணிந்து கொள்ளலாம், Meta’s Quest Pro மற்றும் HTC’s VR XR Elite ஆகியவையும் ஸ்டாண்ட்அலோன் ஹெட்செட் ஆகும்.
ஹெட்செட்-ல் அதிக கேமராக்கள்
ஆப்பிள் ஹெட்செட் மெட்டாவின் குவெஸ்ட் ப்ரோவைப் போலவே, வீடியோக்களுக்கு வெளிப்புற கேமராக்களைப் பயன்படுத்துகிறது. ஹெட்செட்-ல் 14 கேமராக்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது. டுதல் கேமராக்கள் பயனரின் முகத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும், இதனால் ஆப்பிளின் மெய்நிகர் அவதாரங்கள் மெய்நிகர் ரியாலிட்டி அனுபவங்களில் முகங்களையும் வாய் அசைவுகளையும் துல்லியமாகக் குறிக்கும்.
அதோடு ஆப்பிளின் ஆப்ஸ் அனைத்தும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். ஐபேட் ஆப்ஸ்களான புத்தகங்கள், பேஸ்டைம், மேப்ஸ் என அனைத்தும் விர்சுவல் ரியாலிட்டியில் காணலாம்.
விலை
ஆப்பிள் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் 3000 டாலருக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டாவின் பிரீமியம்-எண்ட் குவெஸ்ட் ப்ரோ ஹெட்செட்டின் விலையை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் 7 ஆண்டுகள் உற்பத்தி. அதிக உற்பத்திச் செலவுகள் மற்றும் R&D-ல் முதலீடு செய்ததன் காரணமாக விலை உயர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“