Advertisment

சட்டப்பிரிவு 370 ரத்து: உச்ச நீதிமன்றம் நம்பியிருந்த எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பு என்ன?

குடியரசுத் தலைவர் ஆட்சியை எப்போது, எப்படி விதிக்கலாம் என்பதற்கான சட்டமாக பொம்மை வழக்கின் தீர்ப்பு இன்னும் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Article 370 JK.

What was the SR Bommai judgment, which the SC relied on in its Article 370 ruling?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்வதில், உச்ச நீதிமன்றம், 1994 ஆம் ஆண்டு, எஸ்ஆர் பொம்மை எதிராக இந்திய யூனியன் வழக்கில் (SR Bommai v Union of India) அதன் முக்கிய தீர்ப்பை பெரிதும் நம்பியுள்ளது.

Advertisment

இந்த என்ன வழக்கு, இது ஜம்மு காஷ்மீருடன் எவ்வாறு தொடர்புடையது?

வழக்கு                                                                       

கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துவதற்கான வரையறைகளை வரையறுக்க அரசியலமைப்பின் 356 வது பிரிவுக்கு விளக்கம் அளித்தது. 356வது பிரிவு "மாநிலங்களில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியுற்றால்" குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உட்பட விதிகளைக் கொண்டுள்ளது.

ஒன்பது நீதிபதிகளும் ஏகமனதாக இதை உறுதி செய்த நிலையில், ஜனாதிபதியின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை எப்போது, ​​எப்படி விதிக்கலாம் என்பதற்கான சட்டமாக பொம்மை வழக்கின் தீர்ப்பு இன்னும் இருக்கிறது.

CM Bommai
Former Karnataka CM Bommai. (Archive)

பின்னணி

1989-ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, ஜனதா தளம் தலைமையிலான கர்நாடக அரசை ஜனாதிபதி ஆட்சியை விதித்து டிஸ்மிஸ் செய்தது.

முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக எம்எல்ஏக்களிடம் இருந்து 19 கடிதங்கள் வந்ததையடுத்து, அப்போதைய கர்நாடக ஆளுநர் பி வெங்கடசுப்பையா, மாநில நிர்வாகத்தை பொறுப்பேற்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

அவர் இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டார். முதலாவதாக, பொம்மை பெரும்பான்மையைப் பெறவில்லை, எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் தொடர முடியாது. இரண்டாவது, வேறு எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை.

இருப்பினும், இந்த நடவடிக்கை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. குடியரசுத் தலைவரிடம் அறிக்கை அளிக்கும் முன், ’பொம்மையின் பார்வையை ஆளுநர் உறுதிப்படுத்தவில்லை’, என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு பின்னர்  குறிப்பிடுகிறது.

உண்மையில், பொம்மையின் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதாகக் கூறப்படும் 19 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர், மேற்கூறிய கடிதங்களில் தங்களின் கையொப்பம் தவறாகக் குறிப்பிடப்பட்டதாகப் புகார் கூறி, விரைவில் யூ-டர்ன் எடுத்தார்கள்.

இதனால், பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல்வர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார், அது மத்திய அரசுக்கு எதிரான அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

தீர்ப்பு

ஜனாதிபதியின் பிரகடனம்- சட்டவிரோதம், தவறான, புறம்பான கருத்துக்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது மோசடி ஆகியவற்றின் அடிப்படையில் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒருமனதாகக் கூறியது.

இந்த பிரச்சினையில் ஜனாதிபதியின் மதிப்பீட்டை ஆராய முடியாது என்றாலும், முடிவெடுப்பதற்கு நம்பியிருக்கும் பொருளை மறுபரிசீலனை செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பிரகடனத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்த பின்னரே குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அதுவரை குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்தை மட்டுமே முடக்க முடியும். இரண்டு மாதங்களுக்குள் பிரகடனத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை என்றால், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசாங்கம் தானாகவே புத்துயிர் பெறும்.

இந்த தீர்ப்பு மத்திய-மாநில உறவுகளுக்கு சிவப்புக் கோடு போட்டது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவதால், மாநிலங்கள் வெறும் மையத்தின் பிற்சேர்க்கைகள் என்று அர்த்தமல்ல, என்று நீதிபதி ஜீவன் ரெட்டி எழுதினார்.

மேலும் குறிப்பாக, நீதிமன்றங்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை குறைக்கும் விளைவைக் கொண்ட அல்லது விளைவை ஏற்படுத்தும் ஒரு அணுகுமுறையை, விளக்கத்தை ஏற்கக் கூடாது, என்று அவர் எழுதினார்.

ஆளுநர் அலுவலகத்தின் நடத்தையை ஆய்வு செய்த  உச்ச நீதிமன்றத்தின் முதல் தீர்ப்புகளில் ஒன்றான பொம்மை தீர்ப்பு, எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் மாநில அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதி ஆட்சி அடிக்கடி விதிக்கப்பட்ட நேரத்தில் வந்தது.

அலோக் பிரசன்னா குமார் (Senior Resident Fellow at Vidhi Karnataka) மேற்கொண்ட ஆய்வின்படி, பொம்மை தீர்ப்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது வெகுவாகக் குறைந்துள்ளது.

ஜனவரி 1950 மற்றும் மார்ச் 1994 க்கு இடையில், ஜனாதிபதி ஆட்சி 100 முறை அல்லது ஆண்டுக்கு சராசரியாக 2.5 முறை விதிக்கப்பட்டது. 1995 மற்றும் 2021 க்கு இடையில், இது 29 முறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் ரெஃபரென்ஸ்

காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தபோது 370வது சட்டப்பிரிவை ரத்து செய்திருக்க முடியுமா என்பது ஒரு முக்கிய கேள்வி.

முந்தைய மாநிலம் 2018 முதல் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இருந்தது, மேலும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க முடியுமா என்பது நீதிமன்றத்தின் முன் கேள்வியாக இருந்தது.

இங்கு, குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் பொம்மை தீர்ப்பை நம்பியுள்ளது. பிரகடனத்தை வெளியிட்ட பிறகு குடியரசுத் தலைவர் எடுக்கும் நடவடிக்கைகள் நீதித்துறை மறுபரிசீலனைக்கு உட்பட்டது என்று பொம்மை தீர்ப்பு கூறியது, ஆனால் நிர்வாக உத்தரவுகளின் செல்லுபடியை சோதிக்க நீதிபதிகள் பல்வேறு தரங்களை ஏற்றுக்கொண்டனர்.

நீதிமன்றம் இரண்டு நிலைகளை மேற்கோள் காட்டியது - ஒன்று நீதிபதி பிபி சாவந்த், மற்றொன்று நீதிபதி ரெட்டி.

நீதிபதி சாவந்த், அதிகாரத்தைப் பயன்படுத்துவது தவறானதா அல்லது பகுத்தறிவற்றதா என்ற நிலையை அமைத்தார், அதே நேரத்தில் நீதிபதி ரெட்டி, நடவடிக்கையின் ஆலோசனை மற்றும் அவசியத்தை ஜனாதிபதி மனதில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Read in English: What was the SR Bommai judgment, which the SC relied on in its Article 370 ruling?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment