Assam culture , india citizenship bill 2019,assam protest aginst CAB bill, assam autonomous District council , manipur inner line permit
குடியுரிமை சட்ட திருத்தம், 2019 மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில், குறிப்பிடும் படியாக அசாமில் மிகவும் தீவிரமாகவும், நீடித்ததாகவும், பரவலாகவும் இருந்து வருகிறது.
Advertisment
மற்ற வடகிழக்கு மாநிலங்களின் பரவலான பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அந்த மாநிலங்களிலும் சில ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறி வருகின்றன. மறுபுறம், அசாமின் பெரும்பகுதி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் கீழ் வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களும் குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவும்:
குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று இன்னர் லைன் பெர்மிட் மூலம் பாதுகாக்கப்பட்ட மாநிலங்கள், மற்றொன்று அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள்.
இன்னர் லைன் பெர்மிட் (ஐ.எல்.பி): ஒரு மாநிலம் இன்னர் லைன் பெர்மிட் வரையறைக்குள் இயக்குகின்றது என்றால், மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்கள் அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்கு செல்லும் போது, நுழைவு அனுமதிப் படிவத்தை வாங்கிய பின்பு தான் நுழைய முடியும். அந்தந்த மாநில அரசாங்கம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நுழைவு அனுமதியை வழங்குவர்.
ஆறாவது அட்டவணை: இந்த மாநிலங்களில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரங்களையும் வழங்குகிறது.தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் நோக்கம் பழங்குடி சமூகங்களின் சுயராஜ்யத்தை உயர்த்துவதாகும். இந்த, கவுன்சில் தனக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள், எண்ணற்ற விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளன.
குடியுரிமை சட்டம் திருத்தம் மசோதாவும், வடகிழக்கு மாநிலமும் :
அசாம்: மாநிலத்தில் மூன்று தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. அவற்றில் (கப்ரி அங்லோங், டிமா ஹசோ) இரண்டு புவியியல் ரீதியாக தொடர்ச்சியானவை. இந்த மாவட்ட கவுன்சில்கள் பாதுகாக்கப்பட்டாலும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, அசாமில் பற்ற பகுதிகளில் செயல்படும்.
மேகாலயா: இந்த மாநிலத்திலும் மூன்று தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. எவ்வாறாயினும், அசாமில் போலல்லாமல், மேகாலயாவில் உள்ள தன்னாட்சிக் கவுன்சில்கள் கிட்டத்தட்ட முழு மாநிலத்தையும் உள்ளடக்குகிறது. ஷில்லாங்கின் ஒரு சிறிய பகுதி மட்டும் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலுக்குள் இடம்பெறாமல் இருக்கின்றன. எனவே, ஷில்லாங்கின் அந்த பகுதியில் மட்டும், தற்போதைய சட்ட மசோதா பயனுள்ளதாக இருக்கும். மாநிலத்தின் மீதமுள்ள பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
திரிபுரா: இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு தன்னாட்சி மாவட்ட கவுன்சில் உள்ளது, இருந்தாலும், அது மாநிலத்தின் 70% பரப்பளவை உள்ளடக்கியது. ஆனால், மீதமுள்ள 30% நிலபரப்பில் தான் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட மக்கள் வசித்து வருகின்றார். எனவே அந்த சிறிய நிலபரப்பில் வாழும் அதிக அடர்த்தியான மக்கள் வாழும் பகுதிகளில் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல் படுத்தப்படும்.
அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இன்னர் லைன் பெர்மிட் வரையறைக்குள் வருவதால், ஒட்டு மொத்த மாநிலத்துக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நாகாலாந்து: இன்னர் லைன் பெர்மிட் மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருப்பதால் நாகலாந்து மாநிலம் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வெளியில் தான் உள்ளது.
( குறிப்பு: நாகாலாந்தின் திமாபூர் நகரம் இன்னர் லைன் பெர்மிட் இருந்து வந்தது. ஆனால், தற்போது திமாபூர் நகரமும் இன்னர் லைன் பெர்மிட்டுக்குள் வந்துவிட்டது)
மிசோரம்: இன்னர் லைன் பெர்மிட்டின் கீழ் மிசோரம் மாநிலம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா செல்லுபடியாகது. கூடுதலாக, மாநிலத்தில் மூன்று மூன்று தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. அவை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழும் பாதுகாக்கப்படுகின்றன.
மணிப்பூர்: இந்த மசோதா நிறைவேதுவதற்கு முன்பு, உண்மையாக சொன்னால் மணிப்பூரில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களும் இல்லை, இன்னார் லைன் பெர்மிட் வரையறையும் இல்லை.
ஆனால், தற்போது குடியுரிமை சட்டம் திருத்தம் மசோதாவிற்காக இன்னார் லைன் பெர்மிட் வரையறை மணிப்பூர் முழுவதும் செயலாக்கப்படுள்ளது. இதனால், ஒட்டு மொத்த மாநிலமும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலக்கு பெரும்.