Advertisment

தீவிர கொரோனா நோயாளிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?

கோவிட்- 19 நோயில் கடுமையாக பாதிப்படைந்து, மரணத்தின் விழும்பில் நிறுக்கும் நமது குடும்ப உறுப்பினரின் கைகளைப் பிடிப்பதற்கோ (அ) அவர்களைக் கட்டிப்பிடிப்பதற்கோ வழி இல்லாமல் இருக்கலாம்

author-image
WebDesk
Apr 15, 2020 17:32 IST
தீவிர கொரோனா நோயாளிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கோவிட் -19 நோயாளிகளின் பார்வையாளர்களை  எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் என்று எதுவும் இல்லை.

Advertisment

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (NEJM) சமீபத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில்,"கோவிட்-19  பெருந்தொற்றின் ஒரு குறிப்பிட்ட கடினமான அம்சம் என்னவென்றால், மோசமாக பாதிக்கப்பட்ட நமது குடும்ப உறுப்பினரை,  மருத்துவமனையில் பார்வையாளராக சந்திக்கும் வாய்ப்பை, இந்த தொற்று முற்றிலும் வழங்குவது கிடையாது" என்று கூறயிருந்தனர்.

பார்வையாளர்கள் ஏன் கோவிட் -19 நோயாளிகளை அணுக முடியாது? ஒரு கோவிட்- 19 வார்டுக்குள் வருகை தருவது நிச்சயமாக அவர்களின் தொற்று எற்படுவதர்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது வெளிப்படையான, தெளிவான பதில்.

உலகளவில் ஏற்கனவே தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ)பற்றாக்குறையில் இருப்பதாகவும், பார்வையாளராக வரும் குடும்ப உறுப்பினர்களும் இதை பயன்படுத்த அனுமதித்தால், கையில் இருக்கும் சாதனங்களுக்கு மேலும் கட்டுப்பாடு ஏற்படும் என்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஇ சாதனங்களை எவ்வாறு உடுத்துவது/ கழட்டுவது என்பது குறித்து ஒவ்வொரு பார்வையாளர்களுக்கு, சுகாதாரப் பணியாளர்கள்/மருத்துவர்கள்  விளக்கமாக  விவரிக்க வேண்டும். ஏற்கனவே, அழுத்தத்தில் இருக்கும் பணியாளருக்கு இது கூடுதல் சுமையை உண்டாக்கும்.

மருத்துவமனையில் தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகள்,  தங்கள் குடும்பங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தலாம் . நோயாளியை நோக்கி  ஒரு டேப்லெட் கணினியை அமைப்பது ஒரு தீர்வாக இருக்கும்" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கோவிட்- 19 நோயில் கடுமையாக பாதிப்படைந்து, மரணத்தின் விழும்பில் நிறுக்கும் நமது குடும்ப உறுப்பினரின் கைகளைப் பிடிப்பதற்கோ (அ) அவர்களைக் கட்டிப்பிடிப்பதற்கோ வழி இல்லாமல் இருக்கலாம். ஆனால், முன்னாடி நின்று போராடும் சுகாதாரப் பணியாளர்களின் கவனிப்பும், இரக்கமும்  அனைத்து வகையான தொடர்புகளுக்கும் ஒரு தீர்வாய் அமையும்,” என்றும் கூறுகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவில், பார்வையாளர்களை  அனுமதிப்பது  நோய்தொற்றை  பரப்புவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும், எனவே, அனைத்து வருகைகளும் தடைசெய்யப்பட வேண்டும் (அ) கட்டுப்படுத்த வேண்டும் என்றும் 'தி லான்செட்'  இதழின் கட்டுரை தெரிவிக்கின்றது. நோயாளிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்புக்கு காணொலி காட்சி வசதியை  பயன்படுத்தவும் இது பரிந்துரைக்கிறது.

இந்தியாவில், அரசு மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைப் பிரிவில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொதுவாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும், கோவிட் -19 நோயாளி இருக்கும் அறைக்குள் நுழைய வேண்டும் என்றால், பார்வையாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கட்டாயம் வழங்கப்படவேண்டும். அதை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் மேற்பார்வையில் தான் பார்வையாளர்கள் செயல்பட வேண்டும்.

நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை,அதன் இணையதளத்தில், "இக்கட்டான தவிர்க்கமுடியாதசூழலில் தற்காலிக வருகை அனுமதிக்கப்படலாம் என்று கூறுகிறது. இருப்பினும், நோய்வாய்ப்பட்ட (அ) இருமல் போன்ற  அறிகுறிகளைக் காண்பிக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, எந்தவொரு பார்வையாளர்களும்  அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கிறது. இருப்பினும், தீவிரமாக  வாழ்நாள் முடிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, இரக்க சிந்தனை காரணமாக  பார்வையாளர்களை அனுமதிக்க நாங்கள் கருதுவோம்.”என்று தெரிவிக்கின்றது.

#Corona Virus #Corona #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment