சண்டிகரின் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் 2021ம் ஆண்டில் நடக்கும் சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் தேர்வு திட்டத்தில்( PISA test ) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், நாம் அந்த தேர்வின் முக்கியத்துவத்தை நாமும் அறிந்து கொள்ள வேண்டும் .
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (ஓ.இ.சி.டி) துவக்கப்பட்டது இந்த சர்வதேச மாணவர் மதிப்பீட்டு தேர்வு திட்டம் (பிசா). இந்த அமைப்பு 36 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பாகம்.
இந்த பிசா தேர்வுமுறை உலக நாடுகளுக்கிடையே இருக்கும் கல்வி கொள்கை, கல்வித் தரம் போன்றவைகளை ஒப்பிடக்கூடிய தரவுகளை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வாகும்.
ஒரு நாட்டில் கல்வித்தரம், அந்த நாட்டிலுள்ள பள்ளி அமைப்புகள் போன்றவைகளை மதிப்பீடு செய்யும் வகையில் அந்த நாட்டில் உள்ள 15 வயது சிறுவர்களின் அறிவு நுணுக்கங்களை சோதனை நடத்துகிறது. 2000ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த சர்வதேச மாணவர் தேர்வு, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் ஓ.இ.சி.டி உறுப்பு நாடுகளும், உறுப்பினர் இல்லாத நாடுகளும் கலந்து கொள்வது வழக்கம். அடுத்ததாக 2021ல் நடைபெறும் இந்த சர்வதேச மாணவர் சோதனை தேர்வில், சண்டிகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
சர்வதேச மாணவர் சோதனை யாரால் நடத்தப்படுகிறது?
உலகெங்கிலும் உள்ள கல்வி வல்லுநர்களால் இந்த சர்வேதச மாணவர் சோதனைக்கான கேள்விகள் தயாரிக்கப்படுகின்ன்றன. தற்போது வரை, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் கல்வி வல்லுநர்கள் சோதனை கேள்விகளை உருவாக்குவதற்கு பங்களித்திருக்கின்றனர்.
சோதனை எவ்வாறு இருக்கும் ?
நமது பள்ளிகளில் நடக்கும் வழக்கமான தேர்வுகள் மாணவர்களின் ஞாபக திறனை மதிப்பீடு செய்வது இயல்பு. பிசா தேர்வில், மாறாக மாணவர்கள் தங்கள் முதன்மை/ இடைநிலைக் கல்வியில் பெற்ற அறிவைப் பயன்படுத்துகிறார்களா ? கல்வியறிவி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளனவா ? போன்றவைகளை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறது.
கணிதம், வாசித்து புரிந்துக் கொள்ளும் திறன், அறிவியல் போன்றவைகளில் இருந்து சோதனைக் கேள்விகள் எழுப்பப்படும். இருந்தாலும், 2015ம் ஆண்டில் இருந்து நிதி கல்வியறிவு, கூட்டுமுயற்சியோடு சிக்கலை தீர்க்கும் திறன் போன்ற விருப்ப படங்களையும் இந்த பிசா தேர்வு உள்ளடக்குகிறது. மாணவர்களுக்கு புரிந்துள்ள மொழியில் கேள்விகள் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தேர்வில் கலந்து கொள்கிறார்கள் ?
இந்த தேர்வில் கலந்து கொள்ள யாரால் முடியும், யாரால் முடியாது போன்ற உறுதியான வரைமுறைகள் எதுவும் கிடையாது. எந்த வற்புறுத்தலும் இல்லாமல், நாடுகள் தானாக முன்வந்து இந்த சோதனையில் கலந்து கொள்கின்றன. மேலும், கலந்து கொள்ளும் நாட்டிலுள்ள அனைத்து 15 வயது சிறுவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், நாட்டிலுள்ள சில பிராந்தியங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதற்குள் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள், பிசா நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்படுகின்றது . தேர்ந்தெடுக்கப்படும் இந்த பள்ளிகள் அந்த நாட்டின் பிரதிநிதியாக கருதப்படும்.
பிசா தேர்வின் அடிப்படை நோக்கம் என்ன?
மதிப்பீட்டில் பங்கேற்ற நாடுகளை ஒன்று/ரெண்டு/மூன்று என்று வரிசை படுத்துவது இதன் நோக்கமல்ல. மாறாக உயர்க் கல்வி, அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போதைய இடைநிலைக் கல்வி முறைகள் இருக்கின்றனவா? என்பதைப் பற்றிய விரிவான பகுப்பாய்வை அளிப்பதே இதன் நோக்கமாகும்.
உலகெங்கிலும் இருந்து முடிவுகளை சேகரித்த பிறகு, வல்லுநர்கள் இந்த முடிவுகளை டேட்டா புள்ளிகளாக மொழிபெயர்க்கிறார்கள். அதன் மூலம் நாடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
உள்ளார்ந்த மேம்பட்ட கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி முறை கொண்ட நாடுகள், பெரும்பாலும் இந்த மதிப்பீட்டில் முதன்மையாக விளங்கும்.
கடந்த காலங்களில் இந்த பிசா தேர்வில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது?
இந்தியா இந்த பிசா சோதனையில் ஒருமுறை மட்டுமே கலந்து கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் நடந்தப்பட்ட சோதனையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். 73 நாடுகள் கலந்து கொண்ட இந்த சோதனை முடிவில் இந்தியா 72வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிடைசி இடத்தில் கிர்கிஸ்தான்.
அதன் பிறகு, இந்திய அரசாங்கம் 2012,2015,2018 ஆண்டில் நடத்தப்பட்ட பிசா சோதனையில் கலந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்தது. தற்போது, 2021ல் நடக்கும் பிசா சோதனையில் இந்தியா மீண்டும் பங்கு கொள்ள முடிவு செய்துள்ளதால், சண்டிகர் அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.75 லட்சம் மாணவர்களும், நவோதயா வித்யாலயா பள்ளியில் இருந்து 600 மாணவர்களும், கேந்திர வித்யாலயாவில் இருந்து 3000 மாணவர்களும் பங்கு கொள்ளவிருக்கின்றனர்.
சண்டிகர் இதற்கு எவ்வாறு தயாராகியுள்ளது:
பங்கேற்கும் பள்ளிகளில் பிசா அதிகாரிகளின் குழு, அடுத்த ஆண்டில் சோதனை நடத்தும் என்பதால், பிசா தேர்வுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2009 பிசா தேர்வில் கணித பிரிவில் மாணவர்கள் மோசமாக செயல்பட்டதை என்.சி.ஆர்.டி.யின் அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர்.
இதன் விளைவாக, 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூடுதல் கணித தலைப்புகளை சேர்க்கப்போவதாக யூனியன் பிரதேச நிர்வாகம் ஏப்ரல் 2019ல் அறிவித்தது.
பிசா தேர்வுக்கு இது தான் பாடத்திட்டம் என்று எதுவும் இல்லாததால், சோதனைக்கு முழுமையாகத் தயாராக இருப்பது கடினம் கல்வி நிர்வாகமும் உணர்ந்திருக்கிறது. இருந்தாலும், மாணவர்கள் பயிற்சி செய்வதற்கும் தங்களைத் தானாகவே தயார்படுத்துவதற்கும் தேவையான மாதிரி கேள்விகள் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற, சண்டிகர் நிர்வாகத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் பி.எல் சர்மா, இது குறித்து கூறுகையில், பிசாவு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.