பிரபஞ்சத்தில் உண்மையில் நிறைய உலகங்கள் இருக்கிறதா?

குவாண்டம் இயக்கவியல் தொடர்பாக கருத்துக்கள் சமீபத்திய காலமாக அதிகம் பேசப்படுவதற்கு, மார்வெல் சினிமா யுனிவர்ஸ் மற்றும் கூகுலுக்கு நன்றி. பல மார்வெல் படங்களின் கதைக்களங்கள் பல உலகங்கள் இருப்பது போன்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளன. ஒரு உலகத்தில் பல சம்பவங்கள் அந்தந்த நேரத்தில் நடப்பது சாத்தியம் என்றால், அந்த சம்பவங்கள்…

By: Published: November 8, 2019, 4:49:41 PM

குவாண்டம் இயக்கவியல் தொடர்பாக கருத்துக்கள் சமீபத்திய காலமாக அதிகம் பேசப்படுவதற்கு, மார்வெல் சினிமா யுனிவர்ஸ் மற்றும் கூகுலுக்கு நன்றி.

பல மார்வெல் படங்களின் கதைக்களங்கள் பல உலகங்கள் இருப்பது போன்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளன. ஒரு உலகத்தில் பல சம்பவங்கள் அந்தந்த நேரத்தில் நடப்பது சாத்தியம் என்றால், அந்த சம்பவங்கள் அனைத்தும் தனியொரு காலநேரத்திலும் (வெவ்வேறு உலகத்திலும்) நடக்கும் என்பதும் சாத்தியமே – புரியும்படி சொல்ல வேண்டுமெனில் , ஒரே நேரத்தில் பல உலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தான்.

குவாண்டம் கம்ப்யூட்டிங், ஒரு சிறிய தகவல் ஒரே நேரத்தில் 0 மற்றும் 1 என்று கூட இருக்க முடியும் என்ற கொள்கையிலும், எண்ணற்ற கூற்றுகளின் வாய்ப்புகளாகவும் செயல்படுகிறது. விஞ்ஞானிகளுக்கு கூட இது மிகவும் வித்தியாசமாக தோன்றும், அவர்களில் பலர் இந்த நிகழ்தகவுகளின் கணிதத்தை செய்வதில் தங்களை சுருக்கிக் கொள்கிறர்கள்.

கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இயற்பியலாளரான சீன் கரோல் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Something Deeply Hidden: Quantum Worlds and the Emergence of Spacetime என்ற அந்த புத்தகத்தில், ‘இப்போது பல சாத்தியமான முடிவுகளை நீங்கள் அளவீடு செய்வீர்கள் என்றால், பல பிரபஞ்சங்கள் இங்கு உள்ளன என்று பொருள்’ என்கிறார்.

அதாவது, “பிரபஞ்சத்தில் நம்மில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பல பல சீன் கரோல்கள் உள்ளனர்” என்கிறார். அவர் அந்த புத்தகத்தில் இவ்வாறாக தனது யோசனையை முன் வைக்கிறார்.

“குவாண்டம் புத்தகங்களில் ​​கரோலின் புத்தகம் விதிவிலக்கானது, தெளிவானது, உரையாடல் மற்றும் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. மொழி சாமர்த்தியம் அவரிடம் உள்ளது, இது சில உயர் தொழில்நுட்பக் கருத்துக்களை இலகுவாக மாற்ற உதவுகிறது. சமீபத்திய பெரிய ஆராய்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட அந்த புத்தகத்தில், ஆழமாக ‘பல உலகங்கங்கள்’ எனும் பார்வையை அவர் மிகவும் வெளிப்படையாகவும் கூர்மையாகவும் முன் வைக்கிறார்” என்று அறிவியல் தொடர்பான செய்திகள் குறிப்பிடுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Are there really many worlds sean carroll something deeply hidden

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X