Advertisment

சட்டப் பிரிவு 370 ரத்து செல்லும்: 3 முக்கிய கேள்விகள்; அரசாங்கத்திற்கு ஆதரவாக வந்த உச்ச நீதிமன்ற பதில்கள்

இந்திய யூனியனுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மீருக்கு தனி இறையாண்மை இல்லை என்றும், 370வது சட்டப்பிரிவு தற்காலிகமானது மற்றும் மாற்றக் கூடிய விதி என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
CJI 370.jpg

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370-கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்ததஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று(டிச.11) 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக தீர்ப்பளித்தது.

Advertisment

இந்திய தலைமை நீதிபதி (CJI) டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இருவரும் இரண்டு தனித்தனி ஆனால் இணக்கமான கருத்துக்களை தெரிவித்தனர். மனுக்களில் கூறப்பட்ட 3 முக்கிய  விஷயங்களில்  உச்ச நீதிமன்றம் பதிலளித்தது. 

1.  ஜம்மு காஷ்மீரின் ‘தனித்துவம்’ மற்றும் ‘சிறப்பு அந்தஸ்து’

1947-ல் இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஜம்மு காஷ்மீர் இறையாண்மையின் எந்தவொரு கூறுகளையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று எஸ்.சி கூறியது.

சமஸ்தானத்தின் முன்னாள் ஆட்சியாளரான மகாராஜா ஹரி சிங் தனது இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்வதாக ஒரு பிரகடனத்தை வெளியிட்டாலும், அவருக்குப் பின் வந்த கரண் சிங் மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து சட்டங்களையும் விட இந்திய அரசியலமைப்பு மேலோங்கும் என்று மற்றொரு பிரகடனத்தை வெளியிட்டார் என்று நீதிமன்றம் கூறியது.

இது சாராம்சத்தில், இந்தியாவுடன் இணைந்த மற்ற எல்லா சமஸ்தானங்களையும் போலவே இணைப்பின் விளைவைக் கொண்டிருந்தது, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது என்று நீதிமன்றம் உறுதியாகக் கூறியது. தலைமை நீதிபதி சந்திரசூட் இந்திய அரசியலமைப்பின் 1 மற்றும் 370-க்கு அப்பால் ஜே & கே அரசியலமைப்பின் பிரிவு 3-ஐ மேற்கோள் காட்டினார்.

ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பின் 3-வது பிரிவு: "ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்." இந்த விதியை திருத்த முடியாது என்று மாநில அரசமைப்புச் சட்டமும் கூறியுள்ளது என்றார். 

நீதிபதி கவுல் கூறுகையில், அதன் சொந்த அரசியலமைப்பைக் கொண்ட ஒரே மாநிலம் என்பதும் சிறப்பு அந்தஸ்தை வரையறுக்காது என்று கூறினார். "ஜே & கே அரசியலமைப்பின் நோக்கம் மாநிலத்தில் தினசரி நிர்வாகத்தை உறுதி செய்வதாகும், மேலும் 370 வது பிரிவின் நோக்கம் மாநிலத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதாகும்" என்று அவர் கூறினார்.

2. சட்டப் பிரிவு 370  ‘தற்காலிகமானதா’ அல்லது அரசியலமைப்பின் நிரந்தர விதியா?

370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது, அது நிரந்தரமானது அல்ல மற்றும் திருத்தக் கூடிய விதி என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

சந்திரசூட் ஒரு உரை எடுத்துக் காட்டை கூறினார். வரலாற்று சூழலின் ஆதாரத்தை மேற்கோள் காட்டினார். மேலும், இந்த சட்டப் பிரிவு 1947-ல் மாநிலத்தில் நிலவிய போர் போன்ற சூழ்நிலை காரணமாக வழங்கப்பட்ட "தற்காலிக" விதி  என்றும்  அவர் கூறினார்.

3. சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான கேள்விகள்

ஆகஸ்ட் 2019-ல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் இரண்டு அறிவிப்புகளையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

பெரிய கூட்டாட்சி பிரச்சினைகள் மற்றும் ஜே & கே சிறப்பு அந்தஸ்து பற்றிய விவாதம் தவிர, முக்கிய சட்ட சவால் 2019 இல் இரண்டு ஜனாதிபதி பிரகடனங்கள் ஆகும், இது 370-வது பிரிவை ரத்து செய்தது.

"ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு சட்ட மன்றம்" என்பதற்கு பதில் "ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்ட மன்றம்" என்று ஒரு புதிய அர்த்தம் கொடுத்தது உட்பட இரண்டு பிரகடனங்களையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது யூனியன் மாநிலத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதுதான் மையப் பிரச்சினை. இங்கு, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் வரம்புகளைக் கையாண்ட ‘எஸ்.ஆர் பொம்மை Vs  யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற 1994 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறுகையில், ஆளுநர் (ஜே & கே வழக்கில் ஜனாதிபதி) மாநில சட்டமன்றத்தின் "அனைத்து அல்லது ஏதேனும்" பாத்திரங்களை ஏற்க முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை அசாதாரணமான வழக்குகளில் மட்டுமே நீதித்துறை ரீதியாக சோதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-law/article-370-abrogation-upheld-supreme-court-explained-9063145/

பொம்மையின் தீர்ப்பை குறிப்பிட்டு பேசிய உச்ச நீதிமன்றம், "ஜனாதிபதியின் உத்தரவு தவறானது அல்லது அதிகாரத்திற்கு புறம்பானது என்பதற்கு எவ்வித முகாந்தரமும் இல்லை" என்று கூறியது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

.

 

Jammu And Kashmir Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment